2021 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இப்பொழுது வரை கண்ணுக்கான டிரெண்டுகளே அழகியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேலும் 2022 ஆம் ஆண்டிலும் அதே நிலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முக்கவசத்தை அணிந்தாலும் சிறப்பாகத் தோற்றமளிக்க நாங்கள் தயாராகிவிட்டோம். ஆனால் ஐஷேடோவது அணிந்து கொள்வது அத்தனை எளிதான விஷயமல்ல ஏனெனில் மோசமான சரும வரிகள் முதல் மங்கிய பளபளப்பு வரை, ஐ ஷேடோவில் தவறுகள் நடப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதனால்தான், ஐஷேடோவை அணிந்து கொள்ளும் விஷயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்றப் பட்டியலைத் தொகுத்து வைத்துள்ளோம். அதன்படி நீங்கள் ஐஷேடோவிற்கு புதியவராக இருந்தாலும் சரி, அழகியல் நிபுணராக இருந்தாலும் சரி, ஐஷேடோவை அணிந்து கொள்வதற்கு முன் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவற்றைப் பற்றி நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இக்கட்டுரையைப் படிக்கவும். மேலும் இதைப் பின்பற்றும்போதுதான் உங்கள் இமைகள் அழகானத் தோற்றத்தைப் பெறும்.

 

செய்ய வேண்டியது : ப்ரைமரைப் பயன்படுத்துவது

செய்ய வேண்டியது :  ப்ரைமரைப் பயன்படுத்துவது

உங்கள் இமைகளை ப்ரைமிங் செய்வதால், உங்கள் ஐஷேட்களின் நிறங்களின் பளபளப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஐஷேட்கள் மடிவது குறைவாக இருக்கும். மேலும் அது நீண்ட நேரம் கண்களில் இருக்கும் படியும் செய்யும். உங்கள் கண் இமைகளை ப்ரைமிங் செய்யும் வேலையை உங்களுடைய வழக்கமான ப்ரைமர் அல்லது கன்சீலரே செய்துவிடும். எனவே எந்தவித தடையுமில்லாமல் பயன்படுத்துவதற்கேற்ற நிலையான அடித்தளம் இந்த ஐஷேடோவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பீபி பிக்ஸ் Lakmé Absolute Under Cover Gel Face Primer

 

செய்யக் கூடாதது : ஷேட்களை மாற்றுவதற்கு ஷிம்மரை பயன்படுத்துவது நீங்கள் பயன்படுத்தும் உங்களுடைய ஐ மேக்கப்புடன், நிறங்களை இந்த டிரான்சிஷன் ஷேடுகள் எந்தவித தடையுமின்றி கலக்கச் செய்ய வேண்டும். ஷிம்மரை டிரான்ஸிஷன் ஷேட்களாக பயன்படுத்தும் போது அதன் அ

செய்யக் கூடாதது   :  ஷேட்களை மாற்றுவதற்கு ஷிம்மரை பயன்படுத்துவது  நீங்கள் பயன்படுத்தும் உங்களுடைய ஐ மேக்கப்புடன், நிறங்களை இந்த

டிப்படை நோக்கத்தையே தோற்கடித்து விடும். ஏனெனில் பவுடர்கள் முறையாக கலக்கப்படாமல் திட்டுத்திட்டான தோற்றமும் மற்றும் ஒளியையும் பிரதிபலிக்கும். அதற்குப் பதிலாக, மேட் ஷேடை தேர்வு செய்து கொள்ளுங்கள். இது குறையற்ற மாற்றத்தை உருவாக்க உங்கள் சருமத்தின் நிறத்தை விட இரண்டு விதமான மிகவும் கருத்த நிறத்தையுடைய ஒரு ஷேடாகும்

 

