பாலிவுட்டின் மீதான எங்கள் பற்றும், பாசமும் என்றும் பசுமையானது மற்றும் என்றும் அழியாததாகும். ஒரு விஷயம் என்னவென்றால், நம் பாசத்திற்குரிய நடிகைகளிடமிருந்து திரைப்படங்களைத் தவிர, அவர்களிடமிருந்து புதிய அழகுக் குறிப்புகளைப் பெறுவதிலும் நமக்கு சமமாக ஆர்வமுள்ளது. 90களின் மாதுரி தீட்சித்தோ அல்லது 2021ன் ஜான்வி கபூரோ யாராக இருந்தாலும், எந்தளவுக்கு அவர்களுடைய பிரமிப்பான அழகுடன் தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள் பின்பற்றும் அழகு உத்திகள் மற்றும் குறிப்புகளை நாம் எப்போதும் கவனித்துக் கொண்டேயிருப்போம். அதனால்தான், பாலிவுட்டின் Z தலைமுறை தேவதைகளிடமிருந்து கற்றுக்கொண்ட 5 வகையான பாடங்களை இங்கே நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். இன்றிலிருந்து அவற்றை உங்கள் அன்றாட அழகுப் பராமரிப்புடன் சேர்த்துக் கொள்ளுங்கள். முதலில் படியங்கள், பின்னர் எங்களுக்கு நன்றி கூறுங்கள்!

 

01. சாரா அலி கான் போன்று தலைமுடிக்கு வெங்காய சாறைப் பயன்படுத்தவும்.

01. சாரா அலி கான் போன்று தலைமுடிக்கு வெங்காய சாறைப் பயன்படுத்தவும்.

ஆம், முடி வளர்ச்சிக்கு பாட்டி வைத்தியத்தை சாரா பெரிதும் நம்புகிறார். கந்தகம் நிறைந்த வெங்காயத்தினால் முடி உதிர்வதைத் தடுத்து, முடிக்கு வலிமையைத் தருகிறது. மேலும், வெங்காயம் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டிவிடுவதால். அது உங்கள் தலைமுடி வளர்ச்சியடைவதற்கு மட்டுமல்லாமல், சருமமும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. எனவே, பொறாமை கொள்ளும் அளவுக்கு சாராவின் தலைமுடி போன்று நீங்கள் பெற விரும்பினால், உடனை வெங்காயச் சாற்றை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்கவும்.

பீபி பிக்ஸ் : Love Beauty & Planet Onion, Blackseed & Patchouli Hair fall Control Sulfate Free Shampoo

 

02. அனன்யா பாண்டே போன்று உங்கள் மேக்கப்பில் வண்ணத்தைச் சேர்க்கவும்

02. அனன்யா பாண்டே போன்று உங்கள் மேக்கப்பில் வண்ணத்தைச் சேர்க்கவும்

ஒரு நல்ல இயற்கையான மற்றும் மென்மையான தோற்றத்தை நாங்கள் விரும்பினாலும், எனவே, உங்களுடைய தோற்றத்தை இந்த வண்ணங்கள் பலமடங்கு உயர்த்தும் என்பதை மறுப்பதற்கில்லை. எங்களிடம் இதை அனன்யா பாண்டேயும் ஒப்புக்கொள்கிறார். அதனால்தான், இளஞ்சிவப்பு ஐலைனர் முதல் பிரகாசமான பச்சை அல்லது சிவப்பு ஐ ஷேடோ வரை அனைத்தையும் அனன்யா பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது அவருடைய தோற்றத்தில் கவர்ச்சியையும், இன்பத் துள்ளலையும் சேர்க்கும்.

பீபி பிக்ஸ் : Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection

 

03. எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு அலயா எஃப் போன்று காஃபி ஸ்கரப்பை பயன்படுத்தவும்

03. எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு அலயா எஃப் போன்று  காஃபி ஸ்கரப்பை பயன்படுத்தவும்

இறந்த சருமங்களை நீக்குவதற்கு, அழகான அலயா எஃப் தனது சொந்த காபி ஸ்க்ரப்பைத் பயன்படுத்துகிறார். மேலும், அது இரத்த செல்களில் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது. இது சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் தோன்றுவதற்கு உதவுகிறது. அரைத்த காஃபி, தேன், ஆலிவ் எண்ணெய், பால் மற்றும் கடலை மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்த ஸ்க்ரப்பை அவர் வீட்டிலேயே தயாரிக்கின்றார். நீங்கள் வீட்டிலேயே செய்வதை விரும்பாதவராக இருந்தாலோ அல்லது மிகச் சோம்பேறியாக இருந்தாலோ, காஃபி ஸ்க்ரப்பை கடையிலிருந்து வாங்கி வந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பீபி பிக்ஸ் : St. Ives Energizing Coconut & Coffee Scrub

 

04. தாரா சுதாரியா போன்று உங்கள் அம்சங்களை முன்னிலைப்படுத்தவும்

04. தாரா சுதாரியா போன்று உங்கள் அம்சங்களை முன்னிலைப்படுத்தவும்

தாரா சுதாரியாவின் இன்ஸ்டாகிராமிலிருந்து சிறந்த அழகு பாடங்களில் ஒன்றை நாங்கள் கற்றுக்கொண்டோம். அது என்னவென்றால் மேக்கப்பைப் செய்துபோது ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது தான். யோசனை எளிதானதுதான். தடுமாற்றமில்லாமல் செய்து பாருங்கள். கண் மேக்கப்பைப் அதிகமாகவும், கருத்த நிறமாகவும் மேக்கப் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றால், உங்கள் முகத்தின் மற்ற மேக்கப்பைக் குறைத்துக் கொண்டு எளிமையாக செய்து கொள்ள வேண்டும். உங்கள் உதடுகளை மையமாக வைத்து பளிச்சிடும் நிறத்துடன் உங்கள் தோற்றத்தை உங்கள் மாற்ற நீங்கள் முடிவு செய்தால், உங்கள் கண் மற்றும் முக மேக்கப்பை கொஞ்சம் எளிமையாக செய்து கொள்ள வேண்டும்.

பீபி பிக்ஸ் : Lakmé Eyeconic Volume Mascara

 

05. ஜான்வி கபூர் போன்று தேன் மற்றும் அவகேடோ ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும்

05. ஜான்வி கபூர் போன்று தேன் மற்றும் அவகேடோ ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும்

நல்ல கூந்தலைப் பெறுவதற்கு அதிக அக்கறையும் முயற்சியும் தேவை. எனவேதான், ஜான்வி கபூர் தனது கூந்தலை எப்போதுமே A1 ஆக வைத்திருக்கிறார். பழுத்த அவகேடோ, தேன், முட்டை மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த ஹேர் மாஸ்க்கினால் இந்த இளம் நடிகை தனது கூந்தலுக்கு நீர்ச்சத்தை அளிக்கவும், வலுப்படுத்தவும், கன்டிஷன் செய்யவும் மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிப்பதுடன், அதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறார். ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொள்வதற்கு நேரமில்லாத அளவுக்கு நீங்கள் அவ்வளவு பிஸியான நபராக நீங்கள் இருந்தால், உங்கள் கூந்தல் நல்ல ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு நல்ல பலனைத் தரக் கூடிய சிறந்த ஹேர் மாஸ்க்கை வாங்கிப் பயன்படுத்தி கொள்ளலாம்.

பீபி பிக்ஸ் : Dove Healthy Ritual For Strengthening Hair Mask

பிரதான பட உதவி : @saraalikhan95