அழகாக இருக்க அவற்றை குளிர்ச்சியாக வைத்திருங்கள் எனலாம். எடுப்பதற்கு வசதியாகவும் கைக்கு எட்டும் தொலைவில் குளியலறை அலமாரியிலேயே அழகு சாதனங்களை வைத்திருக்கும் வழக்கம் பலருக்கு இருக்கலாம். ஆனால், ஒரு சில அழகு சாதனப்பொருட்கள் பிரிட்ஜில் வைத்திருந்தால், மேலும் நன்றாக செயல்படும் மற்றும் நீடித்து உழைக்கும் என்பது உங்களுக்குத்தெரியுமா? ஒரு சில பொருட்களை உங்கள் குளியலறையில் இருந்து பிரிட்ஜிக்கு மாற்றுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். எந்த பொருட்களை எல்லாம் மாற்ற வேண்டும் என அறிய வேண்டுமா? மேலும் படியுங்கள்...

கண் கிரீம்கள்
 

கண் கிரீம்கள்

கண் கிரீம்கள் கண்களை சுற்றி உப்பிய தோற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை. கண்களுக்கு கீழ் உள்ள பகுதியை மேலும் விரைவாக சீராக்க, கண் கிரீம்களை பிரிட்ஜில் குளிர்ச்சியாக வைத்திருக்கவும். கிரீம் குளிர்ச்சியாக இருக்கும்போது, அது இரத்த நாளங்களை சுருக்கி, உப்பிய தன்மையை குறைக்கிறது.

பேஸ் மிஸ்ட்ஸ்
 

பேஸ் மிஸ்ட்ஸ்

உங்கள் முகத்தின் மீது பனிக்கட்டிகளை தேய்ப்பதன் மூலம், அது உடனடியாக துளைகளை இறுகச்செய்து, உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெற வைக்கிறது. குளிர்ச்சியான பேசியல் மிஸ்டை தெளித்துக்கொள்வதும், இதே பலனை அளிக்கிறது. உங்கள் சருமம் நீர்சத்து இல்லாமல் உணரும் கோடை காலங்களில் இது மிகவும் பலன் அளிக்க கூடியது.

நைல் பாலிஷ்
 

நைல் பாலிஷ்

உங்கள் நைல் பாலிஷ் கெட்டியாகி, வண்ணம் பாதிக்கப்படுவதை வெறுக்கிறீர்களா? உங்கள் பிரிட்ஜில் நைல் பாலிஷுக்கு கொஞ்சம் இடம் அளிப்பது நல்லது. ஆனால், நைல் பாலிஷின் விஸ்காசிட்டி குளிர்ச்சியில் அதிகரிப்பதால், பயன்படுத்துவதற்கு முன் பிரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்ப நிலையில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

ஆலோ
 

ஆலோ

பல்வேறு வகையான சரும மற்றும் கூந்தல் பிரச்சனையில் இருந்து ஆலோ வேரா நிவாரணம் அளிக்கிறது. ஆலோ வேராவை பிரிட்ஜில் வைதிருப்பது அதன் ஆயுலை அதிகமாக்கி, சருமத்தை மென்மையாக்குகிறது. சூரிய ஒளி பாதிப்பில் இது இன்னும் பொருந்தும்.

பேஸ் மாஸ்க்
 

பேஸ் மாஸ்க்

உங்கள் பிரிட்ஜில் வைக்க வேண்டியவை ஷீட் மாஸ்குகள் மட்டும் அல்ல. உங்கள் பேஸ் மாஸ்கில் ஆலோ வேரா, ஹைட்ராலில் அமிலம் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், அவற்றை குளிர்ச்சி பெற வைப்பது, மென்மையான தன்மையை ஏற்படுத்தி, சருமத்தின் மீது இதம் அளிக்கும்.