குளிர்காலத்தில் ஏற்படும் முடி பாதிப்பை தடுப்பதற்கான உடனடியாக பின்பற்ற வேண்டிய 7 குளிர்கால முடி பராமரிப்பு

Written by Kayal ThanigasalamMar 07, 2022
குளிர்காலத்தில் ஏற்படும் முடி பாதிப்பை தடுப்பதற்கான உடனடியாக பின்பற்ற வேண்டிய 7 குளிர்கால முடி பராமரிப்பு

இறுதியாக நாம் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம் வந்துவிட்டது! நீண்ட இரவு நேரங்கள், சிறந்த தூக்கம், குளுமையான சூழ்நிலை மற்றும் பருவ காலத்திற்கேற்ற வசதியான ஆடைகள் - இப்படி மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல காரணங்களைக் குளிர்காலம் கொண்டு வருகிறது. இந்த குளிர் காலங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் அனுபவிக்கும் அதே நேரத்தில், ​​உங்கள் தலைமுடி நமக்கு வேறொரு கதை சொல்லலாம். குளிர்காலம் உங்கள் உச்சந்தலையையும், தலைமுடியையும் கடுமையாக பாதிப்பதோடு, அதிக வறட்சியை ஏற்படுத்தும். ஆனால் சரியான குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகள் மூலம் இந்த பிரச்சனையை எளிதாக சமாளிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனில், குளிர்காலத்தின் வறண்ட காற்று உங்கள் தலைமுடிக்கு பேராபத்தை விளைவித்து அழித்துவிடும். இந்த மாதங்களில், உங்கள் தலைமுடி ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்படும். மேலும், உங்கள் தலைமுடி உடைவது, சேதமடைவது, சிக்காகி சுருட்டையாவது போன்ப பாதிப்புகளுக்குள்ளாகும். இது இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உச்சந்தலையில் வறட்சியையும் ஏற்படுத்தும் மற்றும் மிகுந்த சங்கடத்தைத் தரக்கூடிய பொடுகு போன்ற பிரச்சனைகளை வரவழைக்கிறது. எனவே, குளிர்காலத்தில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை குறைத்து சேதத்தைத் தடுத்து எவ்வாறு உங்கள் கூந்தலை பராமரித்துக் கொள்வீர்கள்? இந்த குளிர்காலத்தில் ஆரோக்கியமான முடியை அடைய இந்த குளிர்காலத்தில் உங்கல் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்றக்கூடிய சில பயனுள்ள குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகள் மற்றும் உத்திகள் இரண்டையும் ஒன்றாக தந்துள்ளோம்.

 

01. உங்கள் தலைமுடியையும் உச்சந்தலையையும் ஊட்டத்துடன் வைக்கவும்

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த பருவகாலத்தில் உங்கள் குளிர்கால ஆடைகளையும், ஹேர் ஆயில்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியிலும், உச்சந்தலையிலும் ஹேர் ஆயில் தடவுவது குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி எதிர்கொள்ளக்கூடிய குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் உங்கள் முடியின் அடிமுனைகள் பிளவுபடுவதைத் தவிர்க்க உச்சந்தலையை எந்தளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அந்தளவுக்கு அடிமுடிகளிலும் கவனம் செலுத்துங்கள். இயற்கையாகவே வறண்டு காணப்படும் உங்கள் உச்சந்தலை குளிர்காலத்தில் மேலும் வறட்சியடையும். இருந்தால், எனவே, உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள். எண்ணெய் இரண்டு மணி நேரம் வரை நன்றாக தலைமுடியில் ஊறிய பிறகு, தலைமுடியை அலச வேண்டும்.

