கூலிங் கிளாஸ் உங்கள் ஃபேஷன் அடையாளமாக இருக்கும். ஆனால் காற்றில் ஈரப் பதம் அதிகம் இருக்கும் போது சுரப்பிகள் ஓவர் டைம் ஒர்க் செய்யும். இதனால் மேக்கப் கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளும். சில மணி நேரங்களில் மூக்கில் மட்டும் மேக்கப் இருக்காது. கொடுமையாக இருக்கிறதா… கவலை வேண்டாம். இதோ டிப்ஸ்… உங்கள் மேக்கப் கூலிங் கிளாஸ் அணிவதால் சிதையாமலிருக்கும் மேக்கப் வகைகள் இப்போது வைரலாகி வருகின்றன. இதைப் பயன்படுத்த ஐந்து நிமிடம் போதும். ஆச்சரியமாக இருக்கிறதா… இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி…

கூலிங் கிளாஸ் உங்கள் மேக்கப்பை சிதைக்காமலிருக்க டிப்ஸ்

ஸ்டெப் 01: முதலில் Lakmé Absolute Undercover Gel Primer முகம் முழுக்க அப்ளை செய்யுங்கள். பிறகு மூக்குப் பகுதியில் மட்டும் ஐ ப்ரைமர் பயன்படுத்துங்கள்.
ஸ்டெப் 02: அடுத்து, மூக்கில் கன்சீலர் பயன்படுத்துங்கள். கூலிங் கிளாஸ் மூக்கின் மீது அமரும் பகுதியில் கவனம் செலுத்துங்கள். பிறகு மேட் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும். Lakmé Absolute Mattereal Mousse போன்ற பிராண்ட்களை பயன்படுத்தலாம். இதை முகம் முழுவதும் பயன்படுத்த வேண்டும்.
ஸ்டெப் 03: இந்த மூன்றாவது ஸ்டெப்பில்தான் ரகசியம் உள்ளது. செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி உங்கள் பியூட்டி ப்ளென்டரை ஈரப்படுத்துங்கள். பிறகு கொஞ்சம் லூஸ் பவுடர் பயன்படுத்துங்கள். பிறகு பிளென்டர் எடுத்து இதமாக அப்ளை செய்யுங்கள் (தேய்க்க வேண்டாம்). நல்ல பலன் வேண்டும் என்றால் Lakmé 9 to 5 Naturale Finishing Powder போன்ற மினரல் ஃபார்லா கொண்ட பொருளைப் பயன்படுத்த வேண்டும். மூக்குப் பகுதியில் பவுடர் படிய சில நிமிடம் விடவும். அதன் பிறகு கூடுதலாக இருப்பதை ப்ரஷ் மூலம் நீக்கவும். இதோ கூலிங் கிளாஸ் பாதிப்பு இல்லாத மேக்கப் தயார்.