மழைக் காலங்களில் சுருட்டையான முடி, பிசுபிசுப்பான உச்சந்தலை, பொலிவற்றக் கூந்தல் போன்ற தலைமுடி பிரச்சனைகள் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையைத் தருகிறது. மேலும் பட்டியலிலுள்ள எல்லாப் பிரச்னைகளையும் விட முடி உதிர்தல்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. புள்ளிவிவரப்படி, 90%க்கும் அதிகமான மக்கள் மழைக்காலங்களில் முடிஉதிர்தல் பிரச்னை அதிகரிப்பதைக் குறித்து வேதனை தெரிவித்துள்ளனர். இறுதியில், ஒன்றை நாம் ஒருமனதாக ஒப்புக்கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு சாதாரணமான நாளில், ஒரு நாளைக்கு 100 முடி இழைகளை நீங்கள் இழக்க நேரிடும், ஆனால் வளிமண்டலத்தில் அதிகரித்த் ஈரப்பதமும், அமில மழைநீருடன் கலந்து பொழியும் போது, 250 அல்லது அதற்கு மேலும் முடிஇழைகள் உதிர்வது அதிகரிக்கலாம் . மேலும் நீங்கள் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு கெட்ட செய்தி மட்டுமே இருக்கும். அதிர்ஷ்டவசமாக, மழைக்காலங்களில் முடிஉதிர்தலை விளைவிக்கக் கூடிய சில குற்றவாளிகளை உங்களால் இனங்காண முடியும் – அவர்களை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். மழைக்காலத்தில் முடி உதிர்தலுக்கு காரணமான ஐந்து விஷயங்களையும் அவற்றைக் கையாள்வதற்கான குறிப்புகளையும் படிக்கவும்.
- 01. சரியாக தலைமுடியை உலர்த்தாமல் இருத்தல்
- 02. மனஅழுத்தத்தை வெளியேற்றாமலிருத்தல்
- 03. மழை பெய்யும் போது தலையை நன்றாக மூடாமல் இருத்தல்
- 04. சரியான தயாரிப்புகளை பயன்படுத்தாதது
- 05. ஹேர் மாஸ்க் போட்டுக் கொள்ளாமல் செல்லுதல்
01. சரியாக தலைமுடியை உலர்த்தாமல் இருத்தல்

பருவமழை காலங்களில் ஈரப்பதம் என்பது உச்சந்தலையில் அதிகப்படியான வியர்வை தங்கும். அப்படிப்பட்ட ஈரப்பதம் உச்சந்தலையிலிருந்து இயற்கையான எண்ணெய் சத்துக்களை பறித்துவிட்டு, உச்சந்தலை வறண்டு போகச் செய்யும் மற்றும் அதன் மயிர்க்கால்கள் வரை ஊடுருவிச் சென்று அவற்றையும் பலவீனமடையச் செய்யும். அதைத் தவிர முடியை பொலிவற்றதாகவும, உயிரற்றதாகவும் செய்து கூந்தலில் சிக்குகளை உண்டாக்கி விடும். நாளை என்பதே இல்லை என்ற பழமொழிக்கிணங்க போல் மயிரிழைகள் உடைந்து போகும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், உங்கள் தலைமுடியை உலர்த்த மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துங்கள்! முடியிலிருந்து அதிகப்படியான தண்ணீரை மெதுவாக பிழிந்தெடுக்கவும் மற்றும் முடியிலிருந்து அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சுவதற்கு டவலைப் பயன்படுத்துங்கல் . எப்போதும் ஹேர்டிரையர் பயன்படுத்தாதீர்கள். இது ஏற்கனவே பலவீனமடைந்த முடியை மட்டுமே மேலும் சேதப்படுத்தும்.
02. மனஅழுத்தத்தை வெளியேற்றாமலிருத்தல்