 

02. ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாட்டைக் குறைக்கவும்

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் நிறைய விருந்துகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும் என்பதும், உங்களுக்குப் பிடித்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் அல்லது கர்லிங் அயர்ன் இல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி சேதமடையும் வாய்ப்புகள் அதிகம், மற்றும் ஹீட் ஸ்டைலிங் கருவிகளின் அதிகப்படியான பயன்பாட்டினாலும் வறட்சி மற்றும் முடி உடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த கருவிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும், ஆனால் நீங்கள் அவற்றைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயமிருந்தால், ஹீட் ஸ்டைலிங் செய்வதற்கு முன் வெப்பத்திலிருந்து பாதுகாக்கக் கூடிய ஏதாவது ஸ்ப்ரேயை தெளித்துக் கொள்ளவும். இந்த குளிர்காலம் முழுவதும் உங்களுடைய முடி ஆரோக்கியமாக இருப்பதற்காக இந்த குளிர்கால முடி பராமரிப்பு குறிப்பு உறுதியளிக்கிறது.

 

03. அடிக்கடி தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கவும்

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குளிர்காலத்தில், உங்கள் உச்சந்தலைக்கு வழக்கமாக கிடைக்கும் எண்ணெய் பசை கிடைக்காது, எனவே நீங்கள் அடிக்கடி தலைக்குக் குளிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் உச்சந்தலையில் அதன் இயற்கையான எண்ணெய்ப் பசையை திறம்பட கிடைக்கப் பெறுவதற்கு, தலைமுடிக்கு ஷாம்பு குளிப்பதை வாரத்திற்கு இருமுறை என்றளவுக்கு குறைத்துக் கொள்ளவும். அடிக்கடி தலைக்கு குளிப்பதனால், கழுவுவது அதிகப்படியான வறட்சியை ஏற்படுவதுடன், உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகு வருவதற்கும் வழிவகுக்கும். உச்சந்தலையில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளைத் தடுப்பதற்கு, இந்த குளிர்கால முடி பராமரிப்பு உதவிக்குறிப்பை இந்த பருவகாலம் முழுவதும் பின்பற்றவும். வறட்சியை ஏற்படுத்தாத மென்மையான, ஊட்டமளிக்கும் ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்தலாம்..

 

04. ஈரத் தலைமுடியுடன் வெளியே செல்ல வேண்டாம்.

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை உலர்த்துவது என்பது மிகவும் கடினமான பணியாகும், குறிப்பாக நீண்ட மற்றும் அடர்த்தியான முடியாக இருந்துவிட்டால் அது மேலும் கடினமானதாகி விடும். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் உங்கள் தலைமுடியை முழுவதுமாக நன்றாக உலர்ந்த பிறகு செல்வது என்பது, நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகளில் ஒன்றாகும். வெளியில் இருக்கும் குளிர்ச்சியான பருவநிலை உங்களுடைய தலைமுடியை காயவைக்கும் நேரத்தை நீட்டிக்க செய்யும் மற்றும் அதிக பாதிப்புகளை தந்து மிகுந்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியின் மயிர்க்கால்கள் உடைந்து போகும் அபாயம் உள்ளது, மேலும் வேகமாக நிறம் மங்கிவிடும்.

 

05. உங்கள் தலைமுடியைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதை விட அதை தடுப்பது மிகவும் சிறந்தது. இது உங்கள் தலைமுடிக்கு மிகச் சரியாகப் பொருந்தும். உங்கள் கூந்தல் சேதமடைந்த பிறகு குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகளை தேடுவதற்கு பதிலாக, உங்கள் தலைமுடியை பாதுகாப்பதன் மூலம் அதைத் தடுக்கவும். குளிர்காலத்திற்கேற்ற கம்பளி தொப்பிகள் மற்றும் ஸ்காஃப்ஸ் போன்ற அழகான அணிகலன்களை பயன்படுத்துங்கள். இவை உங்கள் தலைமுடியைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் பொதுவாக பாதிக்கும் சளி மற்றும் காய்ச்சலிலிருந்து உங்களைக் காப்பாற்றும். உங்கள் ஹெல்மேட் மிகவும் இறுக்கமாக போட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம். உங்கள் குளிர்கால தொப்பியை சுத்தமாக வைத்திருங்கள், இல்லையெனில், வியர்வை சுரப்பது உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும்.

 

06. ஒவ்வொரு வாரமும் அதிகமாக கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தவும்.

