சிடுக்கு விழுந்த, கலைந்த, சேதமடைந்த கூந்தல். பருவ மழைக் காலத்தில் எல்லோருக்கும் ஏற்படும் தொல்லைதான் இது. இப்படி இருக்கும் போது எவ்வாறு ஸ்டைல் செய்வது. இந்தப் போராட்டம் பெரிய போராட்டம். ஆனாலும் இதற்கும் சிறந்த தீர்வுகளைக் கண்டிருக்கிறோம். பருவ மழைக் காலத்திற்கு ஏற்ற ஐந்து ஹேர்ஸ்டைல்களை இங்கே அறிமுகம் செய்கிறோம். சிக்கு விழுவது முதலான அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய டிப்ஸ் இங்கே தரப்பட்டிருக்கிறது.

 

01. ஸ்பேஸ் பன்ஸ்

01. ஸ்பேஸ் பன்ஸ்

புகைப்படம், நன்றி: @Livingly

கலைந்த கூந்தலில் கொண்டை வைப்பது பழைய ஸ்டைல் ஸ்பேஸ் பன்ஸ் புதிய ஸ்டைல். கேதி பெர்ரி முதல் ஏரியானா வரை பல பிரபலங்களும் பயன்படுத்தும் இந்த ஹேர்ஸ்டைல் இப்போது சூப்பர் ஹிட்டாக மாறியிருக்கிறது. 90களில் ஃபேமஸாக இருந்த இந்த ஹேர்ஸ்டைல் உங்களது கூந்தலில் சிடுக்கு சிக்கு விழாமல், அழகாக பராமரிக்க உதவும். நடுவில் வகிடெடுட்டு வாருவது கூடுதல் அட்ராக்ஷன். தலையின் இரு பக்கமும் தூக்கலாக போனிடெயில் இருக்கும். ஹேர் பின் பயன்படுத்தி அதை நன்கு இணைத்துவிட்டால் வேலை முடிந்தது.

 

02. ஒரு பக்கமாக வாரிய ஃபிஷ்டெயில் பின்னல்

02. ஒரு பக்கமாக வாரிய ஃபிஷ்டெயில் பின்னல்

புகைப்படம், நன்றி: @AllFreeDIYWeddings

பருவ மழைக் காலத்தில் கூந்தலை பாதுகாக்கவும் ஸ்டைலாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் முடியை பின்னிக்கொள்வது நல்ல ஐடியா. ஒரு பக்கமாக வாரிய ஃபிஷ்டெயில் பின்னல் அதில் சிறந்த சாய்ஸாக இருக்கும். ஈரப் பதம் கொண்ட, தலைக்கு குளிக்காத கூந்தலிலும் இது சூப்பராக இருக்கும். முடியை நன்கு வாரிய பிறகு ஒரு பக்கமாக குதிரைவால் ஜடை பின்னவும். அதை சரிசமமாக பிரித்த பிறகு மத்தியிலிருந்து நுனி வரை கூந்தலை பின்னிவிட்டால் எல்லாம் சுபம்.

 

03. கொஞ்சம் மேலே, கொஞ்சம் கீழே… கொண்டை

03. கொஞ்சம் மேலே, கொஞ்சம் கீழே… கொண்டை

புகைப்படம், நன்றி: @Alfemminile

மழைக் காலத்தில் கூந்தலை அவிழ்த்து விடுவது நல்ல சாய்ஸ் அல்ல. ஆனால் கொஞ்சம் மேலும் கீழுமாக கொண்டை இருக்கும்படி ஹேர்ஸ்டைல் செய்தால் பொருத்தமாக இருக்கும். கூந்தலில் சிக்கு விழாமலிருப்பதற்கு TRESemmé Keratin Smooth Hair Serum போன்ற சீரம் பயன்படுத்தலாம். முன்பக்க கூந்தலை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளவும். கூந்தலை இரண்டு பிரிவாக பிரித்துக்கொள்ளவும். அதில் மேல் பகுதியை போனிடெயில் உருவாக்க பயன்படுத்திக்கொள்ளவும்.

 

04. கலைந்த கூந்தலின் தாழ்வான போனிடெயில்

04. கலைந்த கூந்தலின் தாழ்வான போனிடெயில்

புகைப்படம், நன்றி: @PureWow

பருவ மழைக் காலத்தில் கூந்தை முடிந்து வைத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது என எல்லோரும் பரிந்துரைக்கிறார்களா. ஆனால் முடியின் நீளம் குறைவாக இருந்தால் அது கஷ்டமாக இருக்குமே. பக்கவாட்டில் கூந்தலை பின்னுவது இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். இது நல்ல ஃபேஷனும்கூட. முன்பக்கமுள்ள கூந்தலை எடுத்துக்கொண்டு வழக்கமான சடை பின்னல் பாணியில் 3 வரிசைப் பின்னலாக முடிந்துகொள்ளவும். பாபி பின்களைப் பயன்படுத்தி தலையின் பின்பகுதியில் அதை இணைக்கவும். இன்னும் அழகாக மாற வேண்டுமா… கொஞ்சம் கூந்தலை கலைத்துவிடுங்கள். கலைந்த கூந்தலின் பேரழகும் சேரட்டும்.

 

05. கலைந்த கூந்தலின் தாழ்வான போனிடெயில்

05. கலைந்த கூந்தலின் தாழ்வான போனிடெயில்

புகைப்படம், நன்றி:       @Livingly 


  இந்த லிஸ்ட்டில் போனிடெயில் இல்லாமலா. ஆனால் வழக்கமான குதிரைவால் ஜடை வேண்டாம். பலரும் விரும்புகிற கலைந்த கூந்தல் கொண்ட போனிடெயில் பயன்படுத்தலாம். இது கூந்தலை அடர்த்தியாகவும் காட்டும். எனினும் முடி பிரிபிரியாகத் தெரிகிறது என்றால் Dove Volume and Fullness Dry Shampoo போன்ற ட்ரை ஷாம்பூவை முடியின் வேர்களில் அப்ளை செய்யலாம். தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆயில் இதன் மூலம் உறிஞ்சப்படும். அதன் பிறகு கூந்தலைப் பிரித்து தாழ்வான போனிடெயில் தயார் செய்யுங்கள்.

புகைப்படம் நன்றி: @The Right Hairstyles       @Livingly