வாழ்க்கையில் வேறு பிரச்சனைகள் போதுமானதாக இல்லாவிட்டாலும், மன அழுத்தத்தினால், பிரச்னைகளை கையாளும் எங்கள் வழிமுறையும் பாதிப்படைகிறது. ஏற்கனவே பருவமழைக் காலங்களில் நம் தலைமுடிக்கு ஏதாவது பிரச்னை வந்து விடுமோ என்று நாம் பதட்டமாக இருக்கின்ற நேரத்தில், மன அழுத்தமும் தன் பங்குக்கு நம் கூந்தலுக்கு பிரச்னைகளை உண்டாக்குகிறது. அடிப்படையில், மன அழுத்தம், புதிய மயிர்க்கால்களை உருவாக்க விடாமல், நிரந்தரமாக மயிர்க்கால்களை 'ஓய்வு' கட்டத்திற்கு தள்ளி விடுகின்றது. காலப்போக்கில், நீங்கள் தலைக்குக் குளிக்கும்போதோ, தலைமுடியை சீவிக் கொள்ளும்போதோ அல்லது அவற்றைத் தொடும் போதோ, முடி மிகவும் எளிதாக உதிர்ந்துவிடும். மற்றும் நீங்கள் நீண்டகாலமாத மன அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவரானால், தயவுசெய்து கொஞ்சம் மனஅழுத்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். அது உங்கள் தலைமுடியை பாதுகாப்பதற்காக மட்டுமே
03. மழை பெய்யும் போது தலையை நன்றாக மூடாமல் இருத்தல்

நம் எல்லோருக்கும் மழையில் நடனமாடுவது என்றால் மிகவும் விருப்பம், அந்த மகிழ்ச்சியை நமது சருமம் உணர்கிறோம், அதனால் நனைக்கிறோம். ஆனால் அந்த குளிர்ச்சி, அர்த்தமற்ற மகிழ்ச்சி மற்றும் முடிஉதிர்தல் இவற்றினால் ஏதாவது பலன் உள்ளதா என்றால் அதற்கு இல்லை என்ற பதில் தான் வரும். மழைநீர் பல மாசுக்களுடன் கலந்து பொழிவதால் அது சுத்தமான நீர் இல்லை. இந்த மழைநீர் மயிர்க்கால்களின் வேர்களை வலுவிழக்கச் செய்து முடிஉதிர்தலுக்கு வழிவகுக்கும். ஆனால் மழைநீரில் குளிக்க வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், தயவுசெய்து உங்களுடன் ஒரு குடையையோ அல்லது ரெயின்கோட்டையையோ எடுத்துச் செல்லுங்கள். அதுவும் இல்லையென்றால், உங்கள் தலையை மட்டுமாவது மூடி வைக்கவும்.
04. சரியான தயாரிப்புகளை பயன்படுத்தாதது

நீங்கள் தேடும் பருவமழைக் காலங்களில் முடிஉதிர்தல் தடுப்பதற்கான ஆலோசனை என்னவென்றால், நாங்கள் உங்களிடம் ஒரு ரகசியத்தை கூறப் போகிறோம். அதாவது முடி உதிர்தலைக் குறைக்கும் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள்! இந்தப் பிரச்சனையை கவனித்துக் கொள்வதற்காகவே Dove Hair Fall Rescue Conditioner மற்றும் Dove Hair Fall Rescue Conditioner ஆகிய இந்த சேர்க்கைகளின் பக்கம் நாங்கள் சாய்ந்திருக்கிறோம். இந்த வலிமையான கலவையானது நியூட்ரிலாக் சீரம் மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது, இது பலவீனமான முடியை வலுப்படுத்தி, முடி உதிர்தலை வழியனுப்பி விடும்
05. ஹேர் மாஸ்க் போட்டுக் கொள்ளாமல் செல்லுதல்

இத்தகயை காலங்களில் உங்கள் தலைமுடிக்கு கூடுதலாக வெள்ளை அணுக்களின் தேவை அதிகமாக இருப்பதால், குறிப்பாக பருவமழையின் போது, ஹேர் மாஸ்குகளை தவிர்க்காதீர்கள். Dove Intense Damage Repair Hair Mask ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வறண்ட, சேதமடைந்த மற்றும் பொலிவிழந்த முடிக்கு புத்துணர்ச்சி, உயிரோட்டம், சீர் செய்யும் பணியை இந்த ஹேர் மாஸ்க் மிக நன்றாகச் செய்கிறது. முடி சேதத்தை சீர் செய்யும் கெராடின் ஆக்டிவ்ஸ் மற்றும் உங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்தை தரக்கூடிய மாய்ஸ்சுரைசிங் க்ரீம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஹேர் மாஸ்க் உங்கள் முடி உதிர்தல் பிரச்சனைகளை கவனித்துக்கொள்ளும். தொழில்முறை உதவிக்குறிப்பு: கூடுதலான பளபளப்பைப் பெறுவதற்கு குளிர்ந்த நீரில் அதை நன்றாக அலசவும் துவைக்கவும்.
Written by Kayal Thanigasalam on Sep 06, 2021
Author at BeBeautiful.