மேக்கப்பில் இது சரி, இது தவறு என தெளிவாக வரையறுக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. அடர்த்தியான பிளாக் கலர் ஃபார்முலா பற்றியெல்லாம் யாரும் இப்போது ஆர்வம் கொள்வதில்லை. புதுப் புது ஸ்டைலில் க்ரியேடிவாக செய்வதுதான் இப்போதைய டிரென்ட். ஃபேன்சியான ஐலைனர் ஸ்டைல் இப்போது மிகவும் பாப்புலராகி வருகிறது. அது டாப் 4 சாய்ஸ்களை இங்கே வழங்குகிறோம்.

 

01. கான்ஃபெட்டி ஐலைனர்

கான்ஃபெட்டி ஐலைனர்

புகைப்படம், நன்றி: சல்மா பார்போஸா

இந்த லிஸ்ட்டில் மிகவும் கலர்ஃபுல்லான சாய்ஸ் என்றால் அது இதுவே. லேஷ்களின் மீது பல நிறங்களை புள்ளி புள்ளியாக பயன்படுத்துவதுதான் இந்த ஸ்டைல். டெக்னி கலர் விங்க்ஸ் போன்ற பலவித ஸ்டைல்களில் பயன்படுத்தலாம்.

எவ்வாறு செய்வது:

டாப் லேஷ் லைனுக்கு மிக அருகில் பல்வேறு நிறங்களில் ஐலைனர் அப்ளை செய்ய வேண்டும், புள்ளி புள்ளியாக.

வெளிப்புறமாக புள்ளிகளை கொண்டு வருவது மூலம் விங்க்ஸ் உருவாக்கலாம்.

நீளமும் வடிவமும் சரியாக வந்த பிறகு, அடிப் பகுதியிலிருந்து விங் பகுதியை கிரிஸ்ப்பாக மாற்ற வேண்டும்.

Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection பயன்படுத்திப் பாருங்கள். இந்த ஜெலாட்டோ கலெக்ஷன் அற்புதமானது. எட்டு துடிப்பான ஷேட்களில் இது

கிடைக்கிறது. எந்தவிதமான லுக்கிற்கும் அதிரடியான தோற்றத்தைத் தரக்கூடியது இது. லேஷ் லைனின் மீது ஜெல் ஐலைனர் போல இது வேலை செய்யும். வாட்டர் லைனுக்கான காஜல் பென்சில் போலவும் பயன்படுத்தலாம்.

 

02. யுனிகார்ன் ஐலைனர்

யுனிகார்ன் ஐலைனர்

புகைப்படம், நன்றி: போர்ட் பான்டா

யுனிகார்ன் பிடிக்கும் என்று செல்பவர்களுக்கு இது கச்சிதமானது. வழக்கமான விங்க்ஸ் தோற்றத்திற்கு இது மாயாஜால லுக் கொடுக்கும். முதலில் விங்க்ஸ் வரைய வேண்டும் (பேஸ்டல் ஷேட் பயன்படுத்துவது சிறந்தது). பிறகு விங் பகுதியைச் சுற்றி பல்வேறு நிறங்களை சேர்க்க வேண்டும். நிறைவாக யுனிகார்ன் ஹார்ன் தோற்றம் கிடைக்கும்.

எவ்வாறு செய்வது

லைட் நிற ஷேட் பயன்படுத்தி விங்க்ஸ் வரைய வேண்டும். அதற்கு வெள்ளை ஐலைனர் பயன்படுத்தலாம். இந்த லுக் பெறுவதற்கு, விங் திக்காக இருக்கும்படி வரைய வேண்டும்.

அடுத்து டார்க் ஐலைனர் எடுத்துக்கொண்டு, ஸ்வர்ல் செய்ய வேண்டும்.

விங் பகுதியைச் சுற்றி சின்னச் சின்ன டேஷ் வரைவதுடன் தொடங்க வேண்டும். விங் பகுதிக்கு அடுத்து சி போன்ற வளைவை வரைய வேண்டும். இதுதான் யுனிகார்ன் போன்ற வளைவை உருவாக்கும். இது ஹார்ன் பகுதியின் அடியில் ஸ்விர்ல் போல் தோற்றமளிக்கும். இன்னும் டேஷ்களை சேர்த்தால் எல்லாம் ஃபினிஷ்.

 

03. க்ரீஸ் கோடுகள்

க்ரீஸ் கோடுகள்

புகைப்படம், நன்றி: மேரி

கண்களின் க்ரீஸ் பகுதியில் ஐலைனர் வடிவது பெரிய தலைவலியாக இருக்கிறதா… அதையே ஃபேஷனாக மாற்றிவிடுங்கள். விங் பகுதியை க்ரீஸ் பகுதி வரை இழுத்து விடுவதுதான் இப்போதைய லேட்டஸ்ட் டிரென்ட். இது அதிரடியான தோற்றம் கொடுக்கும். பெல்லா ஹதீத் இப்படியான தோற்றத்தில்தான் அசத்தினார். இன்டர்நெட்டில் இது காட்டுத் தீயாய் பரவியது.

இந்த லுக் பெறுவதற்கு கருப்பு ஐலைனர் தேவை. லேக்மே ஐகானிக் லைனர் ஃபைன் டிப் போன்ற ஐலைனர் இதற்கு ஏற்றது. இதன் நுண்மையான டிப் ஷார்ப்பான கோடுகள் வரைய உதவியாக இருக்கும்.

எவ்வாறு செய்வது:

லேஷ் லைன் பகுதி எங்கும் ட்ரேசிங் லைன் வரைய வேண்டும். அதை எக்ஸ்டென்ட் செய்து விங்க்ஸ் வரைய வேண்டும். லைனர் உங்களது க்ரீஸ் பகுதியுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதால் விங்க்ஸ் பகுதியை நீளமாக்குவது பற்றி பயப்படாதீர்கள்.

பிறகு, விங் பகுதியின் டிப் உள்புறமாக வரும்படி வரைய வேண்டும். அதை லேசாக அல்லது அதிரடியாகவும் பயன்படுத்தலாம்.

 

04. கோ க்ரீன்

கோ க்ரீன்

புகைப்படம், நன்றி: அட்ரியானா

இப்போது பச்சை நிறம்தான் சூப்பர் டிரென்ட் தெரியுமா. இன்றைய தலைமுறை அதை மிகவும் விரும்புகிறது. அதனால் வழக்கமான கருப்பு ஐலைனர் வேண்டாம், க்ரீம் டீமில் ஐக்கியமாகுங்கள். வழக்கமான அதே லுக்தான். ஆனால் துடிப்பான க்ரீன் ஐலைனர் மூலம் செய்வீர்கள். லைட் க்ரீன்தான் உங்கள் ஃபேவரைட் என்றால் Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection - Matcha பயன்படுத்தலாம். இது சூப்பர் க்ரீமியாக இருக்கும். ரிச்சான ஐ பென்சிலாகவும் இருக்கும். அடர் நிறம் வேண்டும் என்றால் Lakmé Absolute Shine Line Eye Liner - Sparkling Olive சூஸ் செய்யலாம். துடிப்பான ஆலிவ் நிறம் உங்கள் பெஸ்ட் தோழியாக மாறலாம்.

பிரதான புகைப்படம், நன்றி: டம்ப்ளர்