ஒயிட் ஐ லைனர் எவ்வளவு சூப்பராக இருக்கும் என்பது மேக்கப் பிரியர்களுக்கு தெரியாதது அல்ல. மேக்கப் கலைஞர்கள் அல்லது அழகுக் கலை வல்லுனர்கள் வாயால் இதைக் கேட்டிருப்பார்கள். அது உண்மைதான். பார்க்க பயமுறுத்துவதாகத் தெரிந்தாலும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை மறைக்க ஒயிட் ஐ லைனர் சரியான சாய்ஸ். முந்தைய நாள் இரவில் நன்றாக தூங்கினால் முகம் எவ்வாறு பொலிவாக இருக்குமோ, அது போன்ற தோற்றத்தை சில நொடிகளில் உருவாக்குவதற்கான உத்தி இது. நீங்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா… இதோ சொல்கிறோம்...
- 01. கருப்பு வெள்ளையின் கலவை
- 02. வாட்டர்லைன்-ஐ ஹைலைட் செய்ய வேண்டும்
- 03. ஒயிட் கண் இமைகள்
- 04. உள் ஓரங்களில் ஹைலைட்
01. கருப்பு வெள்ளையின் கலவை

வெறுமனே ஒயிட் ஐ லைனர் மட்டுமே பயன்படுத்தினால் மிகவும் அப்பட்டமாக இருக்கும் என நினைக்கிறீர்களா… இதோ சிம்பிள் தீர்வு: மெல்லிதாக வழக்கமான கருப்பு ஐலைனர் பயன்படுத்திவிட்டு, அதன் மீது ஒயிட் ஐ லைனர் பயன்படுத்துங்கள். இது கிளாஸிக் தோற்றத்தை உருவாக்கும்.
02. வாட்டர்லைன்-ஐ ஹைலைட் செய்ய வேண்டும்

வாட்டர்லைன் மீது ஒயிட் ஐ லைனர் பயன்படுத்துவது மற்றொரு வழி. இது நன்றாகத் தூங்கியது போன்ற தோற்றத்தை நொடியில் ஏற்படுத்திக் கொடுக்கும். கண்கள் பெரிதாகவும் அழகாகவும் இருக்கும்
03. ஒயிட் கண் இமைகள்

மேக்கப்பில் புதிது புதிதாக முயற்சி செய்து பார்ப்பவர்களா நீங்கள்… அப்படி என்றால் உங்களுக்கான வெள்ளை கண் இமைகள். சிம்பிளாக கண் இமைகளின் மீது ஒயிட் ஐ ஷேடோ பூசலாம். அவ்வளவுதான். தேவைப்பட்டால் இமை முடியின் மீதும் அப்ளை செய்து அசத்தலாக மாற்றலாம். வெள்ளை நிறத்தின் மீது வெளிச்சம் பட்டு பிரதிபலிக்கும் என்பதால் நொடிப் பொழுதில் உங்கள் கண்கள் பெரிதாக, அழகாகக் காட்சி தரும். பார்ட்டி அல்லது இசை நிகழ்ச்சிக்கு இந்த மேக்கப்பில் சென்றால் எல்லோரது கண்களும் உங்கள் மீதுதான் இருக்கும்.
04. உள் ஓரங்களில் ஹைலைட்

கண்ணில் ஒயிட் ஐ லைனர் பயன்படுத்துவது ரொம்ப ஓவர் என நினைக்கும் பெண்களுக்கானது இந்த ஸ்டைல். ஒயிட் ஐ ஷேடோ எடுத்து கண்ணின் உள் ஓரங்களில் அப்ளை செய்தால் போதுமானது. இது கண்களை மிகவும் ப்ரைட்டாகவும் கவர்ந்திழுக்கும் வகையிலும் மாற்றி அமைக்கும்.
Image courtesy: Pinterest
Written by Kayal Thanigasalam on Jan 29, 2021
Author at BeBeautiful.