இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் வீட்டிலேயே சூப்பரான நக அழகைப் பெறுவது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய கலை. நக அழகு நிலையங்கள் இப்போதைக்குத் திறக்கப் போவதில்லை என்பதால் நமக்கு நாமே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் நகத்திற்குத் தேவையான கவனத்தைக் கொடுக்கும் கலை ஈஸியானது அல்ல. அதுவும் நக அழகை நீண்ட நாள் நீடிக்கச் செய்வது ரொம்ப கஷ்டம். அட, ஜெல் நெயில் பாலிஷ் போட்டுக்கலாம் என்று நினைப்பவர்கள் கவனத்திற்கு. அதை நீக்குவதற்குள் படாத பாடு படுவீர்கள். சரி, நீண்ட நாள் நிலைத்திருக்கும் நக அழகு பெறுவது எப்படி? ரிமூவர் பயன்படுத்தாமல் இரண்டு வாரங்கள் இருக்கும்படி செய்ய முடியுமா? அதை வீட்டிலேயே, நீங்களே செய்ய முடியுமா? இதோ, டிப்ஸ் உங்கள் கையில்.
- 01. ஹெல்தியான, நீளமான நகத்தின் ரகசியம்
- 02. கட் செய்யாதீர்கள், ஃபைல் செய்யுங்கள்
- 03 மெல்லிசாக மேல் பூச்சு செய்யவும்
- 04. வூட் ஸ்டிக்ஸ் பயன்படுத்துங்கள்
- 05. க்ளியர் நெயில் பெயின்ட் பயன்படுத்தவும்
01. ஹெல்தியான, நீளமான நகத்தின் ரகசியம்

பலவீனமான, எளிதில் உடையக்கூடிய நகம் வளைந்து போவது சகஜம். முதலில் கியூடிக்கல் ஆயில் பயன்படுத்த மறக்காதீர்கள். அதன் பிறகு நகத்திற்கு பலம் கொடுக்கும் பேஸ் கோட் பயன்படுத்த வேண்டும். நகத்தை நீளமாக வளர்க்கும் போது இது கட்டாயம் தேவைப்படும். நகம் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை இது உறுதி செய்யும். நக பாலிஷ் பிய்ந்து வருவதற்கான வாய்ப்பையும் இது குறைக்கும்.
02. கட் செய்யாதீர்கள், ஃபைல் செய்யுங்கள்

நக வெட்டியால் கட் செய்யும் போது நகத்தில் கூர்மையான திருப்பங்கள் ஏற்படும். ஆனால் வளைவான நகங்களில் பாலிஷ் செய்வது ஈஸி. அதனால் நெயில் கட்டர் பயன்படுத்தாமல் நெயில் ஃபைல் பயன்படுத்தினால் பாலிஷ் நீண்ட நாள் நிலைத்து இருக்கும். நகத்தின் நீளத்தைக் குறைக்கவும் ஷேப் செய்யவும் நெயில் ஃபைல் சிறந்தது.
03 மெல்லிசாக மேல் பூச்சு செய்யவும்

நீண்ட நாள் நிலைக்க வேண்டும் என்பதற்காக பாலிஷ் மேல் பாலிஷ் போடுவரா நீங்கள். உங்களுக்குத் தெரியுமா? நெயில் பாலிஷ் அடர்த்தியாக இருந்தால் காய்வதற்கு அதிக நேரமாகும். அது மட்டுமல்ல. நக பாலிஷ் பளபளப்பாக இருக்காது. அதற்கு பதில் மெல்லிசாக இரண்டு லேயர் நெயில் பெயின்ட் பயன்படுத்துங்கள். இது அற்புதமான ஃபினிஷிங் கொடுக்கும். நீண்ட காலம் நிலைத்திருக்கும். சிப் ஃப்ரீ நெயில் பாலிஷ் ரகங்களை தேர்ந்தெடுப்பது உங்கள் வேலையை சுலபமாக்கும்.
BB picks: Lakmé 9 to 5 Primer + Gloss Nail Color
04. வூட் ஸ்டிக்ஸ் பயன்படுத்துங்கள்

நக அழகுக் கலைஞர்கள் பயன்படுத்தும் நீளமாக, வளைவாக இருக்கும் வூட் ஸ்டிக்ஸ் பார்த்திருக்கிறீர்களா? நகமும் சதையும் இணையும் இடத்தை சுத்தம் செய்ய அவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். உங்களுக்குத் தெரியுமா? அவை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. நெயில் பாலிஷ் பிசிறுகளை நீக்க இதை நீங்கள் பயன்படுத்தலாம். காட்டன் ஸ்வாப்களைவிட இது சிறந்த பலன் கொடுக்கும். மிக ஈஸியாகவும் இருக்கும்.
05. க்ளியர் நெயில் பெயின்ட் பயன்படுத்தவும்

முதல் பூச்சு (பேஸ் கோட்) பயன்படுத்திய பிறகு உங்கள் விருப்பத்திற்குரிய நெயில் கலரை தேர்வு செய்யவும். அதன் பிறகு மேல் பூச்சும் அதற்கடுத்து க்ளியர் நெயில் பெயின்ட்டும் பயன்படுத்த வேண்டும். முழுமையாக இரண்டு வாரங்கள் நக அழகு நிலைத்திருக்கச் செய்யும் ரகசியம் இதுதான். ஒவ்வொரு லேயர் நன்றாக காய்ந்த பிறகே அடுத்த லேயர் செல்ல வேண்டும்.
Written by Kayal Thanigasalam on Oct 23, 2020