அன்றாடம் உங்களை அழகுபடுத்திக் கொள்வதற்காக வழக்கமாக நீங்கள் செய்பவைகள் ரொம்ப சலிப்பாகவும், சோர்வாகவும் உள்ளதாக வேறு சிலவற்றை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக இல்லை. தயாரிப்புப் பொருட்களின் சங்கமம் என்பது ஒரு அழகியல்
செய்முறையாகும். இதில் ஒன்றாக சேரக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை கலந்து உங்களுக்காகவே பிரத்யேகமான அழகு சாதனப் பொருட்களை தயாரித்துக் கொள்வதாகும். மௌஸ், க்ரீம் மற்றும் சூரியக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் சீரம் போன்றவற்றை வாங்காமலே உங்கள் அழகு சாதனப் பொருட்களை நீங்களே தயாரித்துக் கொள்ள இது உதவுகிறது.
அடுக்கடுக்காக பல பொருட்களை உபயோகிக்காமல் இருக்கவும், உங்களுடைய வழக்கமான தலைமுடி மற்றும் மேக்கப்புக்காக செலவு செய்யும் நீண்ட நேரத்தை குறைக்கவும் இது உதவுகிறது. அழகுக்கான உங்கள் தினசரி வழக்கங்களை திறமையாகவும், பிரத்யேகமாகவும் செய்து கொள்வதற்கான அழகு பொருட்களை நீங்களே தயாரித்துக் கொள்வதற்கான சிலவற்றைப் பற்றி இங்கே கூறுகிறோம்.
- மாஸ்ட்ரைஸர் + சன்ஸ்க்ரீன்
- ஃபௌண்டேஷன் + ஹைலைட்டர்
- ஹேர் சீரம் + சுருள் முடி க்ரீம்
- மாஸ்யரைஸர் + பீபி க்ரீம்
- திரவ ப்ளஷ் + திரவ ஹைலைட்டர்
மாஸ்ட்ரைஸர் + சன்ஸ்க்ரீன்

சூரியக்கதிரிலிருந்து தற்காத்துக் கொள்ளும் காரணியுடன் (SPF) தொடர்ந்து ஒரு மாஸ்யரைஸரை பயன்படுத்த வேண்டும். இரண்டு வழிமுறையையும் ஒன்றாக இணைத்து ஒரே வேலையாக சில நொடிகளில் செய்து முடிக்கலாம். கொஞ்சம் மாஸ்யரைஸரையும், சன்ஸ்க்ரீனையும் உங்கள் உள்ளங்கையில் போட்டுக் கொண்டு நன்றாக கலக்கவும். உங்கள் சருமம் நீரேற்றம் பெறுவதற்கு அந்தக் கலவையை உங்கள் முகத்தில் நன்றாகப் பூசிக் கொள்ளவும், மேலும் தடவும்போது, இந்த மென்மையானப் பூச்சினால் மோசமான பாதிப்பிலிருந்து உங்கள் சருமம் பாதுகாக்கப்படும். உங்கள் இரண்டு க்ரீம்களின் கலவையானது, ஒரே சமயத்தில் உங்களுக்கு மாஸ்யரைஸருக்கான அடுக்கையும் தருகிறது, மற்றும் சூரியனிடமிருந்து பாதுகாக்கவும் செய்கின்றது.
ஃபௌண்டேஷன் + ஹைலைட்டர்

பிரபலங்கள் எப்படி இத்தகைய பளபளப்பைப் பெறுகிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா? அதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். அதில் ஒரு தந்திரம் உள்ளது. அடித்தளத்தை தருவது மட்டுமல்ல, அதைத் தவிர வழக்கமாக மேக்கப்புக்காக தினசரி செலவழிக்கும் உங்களுடைய பொன்னான நேரத்தையும் மிச்சப்படுத்தும். உங்களுடைய ஃபௌண்டேஷனுடன் ஒரு சில துளிகள் திரவ ஹேலைட்டரை கலந்து கொள்ளுங்கள். உங்கள் சருமம் பிரகாசமாக ஜொலிப்பதற்கு அந்தக் கலவையை உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளுங்கள்.
ஹேர் சீரம் + சுருள் முடி க்ரீம்