செய்ய வேண்டியது : புதியப் பரிமாணத்தை உருவாக்குவது

செய்ய வேண்டியது :  புதியப் பரிமாணத்தை உருவாக்குவது

உங்கள் கண்கள் ஆச்சரியமாக தோற்றமளிப்பதற்கான ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குவது என்பது மிகவும் எளிதான வழியாகும். மேலும் இது ஒரு 3D தோற்றத்தைக் காட்ட கருத்து மற்றும் வெளிர் நிறங்கள், பளபளப்பான மற்றும் மேட் ஷேட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை உள்ளடக்கியது. இது ஒரு புதியப் பரிமாணத்தை உருவாக்குவதற்கு எளிதான வழிகளில் ஒன்றாகும். இதை டிரான்ஸிஷனுடன் தொடங்கி, கண் மடிப்புகளில் ஒரு மேட் ஷேட் மற்றும் அதன் வெளிப்புற மூலையில் ஒரு கருத்த நிறத்துடன் கூடிய ஒரு மேட் ஷேடுடன் தொடரலாம். இவை நன்றாகக் கலந்தவுடன், பெரிய மற்றும் பிரகாசமான கண்களுக்கு ஒரு மென்மையான, பளபளப்பான ஷேட்களை இமைகளின் மீதும் மற்றும் உள்மூலையிலும் பயன்படுத்தவும்.

பீபி பிக்ஸ் : Lakmé Absolute Spotlight Eyeshadow Palette - Berry Martini

 

செய்யக் கூடாதது : அதிகமாக கலப்பது

செய்யக் கூடாதது :  அதிகமாக கலப்பது

ஐஷேடோ அணிந்து கொள்ளும் செயல்முறையில் அனைத்தும் சரியாக கலக்க வேண்டியது ஒரு முக்கியமான அம்சமாகும். அதை மிக விரைவில் செய்யுங்கள். இல்லையெனில், மிக விசித்திரமாகத் தோன்றக்கூடிய மோசமான வரிகளை நீங்கள் விட்டுவிட நேரிடும். சரியாக கலக்கப்படவில்லை என்ற பயத்தில், பலர் அதிகபடியாக கலக்க முனைகிறார்கள். அதனால், அவர்களின் ஐஷேடோ திட்டுத்திட்டாகவும், சீரற்றதாகவும் இருக்கும். இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்; அவையனைத்தையும் களைத்தெறிந்து விட்டு மீண்டும் புதிதாக, மென்மையான நிறத்தில் தொடங்கலாம்.

 

செய்ய வேண்டியது : பளபளப்பான ஷேட்களைப் பெற ப்ரஷ்ஷை ஈரப்படுத்துதல்

செய்ய வேண்டியது :  பளபளப்பான ஷேட்களைப் பெற ப்ரஷ்ஷை ஈரப்படுத்துதல்

பட உதவி : @lisaeldridgemakeup பளபளப்பான ஷேட்களுக்கு இந்த ஹேக் சிறப்பாகச் செயல்படும். உங்களுடைய ஜொலிப்பு உங்களுக்குத் தேவைப்பட்ட நிறங்களை அளிப்பதில்லை என நீங்கள் உணர்ந்தால், உங்கள் ப்ரஷ்ஷை ஒரு மிஸ்ட்டில் சிறிது நனைத்து, ஐஷேடோவை அந்த ப்ரஷ்ஷில் சிறிது பேஸ்டாக எடுத்துப் பூசிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய பளபளப்பான கண்களின் மோசமான தோற்றத்தையும், திட்டுக்களையும் தவிர்க்க உதவும்.

பீபி பிக்ஸ் : Lakmé 9 to 5 Eye Color Quartet Eye Shadow - Desert Rose

 

செய்யக் கூடாதது : பரிசோதனை செய்வதற்கு பயப்படுவது

செய்யக் கூடாதது  : பரிசோதனை செய்வதற்கு பயப்படுவது

பட உதவி : @hungvanngo 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகள் முழுவதுமே மாஸ்க் மேக்கப்பைப் பற்றியதுதான். மேலும் பரிசோதனை செய்ய அச்சப்படுகிறீர்கள் என்றால், அந்த அச்சத்தைக் களைந்து விடுங்கள். உங்கள் கண்கள் ஏற்கனவே பலவிஷயங்களை தெரிவிக்கின்றன! y2k முதல் கிராஃபிக் மேக்கப் வரை தேர்வு செய்ய ஏராளமான கண் டிரெண்ட்கள் இருப்பதால், தேர்வு செய்வதில் உங்களுக்கு குழப்பம் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியும். பரிசோதனை செய்து பாருங்கள். யாருக்குத் தெரியும், அது இனிமையான தோற்றத்தையும் கூட அளிக்கலாம்!.