ஒரு காலத்தில் ஐலைனரினால் மேக்கப் செய்து கொள்வது என்பது ஒரு வேடிக்கையான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அனைத்தும் மாறிவிட்டன. மேலும், மற்ற எல்லாவற்றையும் போலவே, கண் ஒப்பனைப் பற்றிய நமது எண்ணத்திலும் ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு சில பேரை திரும்பிப்பார்க்க வைக்குமளவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு பழமையான ஐலைனர் தற்போது ஒரு வெளிப்படையாகவும்,மற்றும் ஆச்சரியமான ஐலைனராக மாறியுள்ளது. ஆனால் தற்போது இது வண்ணமயமான கிராஃபிக் ஐலைனர் மீண்டும் வரவழைத்திருக்கிறது. இந்த பாணியைப் பின்பற்றும் ஒரு ஐந்து பிரபலங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
01. டோஜா கேட்

Image Courtesy: @dojacat
இந்த பரபரப்பான ராப் பாடகரிலிருந்து இந்தப் பட்டியலைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை! இன்ஸ்டாகிராமில் அவரதுப் புகைப்படங்களை நகர்த்திப் பார்க்கும்போது, நம்ப மாட்டீர்கள், அவருடைய ஐமேக்கப்பின் ஸ்டைலுக்காகவே நீங்கள் அவரின் ரசிகராகி விடுவீர்கள். குறிப்பாக இந்த லுக்கிற்காகவே நாங்கள் அவரிடம் எங்கள் மனதை பரிகொடுத்து விட்டோம். அவருடைய கண்களுக்குச் ஜாலத்தை சேர்த்த பாப் வண்ணத்திற்கு நன்றி. பச்சை நிற ஐ-பென்சில் எடுப்பாக இருக்கிறது, ஒரு சாதாரணமான கருப்பு தடித்த ஐலைனரைப் போலவே இருந்திருக்கும். எனவே, அடுத்த முறை நீங்கள் ஏதாவது விருந்திற்குச் செல்லும்போது இந்த ஸ்டைலை முயற்சி செய்துப் பாருங்கள்
பீபி பிக்ஸ் : Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection - Mandarino
02. ஜிகி ஹடிட்

இதை ஜிகி செய்யும் போது அது பெரிய ட்ரெண்டிங்காகும் என்பது உங்களுக்குத் தெரியும்! வண்ண கிராஃபிக் ஐலைனரைப் முயன்று பார்க்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒரு வேடிக்கையான வழி வேண்டும். ஜிகி தனது கண்களைச் சுற்றி பழுப்பு நிறத்தில் ஒரு செம்மையான ஐலைனர் தோற்றத்தை வரைந்துள்ளார், இது அவரது கண்களுக்கு இயற்கையான பாப் அழகை அளிக்கிறது. அவர் இந்த லுக்கை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு, ஸ்ட்ரெய்ட் ஒயிட் ஃப்ளோட்டிங் கிராஃபிக் ஐலைனரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது உங்களின் பகல்நேரப் பயணங்களின் முழுவதிற்கும் ஒரு எளிய ஆனால் அருமையான யோசனையாகும்.
பீபி பிக்ஸ் : Lakmé Absolute Shine Line Eye Liner - Shimmery Bronze
03. லூசி பாய்ண்டன்

எந்தக் குறையுமில்லாத, வியப்பைத்தரும் இந்த தோற்றத்தைப் பாராட்ட நாம் சிறிது நேரம் ஒதுக்கலாமா? ஆம், லூசி பாய்ண்டனின் போட்டுக் கொள்ளும் இந்த வண்ண கிராஃபிக் ஐலைனர் தோற்றம் நிச்சயமாக அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். இமைகளின் மீது நீட்டிக்கப்பட்டு மற்றும் வாட்டர்லைனில் சிறிது வண்ணம் இருப்பதால், உங்களிடமிருந்து கொஞ்சம் தரமுள்ள மற்றும் சரியான தோற்றம் உங்கள் தேவைப்படும். ஆனால் நாங்கள் சொல்வதை நம்புங்கள், மாலையில் கிளப்பில் உங்கள் நண்பர்களுடன் செலவிடும்போது இது நிச்சயமாக அழகானத் தோற்றத்தை தரும்.
பீபி பிக்ஸ் : Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection - Raspberry
04. லேடி காகா

Image Courtesy: @mmirandalaurenn.com
லேடி காகாவும், அவருடைய தைரியமான மற்றும் அட்டகாசமான மேக்கப் பரிசோதனையும் ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொண்டுச் செல்கின்றன. அவளுடைய குரலைப் போலவே, இந்த வண்ண கிராஃபிக் ஐலைனரிலும் எந்தவிதக் குறையும் தெரியவில்லை! இந்த தோற்றத்தில் அவர் கண்களின் விளிம்பிற்கும்,புருவத்திற்கும் இடையில் வரையப்பட்ட கிராஃபிக் ஐலைனருடன், ஒரு கிளாசிக் பூணைக் கண்களை கொண்டவர். இந்த அழகை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். லேடி காகா போல் தோற்றமளிக்க நீங்கள் கிளாசிக் கருப்பும், வெள்ளையும் கலந்தக் கலவையை பயன்படுத்தலாம். அல்லது உங்கள் தோற்றத்தை அதிகரிக்க இளஞ்சிவப்பு அல்லது ஊதா போன்ற வெளிர் நிற ஷேட்களை முயன்றுப் பார்க்கலாம்.
பீபி பிக்ஸ் : Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection - Blackcurrant
05. வனேசா ஹட்ஜன்ஸ்

Image Courtesy: @allanface
எங்களைப் போலவே உங்களுக்கு வெளிர் நிற ஷேட்களை விரும்புகிறீர்கள் என்றால், வனேசா பயன்படுத்தும் இந்த வண்ணமயமான கிராஃபிக் ஐலைனரையும் நீங்கள் விரும்புவீர்கள் என்று நினைக்கிறோம். நெகட்டிவ் ஸ்பேஸ் மற்றும் ஃப்ளோட்டிங் க்ரீஸ் டிஸைன்களின் ஆகியவற்றின் இணைப்பாகும், இந்த தோற்றம் உங்கள் கண்களுக்கு மென்மையான மற்றும் ஆச்சரியமான தோற்றத்தை அளிக்கிறது. வனேசா ஹட்ஜன்ஸின் மேக்கப்பைப் போலவை நீங்களும் கருப்பும் தங்க நிறமும் சேர்ந்தக் கலவையை தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் கண்களுக்கு நன்றாக எடுத்துக் கொட்டக்கூடிய சில வண்ணங்களை முயற்சிக்கலாம்.
பீபி பிக்ஸ் : Lakmé Absolute Shine Line Eye Liner - Liquid Gold
முக்கிய பட உதவி : @mmirandalaurenn.com
Written by Kayal Thanigasalam on Dec 10, 2021
Author at BeBeautiful.