ஷாம்பூ இல்லாமல் எந்த கூந்தல் அலங்காரமும் நிறைவு பெறுவதில்லை. ஆனால் கூந்தலையும் தலையையும் சுத்தம் செய்வது மட்டுமே ஷாம்பூவின் வேலையாக இருந்த காலம் மலையேறிவிட்டது. கூந்தலுக்கு அசத்தலான நன்மைகளைத் தரும் ஷாம்பூக்களும் வந்து சேர்ந்தன. ஆனால் ரொம்ப காஸ்ட்லி பொருட்கள் வாங்கினால்தான் இத்தகைய நன்மைகள் கிடைக்கும் என தவறாக நினைக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மருந்துக் கடையில்கூட சிறந்த கூந்தலுக்கான ஷாம்பூக்கள் கிடைக்கும். மருந்துக் கடைகளில் ஏராளமான ஷாம்பூக்கள் இருக்கும். அதில் எதைத் தேர்ந்தெடுப்பது. உங்களின் வேலையை சுலபமாக்கும் வகையில் மூன்று சிறந்த சாய்ஸ்களை இங்கே வழங்குகிறோம். கூந்தலுக்கு ஊட்டச் சத்து கொடுக்கும் சிறந்த உட்பொருட்கள் கொண்ட இந்த ஷாம்பூக்கள் குறைவான பட்ஜெட்டில் நிறைவான பலன்களைக் கொடுக்கும்.

 

01. Tresemme Pro Protect Sulphate Free Shampoo

01. Tresemme Pro Protect Sulphate Free Shampoo

விலை - ரூ. Rs. 190/-

உலர்வான, டேமேஜ் ஆன கூந்தலால் பிரச்சனையா? சல்ஃபேட் இல்லாத ஷாம்பூவுக்கு மாற வேண்டிய நேரமிது. நுரை பொங்க வைக்கும் வேதிப் பொருளான சல்ஃபேட் கூந்தலின் இயற்கையான ஈரப் பதத்தை நீக்கிவிடும். இதனால் கூந்தல் வறண்டு போய், டல்லாக காட்சி தரும். மொரோக்கா நாட்டைச் சேர்ந்த அர்கன் ஆயில் கொண்ட Tresemme Pro Protect Sulphate Free Shampoo is a sulphate-free வின் ஃபார்முலா இழந்த பொலிவையும் மிருதுவான தன்மையையும் மீட்டுத் தரும். இதில் சல்ஃபேட் கிடையாது என்பதால் கலர் ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட கூந்தலிலும் இதைப் பயன்படுத்தலாம்.

 

02. Love Beauty & Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo

02. Love Beauty & Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo

விலை - ரூ. Rs. 600/-

டல்லான, சொரப்பான கூந்தல் சுருண்டு கொள்வது பலரும் சந்திக்கும் பிரச்சனை. தவறான ஷாம்பூ பயன்படுத்தினால் இந்தப் பிரச்சனை மோசமடையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முடி சுருண்டுகொள்வது உங்களின் பிரச்சனை என்றால் நீர்ச் சத்தும் ஊட்டச் சத்தும் கொடுக்கும் ஃபார்முலா கொண்ட Love Beauty & Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo சிறந்த சாய்ஸ். லேவண்டரின் மிருதுவாக்கும் குணமும் இந்த வேகன் ஷாம்பூ உங்கள் கூந்தலை சூப்பர் சாஃப்ட் ஆக மாற்றும். தொட்டுப் பார்க்க கொள்ளை ஆசை ஏற்படும்.

 

03. Dove Healthy Ritual For Growing Hair Shampoo

03. Dove Healthy Ritual For Growing Hair Shampoo

விலை - ரூ. 145/-

வேகமாக முடி வளர வேண்டுமா? முடி கொட்டுவதுதான் உங்கள் பிரச்சனையா? அதற்கு தீர்வு தரும் சிறந்த ஷாம்பூ ஒன்றை உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். Dove Healthy Ritual For Growing Hair Shampoo வில் கோன்ஃப்ளவர் ஆயில், ஒயிட் டீ இருப்பதால் கூந்தர் உதிர்வது குறையும். அதோடு கூந்தல் ஹெல்தியாக வளர்வதற்கும் உதவும். பேரபன், சாய வண்ணங்கள் இதில் கிடையாது. சேதமடைந்த கூந்தலை சரி செய்து, மென்மையான, ஊட்டச் சத்து நிறைந்த தோற்றத்தைப் பெற இது சிறந்தது.