இந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்ததும் எங்கே செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள். டேட்டிங்கிற்காக இருக்கலாம் என நினைக்கிறோம். ஆம் எனில், அலுவலகத்தை விட்டு புறப்பட்டதும், உங்களை தயார் செய்து கொள்ள போதுமான நேரம் இருந்திருந்தால் எப்படி தயாராகி இருந்திருப்பீர்களோ அப்படி அசத்தலாக டேட்டிங்கின் போது கவர்சியாக தோன்ற நாங்கள் வழிகாட்டுகிறோம்.

அலுவலக நேரத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்துக்கொண்டு கண்களை அகல விரித்திருக்க வேண்டும். அலுவலக மேக்கப்பை மேற்கொள்ள சிறந்த வழி, நல்ல பவுண்டேஷன், கன்சீலர், ஐலைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்துவது. ஆனால், டேட்டிங் இரவு மேக்கப் எனில், உதடுகள் அல்லது கண்களில் மேக்கப் கொஞ்சம் அட்டகாசமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பார்த்தால் கவரக்கூடிய தோற்றத்தை அளிக்க சிறந்த வழி, உதடுகளை சிவக்க வைப்பது அல்லது கொஞ்சம் பளபளப்பை தோற்றத்தில் உண்டாக்குவது.

உங்கள் தோற்றத்தை கவர்ச்சி மிக்கதாக உருவாக்கி கொண்டு, அலுவலகத்தில் இருந்து குறைந்த நேரத்தில் டேட்டிங்கிற்கு ஏற்ற தோற்றத்தோடு தயாராகி செல்வதற்கான எளிய வழிகள் இதோ:

·    செரி உதடுகள்

·    பளபளப்பான ஐஷேடோ

·    ஹைலைட்டர்

·    பிளஷ்

 

செரி உதடுகள்

செரி உதடுகள்

சிவந்த உதடுகளை போல டேட்டிங் தோற்றத்தை உணர்த்தக்கூடியது வேறில்லை. எனவே, உங்கள் அபிமான சிவப்பு லிப்ஸ்டிக்கை கைப்பையில் வைத்திருந்து, டேட்டிங் செல்வதற்கு முன் உதடுகளில் அழகாக பூசிக்கொள்ளவும். சரியான தேர்வு வேண்டும் எனில், லாக்மே அப்ஸ்டல்யூட் மேட்டே மெல்ட் லிக்விட் லிப் என் பயர்ஸ்டார்ட்டர் ரெட்டை முயன்று பார்க்கவும்.

 

பளபளப்பான ஐஷேடோ

பளபளப்பான ஐஷேடோ

டேட்டிங்கில் நீங்கள் கண்கள் படபடக்கும் போது, அவர் உங்கள் கண்களில் பளபளப்பை உணர வேண்டும். எனவே பளபளக்கும் ஐஷேடோவை அலுவலத்தில் இருந்து புறப்படும் முன் பயன்படுத்தவும்.

 

ஹைலைட்டர்

ஹைலைட்டர்

டின்னரில் மெழுகுவர்த்தி ஒளி இருக்கிறதோ இல்லையோ, அப்படி இருப்பதான நினைத்துக்கொண்டு, உங்கள் முகத்தில் எடுப்பான இடங்களில் ஹைலைட்டர் பயன்படுத்தி அசத்தலாக காட்சி அளியுங்கள். லாக்மே அப்ஸல்யூட் மூன் லிட் ஹைலைட்டரை அப்போதும் அலுவலக கைப்பையில் தயாராக வைத்திருக்கவும்.

 

பிளஷ்

பிளஷ்

பணியிடத்தில் பிளஷ் மற்றும் பிரெஷை வைத்திருக்கவும். டேட்டிங்கோ, சந்திப்போ உங்கள் கன்ன கதுப்பில் பிளஷ் கொண்டு அழகாக்கி கொள்வது மேலும் அழகாக்கும். இளமையான தோற்றத்தையும் அளிக்கும்.  அவர் பாராட்டும் போது இது கைகொடுக்கும்.

 

மஸ்காரா

மஸ்காரா

லாக்மே அப்ஸல்யூட் பில்ட்டர் டிராமட்டிக் ஐஸ் மஸ்காரா போன்ற மஸ்காராவை பயன்படுத்தி உங்கள் கண்களின் தோற்றத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் கண்கள் அகலமாக விரிந்திருப்பது போல் தோன்றி மேலும் ஈர்ப்பை உண்டாக்கும்.