“சில மாதங்களுக்கு ஒரு முறை ஷாம்பூ மாற்ற வேண்டுமா…” இந்தக் கேள்விக்கு நேரடி பதில் இல்லை. கொஞ்ச காலம் பயன்படுத்திய பிறகு அந்த குறிப்பிட்ட ஷாம்பூ பலன் கொடுக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கொஞ்ச காலத்தில் ஷாம்பூ பலன் கொடுக்காமல் போவதற்கு அதன் ஃபார்முலா காரணம் அல்ல. வெப்பநிலை மாற்றங்களும் உட்பொருட்கள் படிவதும்தான் காரணம்.

ஆனால் அவ்வப்போது உங்களின் வழக்கமான சிகை அலங்கார நடைமுறையை மாற்றத்தான் வேண்டும். லைஃப்ஸ்டைல், வெப்பநிலை மாற்றங்களால் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக அவசரப்பட்டு ஷாம்பூ மாற்ற வேண்டாம். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஷாம்பூ உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் போது மாற்றக்கூடாது. அதற்கு மாறாக வெளிப்புற சூழல் எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்கள் சிகை அலங்கார திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்யலாம். இதோ சில டிப்ஸ்.

 

01. உட்பொருட்கள் படிவதைத் தடுக்கும் க்ளாரிஃபையிங் ஷாம்பூ

01. உட்பொருட்கள் படிவதைத் தடுக்கும் க்ளாரிஃபையிங் ஷாம்பூ

தலையில் படியும் பொருட்கள்தான் இதில் பெரிய பிரச்சனை. சல்ஃபேட் இல்லாத, மிருதுவான ஷாம்பூ உங்கள் தலையை சரியாக சுத்தம் செய்யாது. அல்லது சரியாக தண்ணீரில் கழுவாமல் விடுவதை ஒரு பழக்கமாக மாற்றியிருப்பீர்கள். மாதம் இரு முறை க்ளாரிஃபையிங் ஷாம்பூ பயன்படுத்துவது மூலம் இந்தப் பிரச்சனையை சரி செய்யலாம்.

பி.பி. பிக்ஸ்: Dove Environmental Defence Shampoo

 

02. வெப்பநிலை மாற்றங்களை கவனித்தல்

02. வெப்பநிலை மாற்றங்களை கவனித்தல்

நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களை கவனிக்க வேண்டும். கடும் குளிர் காலங்களில் வறண்ட வானிலை காணப்பட்டால் ஆழமாக மாய்ஸ்சுரைஸ் செய்யும் ஷாம்பூவை தினமும் பயன்படுத்த வேண்டும். அதிக ஈரப் பதம் கொண்ட பகுதிகளில் வாழ்பவர்கள் பூஞ்சை முடி ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்களை தினமும் பயன்படுத்த வேண்டும்.

பி.பி. பிக்ஸ்: Tresemme Climate Protection Shampoo

 

03. லைஃப்ஸ்டைல் மாற்றங்கள்

03. லைஃப்ஸ்டைல் மாற்றங்கள்

இப்போது உங்கள் லைஃப்ஸ்டைல் என்னவாக மாறியிருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். நீங்கள் பொல்யூஷன் தொல்லையால் போராடும் செம அழகான பெண் என்றால் அதையும் ஷாம்பூ தேர்வில் கவனிக்க வேண்டும். என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கும் ஜாகிங் செல்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஷாம்பூ செட் ஆகாது.எவ்வளவு அதிகமாக ஹேர்ஸ்டைலிங் செய்கிறீர்கள், ஹீட்டிங் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் டேமேஜ் ரிப்பேர் பொருட்களை தேவைப்படும் போது கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

பி.பி. பிக்ஸ்: TIGI Bed Head Urban Anti-Dote Recovery Level 2 Shampoo

 

04. உள்ளே என்னவோ அதுதான் வெளியே

04. உள்ளே என்னவோ அதுதான் வெளியே

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறுகிறீர்கள். சிகை அலங்காரத்தைப் பொருத்த வரை என்ன விதமான டயட் என்பது மிகவும் முக்கியம். உங்கள் உணவில் எது பற்றாக்குறையாக இருக்கிறதோ அதை ஈடு கட்டும் வகையில் சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுக்கலாம். எந்த மாதிரியான உணவுப் பொருள் உங்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் என்பதையும் பார்க்க வேண்டும். ஹார்மோன் மாற்றங்களால் தலையில் பிசுபிசுப்பு இருந்தால் கொஞ்ச நாளைக்கு பிசுபிசுப்பை போக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

பி.பி. பிக்ஸ்: Love Beauty & Planet Tea Tree and Vetiver Aroma Radical Refresher Shampoo