இயற்கையாகவே உங்கள் சருமத்தில் ஷைன் அதிகம் என்றால் சரியான மேக்கப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது பிரச்சனைதான். சரும துளைகளில் அடைப்பு ஏற்படுத்தாத, நாள் முழுவதும் நீடித்திருக்கும் மேக்கப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க நேர்வதுதான் பிரச்சனை. ஆனால் கவலை வேண்டாம். ஆயில் அதிகம் சுரக்கும் பெண்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ்ட் இதோ…

மேட் ஃபினிஷ் கொடுக்கும் இவற்றின் தன்மையும் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் ஆற்றலும் பலன் கொடுக்கும். இதனால் மேக்கப் பயன்படுத்திய பிறகு சருமத்தில் ஆயில் படிந்தது போல இருக்காது. நாள் முழுவதும் சருமம் மாசில்லாமல் ஜொலிக்கும்.

 

01. மேக்கப் கரையாமல் தடுக்கும் மேட் ப்ரைமர்

01. மேக்கப் கரையாமல் தடுக்கும் மேட் ப்ரைமர்

உங்களுக்கு ஆயில் சருமமா? நீ பயன்படுத்த வேண்டிய முதல் மேக்கப் சாதனமே ப்ரைமர்தான். மேக்கப் அதிக நேரம் கரையாமல் இருக்கும். அதோடு சரும துளைகளும் கரும் புள்ளிகளும் அசிங்கமாகத் தெரியாமல் காக்கும். சருமத்திற்கு மிருதுவான, சமநிலை கொண்ட தோற்றம் கிடைக்கும். மற்ற மேக்கப் பொருட்கள் சரியாக அமைய இது உதவும். பி.பி பிக்ஸ்: Lakme Absolute Under Cover Gel Face Primer

 

02. சரும துளைகளையும் பிற குறைகளையும் மறைக்கும் மேட் ஃபவுண்டேஷன்

02. சரும துளைகளையும் பிற குறைகளையும் மறைக்கும் மேட் ஃபவுண்டேஷன்

ஃபவுண்டேஷன் இல்லாத மேக்கப் கிட் உலகில் எங்கும் கிடையாது. ஆயில் சருமத்திற்கான ஃபவுண்டேஷன் என்று வரும் போது ட்யூவ் ஃபார்முலாக்களை தவிர்ககலாம். மேட் ஃபினிஷ் நல்ல சாய்ஸ். அதிகமாக சுரக்கும் ஆயிலை உறிஞ்சும் சக்தி கொண்டது மேட் ஃபினிஷ் ஃபவுண்டேஷன். இதனால் உங்கள் சருமம் நாள் முழுவதும் மாசில்லாமல், ஆயில் வழியாமல் அழகாக இருக்கும். பி.பி. பிக்ஸ்: Lakme 9 To 5 Primer + Matte Perfect Cover Foundation

 

03.பிசுபிசுப்பாக மாறாத ஃபுல் கவரேஜ் கன்சீலர்

03.பிசுபிசுப்பாக மாறாத ஃபுல் கவரேஜ் கன்சீலர்

ஒரு பாட்டில் கன்சீலர் இல்லாமல் சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா? கரு வளையங்களை, பருவின் தடங்களை, சிறு சிறு குறைகளை, கரும் புள்ளிகளை மறைப்பது உள்ளிட்ட பல ரோல்கள் கன்சீலர்களுக்கு உண்டு. ஆனால் ஃபவுண்டேஷன் போலவே மேட் ஃபினிஷ் கன்சீலரையே தேர்ந்தெடுக்க வேண்டும். பிசுபிசுப்பும், கரைதலும் ஏற்படாமல் தடுக்கும். நாள் முழுவதும். பி.பி பிக்ஸ்: Lakme Absolute Mattreal Mousse Concealer

 

04. ஓவர் ஷைன் வராமல் தடுக்கும் எஸ்.பி.எஃப் கொண்ட செட்டிங் பவுடர்

04. ஓவர் ஷைன் வராமல் தடுக்கும் எஸ்.பி.எஃப் கொண்ட செட்டிங் பவுடர்

ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு இது கட்டாயம் தேவை. பேஸ் அமைத்த பிறகு அதன் மீது செட்டிங் பவுடர் பயன்படுத்த வேண்டும். அதிக சீபம் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது மூலம் மேக்கப் கரைவதைத் தடுப்பதோடு, மேக்கப் நீண்ட நேரம் இருப்பதற்கும் செட்டிங் பவுடர் உதவும். முகத்தில் எங்கெல்லாம் ஆயில் சுரப்பது அதிகம் தெரிகிறதோ அங்கெல்லாம் செட்டிங் பவுடர் பயன்படுத்தலாம். பி.பி. பிக்ஸ்: Lakme Sun Expert Ultra Matte SPF 40 Pa+++ Compact

 

05. பிசுபிசுப்பு, வழிந்தோடுவதைத் தடுக்கும் மேட் ஐ ஷேடோ பேலட்

05. பிசுபிசுப்பு, வழிந்தோடுவதைத் தடுக்கும் மேட் ஐ ஷேடோ பேலட்

ஐ ஷேடோ நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று. பவுடர், மேட் ஃபார்முலாக்களே அதற்கு சிறந்தது. இது நீண்ட நேரம் இருக்கும் என்பதோடு கண் மேக்கப் கலையாமலும் காக்கும். பி.பி. பிக்ஸ்: Lakme Absolute Infinity Eye Shadow Palette

 

06. சரும துளைகள் உருத்தலாகத் தெரிவதைத் தடுக்கும் பவுடர் ப்ளஷ்

06. சரும துளைகள் உருத்தலாகத் தெரிவதைத் தடுக்கும் பவுடர் ப்ளஷ்

க்ரீம் ப்ளஷ் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதில் பவுடர் ப்ளஷ் பயன்படுத்துங்கள். பவுடர் ப்ளஷ் எளிதாக உங்கள் சருமத்தோடு ஒத்துப் போகும். நாள் முழுவதும் அழியாமலும் இருக்கும். பி.பி பிக்ஸ்: Lakme Absolute Face Stylist Blush Duos

 

07.உங்களுக்குப் பிடித்த லிப்ஸ்டிக்

07.உங்களுக்குப் பிடித்த லிப்ஸ்டிக்

அது யாரின் மேக்கப் கிட் என்பது விஷயம் அல்ல. ஆனால் லிப்ஸ்டிக் இல்லாமல் அந்த கிட் முழுமை பெறாது. மேட், சாட்டின், க்ரீமி என பல ஃபார்முலாக்களில் இவை கிடைக்கின்றன. அதை உங்களின் தனிப்பட்ட சாய்ஸின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் எந்த லிப்ஸ்டிக் தேர்ந்தெடுத்தாலும் அதை அப்ளை செய்வதற்கு முன்பு போதுமான அளவு லிப் பாம் பயன்படுத்துவதை மறக்கக்கூடாது. இது உதடுகள் நீர்ச் சத்துடன் இருப்பதோடும் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்யும்.

பி.பி பிக்ஸ்: Lakme Absolute Matte Revolution Lip Color