நீங்கள் ஒரு மேக்கப் பைத்தியமாக (எங்களைப் போலவே) இருந்தால், புதிதாக ஒரு ஐ-ஷேடோ பேலட் வாங்குவது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகவே இருக்கும். ஒரு ஐ-ஷேடோ போலட் மூலம் எத்தனை விதமான கண் அழகு…

ஆனால் அப்படிப்பட்ட ஐ-ஷேடோ போலட் உடைந்துபோனால். நமது இதயமும்தான் சுக்கு நூறாக உடைந்து போகும் அல்லவா. ஆனால் சில புதுமையான வழிகளில் உடைந்த ஐ-ஷேடோ பேலட் பல அழகிய வழிகளில் பயன்படும் என்பதை கற்பனை செய்திருக்கிறீர்களா. தெரிந்துகொள்ள வேண்டும் என ஆர்வம் அரிக்கிறதா. அதில் நான்கு அற்புதமான வழிகளை உங்களுக்கு இங்கே வழங்குகிறோம்.

 

01 ஐ-கிளாஸ்

ஐ-ஷேடோ பேலட் உடைந்தால் என்ன? அது புது விதத்தில் பயன்படுத்த 4 அற்புதமான வழிகள்

பளபளப்பாக மின்னும் கிளாஸ் மேக்கப்தான் இப்போது டிரென்ட் ஆகிறது. உங்களுக்குத் தெரியுமா? உடைந்த ஐ-ஷேடோ பேலட் மூலம் இந்த கிளாஸ் தோற்றத்தை எளிதாக உருவாக்க முடியும். உடைந்து போன ஷேடோவில் ஒன்றிரண்டு சொட்டு பேபி ஆயில் ஊற்றி, பிரஷ் மூலம் அதை அப்ளை செய்யலாம். அவ்வளவுதான். அசத்தான கிளாஸ் ஐ மேக்கப் ரெடி.

 

02. நெயில் பாலிஷ்

ஐ-ஷேடோ பேலட் உடைந்தால் என்ன? அது புது விதத்தில் பயன்படுத்த 4 அற்புதமான வழிகள்

புதுப் புது நெயில் பாலிஷ் கலர்களை உருவாக்க உடைந்து போன ஐ-ஷேடோ பேலட் சூப்பராக உதவும். ஷேட்களை நன்றாக மசித்து, க்ளியர் நெயில் பாலிஷ் பாட்டிலில் அதைக் கலக்க வேண்டும். நன்கு குலுக்கி மிக்ஸ் செய்ய வேண்டும். அப்படியே சில மணிநேரம் விடுங்கள். உங்களுக்கென ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட நெயில் பாலிஷ் ரெடி.

 

03. ஐ-லைனர்

ஐ-ஷேடோ பேலட் உடைந்தால் என்ன? அது புது விதத்தில் பயன்படுத்த 4 அற்புதமான வழிகள்

உடைந்த ஐ-ஷேடோ நல்ல ஐ-லைனராகவும் பயன்படும். ஐ-ஷேடோவை நன்றாக பொடியாக்கவும். அதில் சில சொட்டு பேபி ஆயில் சேர்க்கவும். கட்டி இல்லாமல் நன்கு கலக்கி, ஜெல் ஐ-லைனர் போன்ற வடிவத்திற்கு அதைக் கொண்டு வர வேண்டும். கூம்பு வடிவத்தில் இருக்கும் ஐ-ஷேடோ பிரஷ் மூலம் இதை ஐ-லேஷ் லைனில் பயன்படுத்தலாம்.

 

04. லிப் க்ளாஸ்

ஐ-ஷேடோ பேலட் உடைந்தால் என்ன? அது புது விதத்தில் பயன்படுத்த 4 அற்புதமான வழிகள்

உடைந்த ஐ-ஷேடோ ஒரு நல்ல லிப் க்ளாஸ். அதைச் செய்வதும் ஈஸி. Vaseline Original Pure Skin Jelly இருந்தால் போதும், அதைச் செய்துவிடலாம். அதோடு, நன்கு பொடியாக்கிய ஐ-ஷேடோவும் மாவு போல பொடியாக்கிய ஐ-ஷேடோவும் இருந்தால் போதும். நீங்கள் விரும்பும் நிறத்திற்கு ஏற்ப இரண்டையும் மிக்ஸ் செய்தால், உங்களுக்குப் பிடித்தமான லிப் க்ளாஸ் தயார்.