மூன்றாவது நாளில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதற்கு தகுதியுள்ள முடியாக இருக்காது. மேலும். இதற்காக லட்சகணக்கான தலைமுடி தயாரிப்புகள் இருந்தாலும், அவற்றால் உதவி செய்ய முடியாது. தலைமுடி தயாரிப்புகளில் பணத்தை செலவிடுவதற்கு பதிலாக, உங்களிடம் இருக்கும் சீரம், ஸ்டைலர், மற்றும் முடிசிக்கலை நீக்கும் ஸ்ப்ரே ஆகியவற்றை கலந்து பயன்படுத்தும் போது, ஒரே சமயத்தில் உங்களுக்கு ஒரு குறையுமில்லாத, பளபளப்பான மற்றும் கவர்ச்சியான தலைமுடியைப் பெறமுடியும். உங்கள் கர்ல் டிஃபைனிங் க்ரீமுடன் சில பளபளப்பைத் தூண்டும் க்ரீமையோ அல்லது தலைமுடி சிக்கை நீக்கும் ஸ்ப்ரேயுடனும் ஒரு ஆண்ட்டி-ஃப்ரிஸ் சீரம்மையோ ஒன்றாக கலந்து பயன்படுத்துங்கள். அப்போது உங்களது முடிக் கொட்டாமல் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளலாம்.
மாஸ்யரைஸர் + பீபி க்ரீம்

மேக்கப் செய்யும் போது வரிசையாக பலவற்றை செய்வதை தவிர்த்திடுங்கள், பீபி கிரீம் மற்றும் மாய்ஸ்சரைசரிங் கலவையை உங்கள் முகத்தில் பூசிக் கொள்வதினால், தடையற்ற மற்றும் விரைவான அடிப்படை மேக்கப்பை உங்களால் செய்து கொள்ள முடியும். நீங்கள் மேக்கப் செய்து கொள்வதற்கு எளிதாகவும், மென்மையாகவும் இருக்க, சிறிது அளவு மாய்ஸ்சரைசருடன் பிபி கிரீம் கலந்து பயன்படுத்தும் போது, உங்களுக்கு சுத்தமாகவும் இயற்கையான நிறைவை அளிக்கிறது. இதனால் அவசரமான காலை வேளையில் விரயமாகும் நேரம் தவிர்க்கப்படுகின்றது என்பதை சொல்லத் தேவையில்லை.
திரவ ப்ளஷ் + திரவ ஹைலைட்டர்

உங்கள் கன்னங்களில் ரோஸ் நிற பிரகாசத்தைப் பெற, நீங்கள் ஒரு பளபளக்கும் ப்ளஷரை செய்து நேரத்தை செலவிட வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது ஒன்று தான். உங்கள் கன்னத்தின் நிறம் மற்றும் உங்கள் ஹைலைட்டரை ஒன்றாக கலந்து பூசிக் கொண்டு ஒரு சில நொடிகளில் கண்ணைப் பறிக்கும் ஒரு கதிரியக்க பளபளப்பைப் பெறுங்கள். உங்கள் கையின் பின்புறத்தில், இரண்டு துளி கன்னத்திற்கேற்ற நிறம் மற்றும் ஒரு துளி ஹைலைட்டரை எடுத்து நன்றாக கலந்து, உங்கள் ஆப்பிள் கன்ன மேடுகள் மற்றும் கன்னத்தின் எலும்புகளின் மேல் பூசி நன்றாக சுழற்றுங்கள்.
Written by Kayal Thanigasalam on Jun 18, 2021
Author at BeBeautiful.