நீங்கள் மேக்கப்பைப் போட்டும் கொள்ளும் போது செய்யும் எல்லா தவறுகளினால் உங்களின் அடித்தள தளத்தை குழப்பி ஒரு மோசமான நிலையை உருவாக்குகிறீர்கள். ஃபௌண்டேஷனை சரியான முறையில் கலந்து, உங்களுக்கேற்ப அமைப்பது என்பது ஒரு கலையாகும், மேலும் அந்த குறைபாடற்ற சருமத்தை நீங்கள் பெற வேண்டுமானால் அதற்கு உங்களுக்கு பொறுமையும், நீண்ட காலஅவகாசமும் தேவைப்படும். குறைபாடற்ற அடித்தளத்தை உருவாக்க வேண்டுமானால், சரியான அழகுச் சாதனம் மற்றும் மேக்கப்பை தேர்ந்தெடுப்பதிலிருந்து உங்கள் சருமத்திற்கு சரியான சிகிச்சை அளிப்பது வரை நீங்கள் எந்தக் குறுக்கு வழியிலும் செல்லக் கூடாது. எனவே, குறிப்புகளை எழுதிக் கொள்வதற்கு பேனாவையும் காகிதத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உடனடியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட ஒரு குறைபாடற்ற அடித்தளத்தை அடைவதற்கான ஐந்து எளிய வழிகளை நாங்கள் வரைபடமாக்கி வைத்துள்ளோம்.

 

வழிமுறை #1: சுத்தம் செய், வலிமையாக்கு, மாஸ்யரைஸ் செய்

வழிமுறை #1: சுத்தம் செய், வலிமையாக்கு, மாஸ்யரைஸ் செய்

சுத்தப்படுத்துதல், வலிமையாக்குதல் மற்றும் மாஸ்யரைஸ் செய்தல் ஆகியவைகள் ஒரு ஆரோக்கியமான, ஹைட்ரேட் செய்யப்பட்ட சருமத்திற்கான அற்புத விதியாகும். வறண்ட மற்றும் டீஹைட்ரேட செய்யப்பட்ட சருமம் உங்களுடைய மேக்கபை ஒட்டும் படியாகவும், சீரற்றதாக தோன்றச் செய்யும். எனவே, உங்கள் அடித்தளத்தை சரி செய்ய வேண்டும், அதற்கு முதலில் சுத்தப்படுத்துதல், வலிமையாக்குதல் மற்றும் மாஸ்யரைஸ் செய்தல் ஆகிய இந்த அடிப்படையான வழக்கத்தை பின்பற்ற தொடங்க வேண்டும். அசுத்தங்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற Simple Kind To Skin Moisturising Facial Wash போன்ற சோப்பு இல்லாத மென்மையான க்ளீன்சர் மூலம் உங்கள் சருமத்தை நன்றாகச் சுத்தப்படுத்தத் துவங்குங்கள். அதைத் தொடர்ந்து, உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதற்கும், சருமத் துவாரங்களை இறுக்கமாக்குவதற்கும் உதவுவதற்காக, Lakmé Absolute Pore Fix Toner ரைப் பயன்படுத்துங்கள். இறுதியாக உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து மாஸ்யரைஸ் செய்வதற்கு Ponds Light Moisturiser Non-Oily Fresh Feel With Vitamin E + Glycerine போன்ற லைட் மாய்ஸ்சரைசருடன் இந்த வழிமுறையை பூர்த்தி செய்யவும். அடிப்படையில், குறைபாடற்ற மேக்கப்புக்கு சரியான கேன்வாஸாகவும், உங்களுக்கு மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறவும், இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 

வழிமுறை #2 : ப்ரைமரைப் பயன்படுத்துங்கள்.

வழிமுறை #2 : ப்ரைமரைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் சருமத்தை தயார்படுத்திய பிறகு, உங்கள் முகத்திற்கு ப்ரைமரைப் பயன்படுத்துங்கள். Lakmé Absolute Undercover Gel Primer. போன்ற ஜெல் அடிப்படையிலான ப்ரைமரைப் பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்தை மென்மையாக்கி, கறைகளை அகற்றி, நீங்கள் ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதற்கேறப் ஒரு சுத்தமான கேன்வாஸை, வைட்டமின் ஈ மூலம் செறிவூட்டப்பட்ட இந்த ப்ரைமர் வழங்குகிறது. உங்கள் மேக்கப்பை நீண்ட நேரம் நீடித்திருக்கும்படி செய்வதால், இந்த வழிமுறையை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.

