உங்கள் தலைமுடி சுருட்டையாகும், வறண்டு போகும், முடியை சீவும் போது முடி உதிர்ந்து மற்றும் தலையணையிலும் முடி உதிர்ந்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா? ஆமாம். இது பருவநிலை மாற்றம் உங்கள் தலைமுடியை பாதிக்கின்றது. பருவநிலை மாற்றத்தால் உங்கள் சருமத்தில் வறட்சி மற்றும் சீரற்றத் தன்மை போன்ற மாற்றங்கள் ஏற்படுவதுபோல், உங்கள் தலைமுடியிலும் சில மாற்றங்கள் ஏற்படும். இதை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்? எளிமையாக முறையில் பராமரித்துக் கொண்டு உங்கள் கூந்தலை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிக பயன்தரக்கூடிய மற்றும் சிறந்த 5 தலைமுடி பராமரிப்புக் குறிப்புகளை தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 

01. பொடுகை எதிர்க்கும் ஷாம்புக்கு மாறுங்கள்

01. பொடுகை எதிர்க்கும் ஷாம்புக்கு மாறுங்கள்

பொடுகை நீக்கும் ஷாம்புவுக்கு மாறுவதுதான் பருவநிலை மாற்றத்தின் போது உங்கள் தலைமுடிக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். குளிர்ச்சியான வானிலையினால் முடியிலிருந்து ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியடையச் செய்யும். மேலும் அரிப்பு மற்றும் பொடுகு அதிகமாவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பாலான பொடுகை நீக்கும் ஷாம்புகள் இறுதியில் உங்கள் கூந்தலை வறட்சியடைய செய்து விடும். ஆகையினால் தான் Dove Dandruff Care Shampoo. வை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட இந்த ஷாம்புவில், பொடுகை நீக்கும் ZPTO அடங்கியுள்ளது. இது மலாசேஸ்ஸியா பொடுகை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் படைத்தது, கூடுதலாக இதில் நுண்ணிய ஈரப்பதம் சீரம் உள்ளது. இது உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். இது முற்றிலும் தலைமுடிக்கான பாதுக்காப்புக் கவசமாகும்.

 

02. சேதமடைந்த தலைமுடியை குணப்படுத்தும் ஹேர் மாஸ்கை பயன்படுத்தவும்

02. சேதமடைந்த தலைமுடியை குணப்படுத்தும் ஹேர் மாஸ்கை பயன்படுத்தவும்

இந்த வறட்சியான குளிர்காலம் உங்கள் கூந்தலுக்கு அதிக சேதத்தை உண்டாக்கும். மேலும், முடிகளை உடைவதற்கும் அதிகளவு வாய்ப்புள்ளது. இதற்காக, நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த சேத்ததை குணப்படுத்தும் Dove Intense Damage Repair Hair Mask போன்ற ஹேர் மாஸ்க்கினால் உங்கள் கூந்தல் பிரச்னையை மிக எளிதாக தீர்க்கலாம். இதில் கெராட்டினின் குணப்படுத்தும் திறன் உட்செலுத்தப்பட்டுள்ளது. ஆகையினால், சேதத்தை உடனடியாக குணப்படுத்தும் அதே சமயத்தில் இந்த ஹேர் மாஸ்க், மயிரிழைகளுக்கு மாஸ்ச்யரைஸிங்கையும் செய்துவிடும். உச்சந்தலை வகுடில் இருந்து அடிமுடி வரை தடவவும். பிறகு 3-5 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். உங்களுடைய வழக்கமான கன்டிஷனரை வாரத்திற்கு ஒரு முறை மாறிமாறிப் பயன்படுத்தும் போது ஏற்படும் மாயாஜாலத்தைப் பாருங்கள்.

 

03. வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கசக்கி, அலசவும்

03. வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கசக்கி, அலசவும்

கொதிக்கும் நீரில் உங்கள் தலைமுடியை அலசி கழுவும் போது உங்கள் உச்சந்தலையிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும். தலைமுடியை வறட்சியாக்கி விடும். மேலும் உங்கள் தலைமுடியை வறட்சியாக்கி, பொலிவிழக்கச் செய்வதுடன் முடி உடையவும் காரணமாகிவிடும். குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரினால் உங்கள் தலைமுடியை கழுவுங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் தலைமுடியில் வெட்டுக்காயங்கள் ஏற்படாமல் தடுப்பதுடன், ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். மேலும் தலைமுடியை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

 

04. ஹீட் ஸ்டைலிங் கருவியைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்

04. ஹீட் ஸ்டைலிங் கருவியைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி அதிகளவு பாதிக்கப்படுவதால், இந்த பருவகாலத்தில் ஹாட் ஸ்டைலிங் கருவிகளை மிகவும் குறைந்தளவு பயன்படுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் ஷ்ட்ரைட்னர் அல்லது ட்ரையரை பயன்படுத்துவதற்கு முன்பு, TRESemmé Keratin Smooth Heat Protection Spray போன்ற வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ப்ரேயை பயன்படுத்துங்கள். இது 450 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பத்தை தாங்கி உங்கள் தலைமுடியை பாதுகாப்பதுடன், உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

 

05. உங்கள் கூந்தலை அவ்வப்போது ட்ரிம் செய்து கொள்ளுங்கள்

05. உங்கள் கூந்தலை அவ்வப்போது ட்ரிம் செய்து கொள்ளுங்கள்

பருவநிலை மாற்றங்களினால் உங்கள் தலைமுடி வறண்டு போகச் செய்து, சுருட்டையாக்குவதுடன் அடிமுடியில் ஏற்படும் பிளவுகளையும் உண்டாக்கும். சலூனிற்குச் சென்று எப்போதும்போல் அடிமுடியை அவ்வப்போது ட்ரிம் செய்வது ஒன்றே சிறந்த வழியாகும் இது ஆரோக்கியமற்ற அடிமுடியில் பிளவுற்ற நீக்குவதுடன், உங்கள் கூந்தலின் பொருட்டு உங்களுடைய மொத்த தோற்றத்தையும் மேம்படுத்த விடும்