கூந்தல் மற்றும் சருமத்தின் மீது தேங்காய் எண்ணெயைப் பூசிக்கொள்வதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி நமக்கு தெரிந்ததுதான். ஆனால், தேங்காய் துருவலை சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கு நலன் தருவது என்பது தெரியுமா? தேங்காயை தினமும் சாப்பிடுவது அலுப்பாக இருக்கலாம். அதனால், தேங்காய் பயன்படுத்தி தயாரிக்க கூடிய மூன்று சுவையான தேங்காய் உணவு தயாரிப்பு முறையை கொடுத்துள்ளோம்.

 

தேங்காய் மற்றும் மஞ்சள் ஸ்மூத்தி

தேங்காய் மற்றும் மஞ்சள் ஸ்மூத்தி

இது தூண்டுவதாக இல்லாமல் போகலாம். ஆனால், நாங்கள் சொல்வதை நம்புங்கள், இந்த ஸ்மூத்தி சுவையானது மட்டும் அல்ல. ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட. மஞ்சளில் முதுமைக்கு எதிரான குர்குமின் இருக்கிறது. இது உங்கள் சருமத்தை பிரிரேடிகல் பாதிப்பில் இருந்து காத்து முதுமையில் இருந்து காக்கிறது. தேங்காயில் இருக்கும் வைட்டமின் ஈ உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. கூடுதல் சுவைக்காக வாழைப்பழம் மற்றும் அன்னாசி பழத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். வாழைப்பழம் சுருக்கங்களை குறைத்து கோடுகள் விழுவதையும் தடுக்கிறது.

செய்முறை:

ஒரு கோப்பை தேங்காய் பாலை எடுத்துக்கொண்டு, 1/2 கோப்பை அன்னாசி மற்றும் வாழைப்பழ துண்டுகளை தனித்தனியே, ஒரு தேக்கரண்டி மஞ்சளுடன் எடுத்துக்கொள்ளவும். இவற்றை நன்றாக கலக்கவும். சுவை மிக்க இந்த ஸ்மூத்தி உங்கள் சருமம் வயோதிகம் பெறுவதை தடுக்கும். 

 

இளநீர் மற்றும் கிவி ஸ்மூத்தி

இளநீர் மற்றும் கிவி ஸ்மூத்தி

உங்களுக்கு உலர் சருமம் இருக்கிறதா? அதை உள்ளிருந்து சரி செய்ய விரும்புகிறீர்களா? எனில் உங்களுக்கு ஏற்றது இது. இளநீர் மற்றும் கிவி ஸ்மூத்தி ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் உங்களுக்கு பொலிவான ஆரோக்கியமான சருமத்தை அளிக்கும். இளநீர் மிகச்சிறந்த நீர்சத்து அளிப்பது என்பதால், உங்கள் சருமத்தை உள்ளிருந்து பராமரிக்கும். கிவியில் அதிகம் உள்ள கொலாஜன், உங்கள் சருமம் உலர்வதை தடுத்து மென்மையாக வைத்திருக்கிறது. 

செய்முறை:

ஒரு கோப்பை இளநீருடன் ஒரு கோப்பை கிவி மற்றும் லு கோப்பை வாழைப்ப்ழ துண்டுகளை நன்றாக கலக்கவும். இந்த ஸ்மூத்தி உங்கள் உலர் சருமத்தை ஊட்டச்சத்து பெற வைக்கவும்.

 

பசுமை தேங்காய் ஸ்மூத்தி

பசுமை தேங்காய் ஸ்மூத்தி

ஸ்மூத்திகள் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் ஏற்றது எனத்தெரியும். எனவே பரு இல்லாத மென்மையான சருமம் தான் உங்கள் இலக்கு என்றால், காலை உணவுக்கு இந்த ஸ்மூத்தியை பரிந்துரைக்கிறோம். ஏனெனில், இந்த ஸ்மூத்தி ஸ்பினாக் போன்ற பசுமை உணவு நிறைந்துள்ளது. இவை, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன. வெள்ளரி சருமத்திற்கு அமைதி அளித்து, புண்களை ஆற்றுகிறது. தேங்காயில் உள்ள கிருமிநாசினி தன்மை பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து மென்மையான சருமத்தை அளிக்கிறது. 

செய்முறை:

இரண்டு கோப்பை ஸ்பினாக்கை, 1/2 கோப்பை வெள்ளரி, 11/2 கோப்பை தேங்காய் துருவல் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்ந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பசுமை ஸ்மூத்தி பருக்கள் இல்லாத சருமம் தர வல்லது. எனவே, இந்த ஸ்மூத்திகளில் ஒன்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.