பருவக் காலங்களில் முடி உதிர்தல் என்பது சாதாரணம் என்றாலும், கோடைகாலத்தில் உங்கள் நீண்டக் கூந்தலை மிகவும் மோசமாக பாதிக்கக் கூடியது. சூரியக் கதிர்களின் நேரடி பாதிப்பிலிருந்து உங்களுடைய உச்சந்தலையை உங்கள் தலைமுடி பாதுகாக்கின்றது. கோடை காலத்தில் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் மிகுதியாகி விடுவதன் காரணமாக, உங்களுடைய உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உங்கள் உடலிலிருந்து சில முடிகள் உதிர்கிறது. உச்சந்தலைக்கு அவசியமான அனைத்து ஈரப்பதத்தையும் வெப்பம் உறிஞ்சிக் கொண்டு விடுகின்றது. மேலும், நீச்சல் மற்றும் வெளிப்புற உடற்பயிற்சிகள் செய்யும் போது சில சிரமங்களையும் ஏற்படுத்தும். உச்சந்தலையிலிருந்து அதிகப்படியான வியர்வை வடியும் பகுதிகள், முடி உதிர்தலுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் செழுமையாக பெருகுவதற்கான மிகவும் பொருத்தமான இடமாக மாறிவிடும். பயப்பட வேண்டாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைமுடி பராமரிப்புக் குறிப்புகளை பின்பற்றுவதனால், கோடைகாலத்தில் முடி உதிர்வதை எளிமையாக தவிர்க்க முடியும்.

 

01. முடி உதிராமல் தடுக்கும் தயாரிப்புகளை பயன்படுத்திய பிறகு தலைமுடியை நன்றாக அலச வேண்டும்

01. முடி உதிராமல் தடுக்கும் தயாரிப்புகளை பயன்படுத்திய பிறகு தலைமுடியை நன்றாக அலச வேண்டும்

அதிக வியர்வையும், எண்ணெய் பிசுக்கும் இவை இரண்டும் சேர்ந்து உங்களுடைய கூந்தலை மிகவும் நாசமடைய செய்வதோடு மயிர்க்கால்களையும் அடைத்து விடும். அதன் விளைவாக முடி உதிரும். மயிர்க்கால்களில் அசுத்த்தங்களும், அழுக்குளும் சேராமலிருப்பதற்கு முடி உதிராமல் தடுக்கும் தயாரிப்பை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கொரு முறை உங்கள் தலைமுடியை நன்றாக அலச வேண்டும். முடி உதிராமல் தடுக்கும் ஷேம்பூக்கள் உங்களுடைய மயிர்க்கால்களின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதுடன், முடி உடைவதை முடிந்தளவுக்கு தடுத்து நீண்டக் கூந்தலை அளிக்கும்.

பீபி பிக்ஸ்: Dove Hairfall Rescue Shampoo and Conditioner

 

02. முடிந்தளவுக்கு உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்

02. முடிந்தளவுக்கு உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்

கோடைகாலத்தில் முடி உதிர்வதற்கு, உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம்/அழற்சி மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்களை உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமே, முடி உதிர்வை தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் அருந்தவும். உங்கள் தலைமுடியை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதற்கு, ஐஸ் போட்ட எலுமிச்சை டீ, தர்பூசணிச் சாறு, மற்றும் வெள்ளரிக்காய் போன்ற கோடைகாலத்தில் பானங்களை அருந்தவும். சூடான தண்ணீரில் குளிப்பதை அறவே தவிர்த்து விடுங்கள். உங்களுடைய உடலுக்கு வெப்பத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தாத அதிகளவு பச்சைக் காய்கறிகளுடன் கூடிய சீரான உணவு முறையை பின்பற்றுங்கள்.

 

03. ஈரத் தலைமுடியுடன் தூங்கச் செல்லாதீர்கள்.

03. ஈரத் தலைமுடியுடன் தூங்கச் செல்லாதீர்கள்.

ஈரத் தலைமுடி அதிக வெடிப்புகளை ஏற்படுவதோடு, எளிதாக பாதிப்புகளையும் ஏற்படுத்துக் கூடியதாகும். எனவே தான், ஈரமான தலைமுடியுடன் தூங்கச் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், தலையணையுடன் ஏற்படும் உராய்வினால் முடி உதிரும் வாய்ப்புள்ளது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன் உங்கள் தலைமுடியை முழுமையாக உலர்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 04. வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் தலைமுடியை மாஸ்யரைஸ் செய்து கொள்ளவும்.

05. இருக்கமான ஹேர்ஸ்டைலை தவிருங்கள்

குறிப்பாக, பாதாம், ஆர்கன், சூரியகாந்தி, மரூலா மற்றும் சோயாபீன் போன்றவற்றை உள்ளடக்கிய மிருதுத் தன்மையுள்ள எண்ணெய்களினால் உங்கள் தலைமுடியை மாஸ்யரைஸிங் செய்து கொள்ளும்போது, கோடையில் ஏற்படும் வற்ட்சியை தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல், முடி உதிர்தலையும் தடுக்கின்றது. தலைமுடியில் ஏற்படும் வெடிப்புகளை தடுப்பதற்கு நீர்ச்சத்து உதவுகிறது. மேலும் தலையை சீவிப் பின்னிக் கொள்ளும்போது ஏற்படும் சிக்கலையும், முடி உடைதலையும் தடுக்கின்றது.

பீபி பிக்ஸ்: Tresemme Keratin Smooth Deep Smoothing Mask

 

04. இருக்கமான ஹேர்ஸ்டைலை தவிருங்கள்

05. இருக்கமான ஹேர்ஸ்டைலை தவிருங்கள்

கோடைகாலத்தில் உங்கள் கூந்தல் வியர்வுடன் சேர்வதை தவிர்ப்பதற்கும், பிரச்னைகள் உருவாகாம் தடுப்பதற்கும் இறுக்கமான கொண்டை அல்லது போனிடைய்ல் போன்றவற்றால் உங்கள் கூந்தலை பாதுகாக்க விரும்புவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இறுக்கமாக ஹேர்ஸ்டைல் செய்து கொள்வதால் முடியின் வேர்க்கால்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பது உங்களுக்கேத் தெரியும். அதன் விளைவாக முடிகளும் உதிரும். தலைமுடியில் வேர்க்கால்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு, உங்கள் கூந்தலுக்கு பாதுகாப்பான ஹேர்ஸ்டைலை செய்து கொள்வதுதான் சிறந்த வழியாகும்.