பெமினாவின் சிறப்பிதழ் அட்டைப்படத்தில் நிகரில்லாத அனுஷ்கா சர்மா இடம்பெற்றிருந்தார். அவர் எல்லாவிதங்களிலும் ஆற்றல் மிக்கவராக தோற்றம் அளித்தார். மை தீட்டிய தீர்க்கமான விழிகளோடு, தூக்கி வாரப்பட்ட கூந்தல் மற்றும் குறைந்தபட்ச மேக்கப்புடன் அவர் கவர்ந்திழுத்தார். 

இந்த தோற்றம் எங்களை மிகவும் கவர்ந்ததால், அதன் ரகசியத்தை உங்களுக்கு அளிக்கிறோம்.

·சரியான இடங்களில் பளிச்

 

பெமினா அனுஷ்கா சர்மா அட்டைப்படம்

பெமினா அனுஷ்கா சர்மா அட்டைப்படம்

முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் கன்சீலருடன் சமமான தன்மையை உண்டாக்கிக் கொள்ளவும். கரீனா கபூர் கான் லாக்மே அப்சல்யூட் பேஸ் காண்டரை, உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஷேடில் முகத்திற்கு பயன்படுத்திக்கொண்டு, கொஞ்சம் அடர்த்தியான ஷேடை உங்கள் கன்னத்தில் பயன்படுத்திக்கொள்ளவும்.

கண்களுக்கு

லாக்மே ஐகானிக் காஜல் போன்ற அடர் கருப்பு பென்சில் லைனர் கொண்டு, கண் இறப்பைகளுக்கு மேலும் கீழும், கோடுகள் போட்டுக்கொள்ளவும். லாக்மே அப்சல்யூட் பிலட்டர் சீக்ரெட்ஸ் டிரமாட்டிக் ஐஸ் மஸ்கராவை இரண்டு அல்லது மூன்று முறை பூசிக்கொள்ளவும்.

புருவங்களுக்கு

லாக்மே அப்சல்யூட் பிரசிஷன் ஐ ஆர்டிஸ்ட் பென்சில்- டார்க் பிரவுனை கொண்டு புருவங்களை நிரப்பவும். புருவ உச்சியை அழகாக்குவதில் கவனம் செலுத்தவும்.

உதடுகளுக்கு

உதடுகளை நியூட் பீய்ஜ் பகுதியில் வைத்திருந்து, லாக்மே அப்சல்யூட் மேட்டே ம்லெட் லிக்விட் லிப் கலர் இன் மைல்ட் மாவே போன்ற,மேட்டே லிப்ஸ்டிக்கை பயன்படுத்தவும். உங்கள் கன்னப்பகுதியிலும் லேசாக பூசிக்கொள்ளலாம். உங்களுக்கு உதடுகளுக்கு ஏற்ற பொலிவை இது அளிக்கும். கண்கள் அழகையும் பாதிக்காது.

 

ஹைலைட்

ஹைலைட்

லாக்மே அப்சல்யூட் மூன் லிட் ஹைலைட்டர் போன்ற ஹைலைட்டரை கன்ன எலும்பு, மூக்கு, உதடு மேம் பகுதியில் பூசிக்கொண்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மின்னுவது போல தோற்றம் கொள்ளுங்கள்.

கூந்தலுக்கு

டோவ் ஆக்சிஜன் மாய்ஸ்சர் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கூந்தலை தயார் செய்து உலர வைக்கவும். பெரும்பாலும் காய்ந்தவுடன், ஹேர் ஜெல் தடவி பின் பக்கம் பரவிய தோற்றத்தை பெறவும்.