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சக்தி வாய்ந்த ஹேர் மாஸ்க்கை இதுவரை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையென்றால், இந்த குளிர்காலத்தில் நீங்கள் கண்டிப்பாக அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆழமான கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்கில் முதலீடு செய்யுங்கள், அதை உங்கள் விடுமுறை நாளில் நீங்கள் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் தலைமுடிக்கு தகுதியான அழகையு ம் அன்பையும் கொடுங்கள். இந்த முக்கியமான குளிர்கால முடி பராமரிப்பு உதவிக்குறிப்பு சீசன் முழுவதும் உங்கள் ட்ரெஸ்ஸை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். ஹேர் மாஸ்க்குகள் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிக சக்தியையும் அளிக்கிறது. எனவே அரை மணி நேரத்திற்குள் நல்ல பயனைத் தரவல்லது. நம்முடைய சமையலைறையில் கிடைக்கும் முட்டை, அவகோடோ, ஆலிவ் எண்ணெய் மற்றும் பலப்பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஹைட்ரேட்டிங் ஹேர் மாஸ்க்கைத் தயாரிக்கலாம். இந்த பொருட்கள் முடிக்கு வளர்ச்சியைத் தருவதோடு பளபளப்பையும்க் கூட்டுகின்றன. அதுமட்டுமல்லாமல், உச்சந்தலையைப் பாதிக்கும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

 

07. ட்ரை ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்தவும்

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் உச்சந்தலை எண்ணெய்ப் பசையுடன் இருந்தால், நீங்கள் ஷாம்பு நாடுவது உங்களுக்கு இயற்கையானதாகும், ஆனால் ஏறகனவே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் அடிக்கடி தலைக்குக் குளித்தால் கழுவினால் அவை வறண்டு போகும். அப்போதுதான் உங்களுக்கு உதவ ட்ரை ஷாம்புகள் வருகின்றன. எண்ணெய் பசை மற்றும் பிசுபிசுப்பான ஸ்கால்ப்பில் சிறிது ட்ரை ஷாம்புவை ஸ்ப்ரே செய்வதனால், உங்கள் வலிமையற்ற கூட வலிமைமயாகவும், உலர்ந்ததாகவும் தோன்றச் செய்யும். இது உங்கள் தலைமுடிக்கு உடனடியாக புத்துணர்ச்சியையும் அளிக்கும். தலைக்கு குளிக்காமல் புத்துணர்ச்சியற்ற முடிக்கு ஸ்டைலிங் செய்வது மிகவும் கடிமாக விஷயமாகும். ட்ரை ஷாம்புவினால் இது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். இது உச்சந்தலையில் உள்ள அனைத்து எண்ணெயையும் உறிஞ்சி, நீண்ட தலைமுடி இருப்பது போல் தோற்றமளிக்கச் செய்கிறது

 

08. குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குளிர்கால தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே. குளிர்காலத்தில் உங்கள் தலைமுடிக்கு எந்த எண்ணெய்கள் சிறந்தது?

ப. தேங்காய், ஆலிவ், ஆமணக்கு மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவைகள் குளிர்காலத்தில் நன்றாக வேலை செய்யும். இந்த எண்ணெய்கள் மயிர்க்கால்களில் ஆழமாக ஊடுருவி, உள்ளிருந்து அதை சரிசெய்கிறது.

கே. குளிர்காலத்தில் முடி உதிர்வு அதிகரிக்கும் என்பது உண்மையா?

ப. உங்கள் உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை வறண்ட இதனால் தலைமுடி அதிகப் பாதிப்புக்குள்ளாகி சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. இதுவே அதிகளவு முடி உதிர்வுக்கு மிக முக்கியமான காரணியாகும்.

கே. குளிர்காலத்தில் ஆலிவ் எண்ணெய் நல்லதா?

ப. முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆலிவ் எண்ணெயில் அதிகளவு உள்ளது. மற்ற பெரும்பாலான எண்ணெய்களை விட உங்கள் மயிர்க்கால்களுக்குள் ஊடுருவிச் சென்று ஊட்டத்தை அளிக்கிறது,.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
553 views

Shop This Story

Looking for something else