வாழ்க்கையில் கச்சிதம் என்று சொல்லப்படுவது சரியாக இருக்கலாம், ஆனால் மேக்கப்பில் கச்சிதத்தை எட்ட முடியும் என்று பிரபலமான ஒருவர் ஒரு முறை சொன்னார். எனவே, நீங்கள் எங்களைப் போலவே இந்த மந்திரத்தை நினைத்துக் கொண்டே வாழ்கிறீர்கள் என்றால், அப்போது உங்கள் மேக்கப் நன்றாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மேக்கப் நன்றாக அமைவதற்கு உங்களுடைய அடித்தளம் சரியானதாக இருக்க வேண்டும் என்றாலும், இது உண்மையில், உங்கள் தோற்றத்தை உருவாக்கவோ அல்லது முறிக்கவோ உங்களுடைய கண் மேக்கப் தான் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எந்தவித காலங்களுக்கும் பொருந்தக்கூடிய,
பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து கண் மேக்கப்பை நாங்கள் தேர்ந்தெடுத்தோம், அவற்றை இப்போது பார்ப்போம்.
- 01. க்ருதி சனோனைப் போல ஸ்மோக்கி மேக்கப்பைப் போட்டுக் கொள்ளலாம்.
- 02. ஜாக்குலைன் ஃபெர்ணான்டஸ்ஸைப் போல் கண்களுக்கு அதிகமான வண்ணங்களைச் சேர்க்கவும்
- 03. சமந்தா அக்கினேனி போல் கோல்டன் ஐட் மேக்கப்பைப் போட்டுக் கொள்ளலாம்.
- 04. திஷா பதானி போல் ரேஜ் ரெட் மேக்கப்பைப் போட்டுக் கொள்ளலாம்.
- 05. தீபிகா படுகோன் போல் பச்சை நிறத்திற்கும் மாறலாம்.
01. க்ருதி சனோனைப் போல ஸ்மோக்கி மேக்கப்பைப் போட்டுக் கொள்ளலாம்.

புகைப்படம், நன்றி: @kritisanon
கண்களுக்கான இந்த ஸ்மோக்கி மேக்கப் பாணி எந்தக் காலத்திற்கும் அழியாது. நாங்கள் விளம்பரத்திற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே எங்களுடைய பிரபலங்கள், தங்கள் முழுமனதுடன் இதை அங்கீகரிக்கின்றனர். எல்லா தருணங்களிலும் பொருத்தமாக அமையும்படி உங்கள் கண்களில் ஒரு தீவிரமான பாலுணர்வைத் தூண்டும் கவர்ச்சியை தோன்றச் செய்யும். இந்த தோற்றத்தை உங்கள் கலாச்சார ஆடைகள் அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த கருப்பு நிற குட்டை கவுன் (LBD) இணைக்கலாம், எந்த வகையிலும், உங்களால் கவர்ந்திழுக்க முடியும்.
பி.பி பரிந்துரை: Lakmé Absolute Infinity Eyeshadow Palette - Midnight Magic
02. ஜாக்குலைன் ஃபெர்ணான்டஸ்ஸைப் போல் கண்களுக்கு அதிகமான வண்ணங்களைச் சேர்க்கவும்

புகைப்படம், நன்றி: @jacquelinef143
இந்த வருடம் வண்ணங்களுடன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ! நீங்கள் இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் போன்ற பிரகாசமானதாகவும், மனமகிழ்ச்சியை தரக் கூடிய வண்ணங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள், ஏனெனில் இந்த வருடம் உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் அனைவரும் பலவித வண்ணங்களைக் கொண்ட ஐ - டிரெண்டை உருவாக்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள் எந்தவித கூச்சமும் படாமல், உங்கள் கண்களுக்கு வண்ணங்களைப் பூசிக் கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது தான் இதன் குறிக்கோளாகும். உங்களை கண்கள் மேலும் கவர்ச்சி பெற இறுதியாக கருப்பு நிற ஐலைனரின் கோடுகளை இந்த வண்ணங்களுடன் சேர்க்கவும்.
பி.பி பரிந்துரை: Lakmé Absolute Infinity Eyeshadow Palette - Pink Paradise
03. சமந்தா அக்கினேனி போல் கோல்டன் ஐட் மேக்கப்பைப் போட்டுக் கொள்ளலாம்.

புகைப்படம், நன்றி: @samantharuthprabhuoffl
ஒரு சிறிய தங்கம் யாரை மனத்தையும் புண்படுத்தாது. இதற்காக நீங்கள் வெளியே செல்ல அவசியமில்லை ஏனென்றால், அதை உங்கள் ஐ லிட்களின் மையத்தில் தடவி, பழுப்பு நிற ஐ ஷேடோவுடன் கலக்கவும். உங்கள் கண்களை பழுப்பு நிற ஐலைனர் மூலம் கோடிட்டுக் கொண்டு, கொஞ்சம் கூடுதலாக மஸ்காராவையும் சேர்த்துப் பயன்படுத்தினால், உங்கள் கண்களால் வீழ்த்தப்படுவார்கள். எல்லா சந்தர்ப்பங்களுக்கும் இந்த தோற்றம் சிறப்பாக அமையும்.
பி.பி பரிந்துரை: Lakmé 9to5 Eye Quartet - Desert Rose
04. திஷா பதானி போல் ரேஜ் ரெட் மேக்கப்பைப் போட்டுக் கொள்ளலாம்.

புகைப்படம், நன்றி: @dishapatani
மின்னும் சிவப்பு நிறத்துடன் கூடிய கண் மேக்கப் மேலும் கவர்ச்சியை உங்கள் கண்களுக்கு சேர்க்கும். கண்ணின் உள் மூலையிலிருந்து கண்ணின் மையத்திற்கு சற்று முன்னால் வரை சிவப்பு நிறத்தை தடவி, மென்மையான பழுப்பு நிறத்தால் விளிம்புகளில் சேர்த்துப் பூசவும். உங்கள் கண்களின் அழகை மேலும் அதிகரிக்க உங்கள் ஐ லேஷ்களில் மஸ்காராவை சேர்க்க மறக்காதீர்கள். இது உங்களுக்கு வியப்பான மற்றும் மென்மையான நிறைவான அழகுத் தோற்றத்தை வழங்கும்.
பி.பி பரிந்துரை: Lakmé Absolute Infinity Eyeshadow Palette - Coral Sunset
05. தீபிகா படுகோன் போல் பச்சை நிறத்திற்கும் மாறலாம்.

புகைப்படம், நன்றி: @bebeautiful_india
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க உங்கள் கண்களில் சில மாயாஜாலங்களை காண்பிப்பதுதான் சிறந்த வழியாகும். கண்களை வண்ணங்கள் ஆதிக்கம் செய்யக்கூடிய ஆண்டாக இந்த வருடத்தின் டிரெண்டு அமைந்திருப்பதால், முடிந்தவரை பளிச்சென்று தோன்றும் வண்ணத்தையே தெரிவு செய்யுங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். உங்கள் தோற்றத்தை பலமடங்கு அதிகமாக தோற்றமளிக்க மரகத பச்சை நிறம் போன்ற வண்ணங்களையே நீங்கள் தெரிவு செய்யுங்கள். இது பிரமிப்பூட்டும் தோற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு சிறப்பான சில பாராட்டுக்களையும் சம்பாதித்துக் கொடுக்கும்
பி.பி பரிந்துரை: Lakmé 9to5 Eye Quartet - Royal Peacock
Main Image Courtesy: @samantharuthprabhuoffl
Written by Kayal Thanigasalam on Sep 12, 2021
Author at BeBeautiful.