கூந்தலுக்கு கலர் செய்ய கசக்குமா என்ன… புதுப் புது லுக் வேண்டும் அல்லவா. அதற்கு கலர் செய்வது மிக துரிதமான வழி. சூப்பர் ஸ்டைல் மட்டும் அல்லாமல் அந்தந்த பருவத்தின் டிரென்ட் என்னவோ அதற்கேற்ப மாறவும் முடியும். கேட்க ஜாலியாக இருந்தாலும் கலர் ட்ரீட்மென்ட் செய்த முடி டல்லாக, வறண்டு போவது பொதுவான பிரச்சனை.

நீங்களும் இந்தப் பிரச்சனையுடன் போராடியிருப்பீர்கள். அப்படியென்றால் அதற்கான ஈஸி தீர்வைத் தரும் ஹேர் சீரம்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். ஆனால் ஹேர் சீரம் பலன் தர வேண்டும் என்றால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். கலர் ட்ரீட்மென்ட் செய்த கூந்தலுக்கான ஹேர் சீரம் டிப்ஸ் இதோ…

 

01. சரியான சீரம்

சரியான சீரம்

கலர் ட்ரீட்மென்ட் செய்த கூந்தலுக்கு தனியாக ஷாம்பூ, கண்டிஷனர் பயன்படுத்துகிறீர்கள் அல்லவா… அதே போல சரியான சீரம் பயன்படுத்த வேண்டும். சீரம் லேபிள் படிக்க மறக்காதீர்கள். அது கலர் ட்ரீட்மென்ட் செய்த கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

02. உட்பொருட்களை பாருங்கள்

உட்பொருட்களை பாருங்கள்

உட்பொருட்கள் என்ன இருக்கிறது என்று கவனமாகப் படித்த பிறகே சீரம் வாங்க வேண்டும். பெரும்பாலான சீரம்களில் சிலிகான் பிரதான உட்பொருளாக இருக்கும். கூந்தல் மின்னுவதற்கும் சிக்கு விழாமலிருப்பதற்கும் சிலிகான் உதவும். ஆனால் கலர் ட்ரீட்மென்ட் செய்த முடிக்கு அது போதாது. ஏனென்றால் இத்தகைய முடி அதிகம் வறண்டுவிடும். அதனால் நீர்ச் சத்து கொடுக்கும் ஆயில், மாய்ஸ்சுரைஸர் உட்பொருட்கள் கொண்ட சீரம்களையே வாங்கவும். இது நீர்ச் சத்தை பாதுகாக்கும், முனைகள் பொலிவு இழக்காமல் தடுக்கும்.

 

03. க்ரீம் ஃபார்முலா

க்ரீம் ஃபார்முலா

நேச்சரலான கூந்தலை ப்ளீச் செய்திருந்தால் கலர் ட்ரீட்மென்ட் செய்த பிறகு கூந்தல் டல்லாக இருக்கும், வறண்டு போய் காட்சியளிக்கும். இது முடி முனை உடைவதற்கும் காரணமாக இருக்கும். க்ரீம் ஃபார்முலா கொண்ட சீரம் பயன்படுத்துவது மூலம் இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம். ஜெல் கொண்ட சீரம் போல் அல்லாமல் கூந்தலின் நீர்ச் சத்தை பாதுகாக்க க்ரீம் கொண்ட சீரம் உதவும். எவ்வளவுக்கு எவ்வளவு க்ரீம் அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. சூப்பரான, மின்னும் கூந்தலை நொடியில் பெற இது சிறந்த வழி.

 

04. சரியான அளவு

சரியான அளவு

என்ன சீரம் வேண்டுமானால் பயன்படுத்தலாம். ஆனால் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முடியின் வேர்களில் உள்ள பிசுபிசுப்பு போய்விடும். வேர்களின் மீது அழுத்தம் ஏற்படும். கூந்தலின் நீளத்தைப் பொருத்த சரியான அளவில் சீரம் பயன்படுத்த வேண்டும். நடுத்தரமான அல்லது நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று துளி சீரம் போதுமானது.

 

05. முனைகளில் மட்டுமே பயன்படுத்தவும்

முனைகளில் மட்டுமே பயன்படுத்தவும்

உங்களின் சீரம் மிகவும் லைட் வெயிட் என்கிறீர்களா. அல்லது உலகின் சிறந்த ஹேர் கலர் பயன்படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள். என்ன சொன்னாலும் சரி, முடியின் வேர்களில் சீரம் அப்ளை செய்யக்கூடாது. இது வேர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தும். இது ஆயில் அதிகம் படிய காரணமாக மாறும். தலையில் படிந்து தொல்லை ஏற்படுத்தும். கூந்தலின் நடுப் பகுதியிலிருந்து முனை வரை சரியான அளவில் சீரம் பயன்படுத்தவும். மின்னும் கூந்தல் உங்களுக்கு தலைவலியாக மாறாமல் இருக்க இதுவே சிறந்த வழி.

Main image courtesy: @malvikasitlaniofficial