பகலில் சற்று நளினமான லுக் விரும்பினாலும் சரி, மாலை நேரத்தில் அசத்தலான தோற்றத்தை விரும்பினாலும் சரி… பல வண்ண லைனர் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஜாலியாக, அசத்தலாக இருக்கும் போரடிக்காது.

சரிதானே... கலர்களில் விளையாடுவது ஜாலிதான். ஆனால் கொஞ்சம் சரியாக இல்லாவிட்டாலும் காமெடி பீஸ் ஆகிவிடுவோம். இந்த தர்ம சங்கடம் ஏற்படாமலிருப்பதற்காக, செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைகளின் பட்டியலை தயார் செய்து உங்களுக்குத் தருகிறோம். படிப்பீர், பயன் பெறுவீர்.

 

செய்யவேண்டியவை

செய்யவேண்டியவை

 

Image courtesy: @camillacavinamua

கலர் தேர்ந்தெடுப்பதில் புத்திசாலித்தனம் தேவை

புதுசு புதுசாக ட்ரை செய்து பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அந்த கலர் உங்கள் கண்களின் நிறத்திற்கு பொருந்து வர வேண்டும். அது கண்களை இன்னும் அழகாக்க வேண்டும். சரிதானே. அடர் பிரவுன் அல்லது கருப்பு நிற கண்கள் கொண்டவர்களுக்கு பிங்க், லேவண்டர், வயலட், அக்வா, தங்க நிற ஷேட்கள் பொருத்தமாக இருக்கும். ஹேஸல் கண்களும் வெளிர் பிரவுன் கண்களும் கொண்டவர்களுக்கு எமரால்ட் க்ரீன் அல்லது ப்ரான்ஸ் நிறங்கள் சிறப்பாக இருக்கும்.

கவனத்தை ஈர்க்க வேண்டும்

பல வண்ண ஐ-லைனர் பயன்படுத்தும் போது, கண்கள்தான் கவனத்தை ஈர்க்கும் மையமாக இருக்க வேண்டும். அடர்த்தியான மேக்கப், அசத்தலான லிப் கலர்களை பயன்படுத்தினால் கவனம் கண்களிலிருந்து விலகிப் போகும். கண்களால் பேசுவதுதான் இதிலுள்ள ரகசியம்.

அடர்த்தியான ஷேட்களில் துவங்கவும்

பல வண்ண ஐ-லைனர் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்களா… முதலில் டார்க் ஷேட்களை பயன்படுத்துங்கள். Lakmé Eyeconic Kajal கிளாசிக் ப்ரவுன், ரீகல் க்ரீன் ஷேட்களை முதலில் பயன்படுத்தலாம். முதல் முயற்சிகளுக்கு இவை சூப்பராக இருக்கும்.

 

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

Image courtesy: @sathyapriya_mua

அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம்

அசத்தலான, வித்தியாசமான கண் அலங்காரம் செய்த மாடல்களை பார்த்திருப்பீர்கள். அவர்கள் பல வண்ண ஐ-லைனர் பயன்படுத்துவது சகஜம். அவர்களுக்கு அது பொருத்தமாகவும் இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் எப்போதுமே லேசான ஷேட்களில் ஆரம்பிப்பது நல்லது. அதிலும் நியான் க்ரீன், ஆரஞ், பிங்க் போன்ற பிரைட்டான நிறங்களை பயன்படுத்தும் போது இந்த சுய கட்டுப்பாடு அவசியம்.

வழக்கமான ஐலைனர் போலவே பல வண்ண ஐ-லைனரையும் பயன்படுத்தவும் கருப்பு மற்றும்

நியூட்ரல் ஐலைனர் ஷேட்கள் உங்களின் ஒட்டுமொத்த மேக்கப் தோற்றத்தை மெருகேற்றும். அதற்கு மாறாக பல வண்ண ஐ-லைனர்கள் தனித்து தெரிய வைக்கும். அதனால் நியூட்ரல் ஷேட்களை தேர்ந்தெடுக்கும் போது ஷை ஷேடோ தவிர்க்கவும்.

Main image: @debasree