 

வழிமுறை #3 : ஃபௌண்டேஷன் பயன்படுத்துங்கள்

வழிமுறை #3 : ஃபௌண்டேஷன் பயன்படுத்துங்கள்

உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய பௌண்டேஷன் பயன்படுத்தும் பகுதிக்கு வரலாம். the Lakmé 9 to 5 Primer + Matte Perfect Cover Foundation போன்ற ஒரு பௌண்டேஷன் முழுவதையும் எடுத்து, உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் தெளித்துக் கொள்ளுங்கள். பின்னர், ஒரு பௌண்டேஷன் ஃப்ரஷ் அல்லது ஈரமான அழகு ஸ்பான்ச்சை பயன்படுத்தி, உங்கள் காதுகளை நோக்கிபௌண்டேஷனை வெளிப்புறமாக கலக்கவும். குறைபாடற்ற, வரிவரியாக இல்லாத அடித்தளத்தை உருவாக்க உங்களுக்கு இது உதவும். இந்தியாவிலுள்ள அனைவருடைய சருமத்திற்கேற்ப, இந்த லக்மேயின் பௌண்டேஷன்கள் 16 ஷேட்களில் வருகிறது, எனவே உங்கள் பொருத்தமானதை கண்டுபிடிப்பதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை

 

வழிமுறை #4 : கன்சீலர் பயன்படுத்த மறக்காதீர்கள்

வழிமுறை #4 : கன்சீலர் பயன்படுத்த மறக்காதீர்கள்

இன்னும், பிடிவாதமான கறைகள் ஆங்காங்கே தென்படுகிறதா? Lakmé Absolute White Intense Concealer Stick. போன்ற நல்ல கன்சீலர் உங்களுக்கு தேவைப்படுகிறது. சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கக் கூடிய (SPF 20), இந்த கன்சீலர் மூன்று ஷேட்கள் வருகிறது. இது அனைத்து கறைகள் மற்றும் கருவளையங்களை அகற்ற உதவுகிறது. அதைத் தவிர உங்கள் முகத்தில் உள்ள அனைத்து நிறமாற்றங்களையும் மறைக்க உதவும், அதே நேரத்தில் சூரிய வெப்பத்திலிருந்து பாதிப்புகளிலிருந்து அதைப் பாதுகாக்கிறது. உங்கள் கண்களின் கீழ்ப்பகுதி, கரும்புள்ளிகள் மற்றும் கறைகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளில் மட்டுமே இதைப் பயன்படுத்துங்கள்.

 

வழிமுறை #5 : கலையாமலிருக்கு செட்டிங் பவுடர் பயன்படுத்துங்கள்

வழிமுறை #5 : கலையாமலிருக்கு செட்டிங் பவுடர் பயன்படுத்துங்கள்

கடைசி கட்டத்திற்கு வந்துள்ளோம், டிரான்ஸ்லூஸண்ட் செட்டிங் பவுடரை கொஞ்சமாகப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பவுடர் பௌண்டேஷன் நீண்ட நேரம் நீடித்திருக்க உதவுகிறது. அதிகப்படியான மேக்கப்பை உறிஞ்சுவதுடன், இயற்கை நிறைவை அளிக்க இந்த பவுடர் உதவுகிறது. இந்த படிக்கு Lakmé 9to5 Naturale Finishing Powder ஐப் பயன்படுத்துங்கள். இந்த மென்மையான ஃபினிஷிங் பவுடர், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச எடுக்கவல்ல கற்றாழை மற்றும் க்ரீன் டீ சாறு போன்ற உட்பொருட்களை உள்ளடக்கியது. அவை. ஒரு பெரிய பஞ்சுபோன்ற ப்ரஷ்ஷில் இந்தப் பவுடரை எடுத்து, தொட்டியில் போட்டு சுழற்றி, உங்கள் பௌண்டேஷனை தடவிய உங்கள் முகமெங்கும் மெதுவாக தூவுங்கள். உதவிக்குறிப்பு : குறைபாடற்ற அடித்தளத்தின் அடுத்துப் படிக்க செல்ல நீங்கள் விரும்பினால், அதற்கு தற்போது மிகவும் பிரசித்தமாக இருக்கும் ஜாம்சு - வைரல் கே-ப்யூட்டி டிரெண்டை நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டும் – அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது மேலே உள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிய பின்னர், சுமார் 15-20 விநாடிகளுக்கு உங்கள் முகத்தை மிகவும் ஐஸ் போன்ற குளிர்ந்த நீரில் முகத்தை மூழ்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! குளிர்ந்த நீரானது, உங்கள் சருமத் துவாரங்களை அழுக்குப் படியாமல் மூடி, உங்கள் சருமத்திற்கு ஹைட்ரேட் செய்வதோடு, அதிகப்படியான மேக்கப்பை அகற்ற உதவுகிறது. இந்த டிரெண்டிற்கு பெல்லா ஹடிட் கூட சாட்சியாக உள்ளது. எனவே இதை ஏன் நீங்களும் முயற்சி செய்துப் பார்க்கக் கூடாது.