ஒரு நாளின் முடிவில் மேக்கப் ரிமூவ் செய்வது எவ்வளவு முக்கியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முக்கியமான பொருள் வீட்டில் இல்லாவிட்டால் என்ன செய்வது. சிம்பிள். வீட்டிலேயே, நீங்களே மேக்கப் ரிமூவர் தயார் செய்யலாம். அதை நினைத்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். அதற்கான ஐந்து டிப்ஸ்களை இங்கே தருகிறோம். 

 

  •     விட்ச் ஹேசல், வாட்டர் கொண்ட மேக்கப் ரிமூவர்
  •     க்ரீன் டீ, க்ளிசரின் கொண்ட மேக்கப் ரிமூவர்
  •     ஆலிவ் ஆயில், அலோ வேரா மேக்கப் ரிமூவர்
  •     ரோஸ் வாட்டர், ஜோஜோபா ஆயில் மேக்கப் ரிமூவர்
  •     ஹனி மேக்கப் ரிமூவர்

 

 

விட்ச் ஹேசல், வாட்டர் கொண்ட மேக்கப் ரிமூவர்

விட்ச் ஹேசல், வாட்டர் கொண்ட மேக்கப் ரிமூவர்

இருப்பதிலேயே இதைச் செய்வதுதான் ஈஸி. விட்ச் ஹேசல் சொல்யூஷனும் தண்ணீரும் சமமான அளவில் எடுத்துக்கொண்டால் போதும். இரண்டையும் கலந்தால் மேக்கப் ரிமூவர் அப்ளை செய்ய ரெடி. காட்டன் பந்து பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஆயில், முகப் பரு பிரச்சனை கொண்டவர்களுக்கு இது மிகவும் ஏற்ற சொல்யூஷன். 

 

ப்ரோ டிப்: ஆல்கஹால் இள்லாத மேக்கப் ரிமூவர் தேடிக்கொண்டிருக்கிறீர்களா… Simple Daily Skin Detox Oil Be Gone Micellar Water சிறந்த சாய்ஸாக இருக்கும். துரிதமாக அதிக ஆயிலை நீக்குவதோடு மேட் லுக் தரும். 

 

க்ரீன் டீ, க்ளிசரின் கொண்ட மேக்கப் ரிமூவர்

க்ரீன் டீ, க்ளிசரின் கொண்ட மேக்கப் ரிமூவர்

ட்ரையான, சென்டிவான ஸ்கின் என்றால் கவலை வேண்டாம். தயாரான க்ரீன் டீ ஒரு டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள், அரை டீ ஸ்பூன் க்ளிசரின் எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு டீ ஸ்பூன் க்ரேப்சீட் ஆயில் எடுத்துக்கொள்ளுங்கள். இதை மிக்ஸ் செய்து காட்டன் பயன்படுத்தி மேக்கப்பை ரிமூவ் செய்யுங்கள்.

 

ஆலிவ் ஆயில், அலோ வேரா மேக்கப் ரிமூவர்

ஆலிவ் ஆயில், அலோ வேரா மேக்கப் ரிமூவர்

அரை கப் ஆலிவ் ஆயில், ஒரு கப் அலோ வேரா தண்ணீர் இருந்தால் போதும், இந்த மேக்கப் ரிமூவர் தயார் செய்துவிடலாம். இரண்டையும் ஒரு ஸ்பிரே பாட்டிலில் கலந்து நன்றாக குலுக்கிவிட்டு அப்ளை செய்யவும். கஷ்டமான ஐ, ஃபேஸ் மேக்கப்பை எளிதாக ரிமூவ் செய்ய இதைப் பயன்படுத்தலாம். இதை ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பது கூடுதல் ப்ளஸ். அலோ வேரா கொண்ட நல்ல மேக்கப் ரிமூவர் தேடிக்கொண்டிருக்கிறீர்களா…Lakmé 9to5 Naturale Gel Makeup Remover With Pure Aloe Vera நல்ல சாய்ஸ். சுத்தமான அலோ வேரா எக்ஸ்ட்ராக்டர் கொண்ட இந்த ரிமூவர் மிக எளிதாக மேக்கப்பை நீக்கி, ஸ்மூத்தான சருமம் கொடுக்கும்.

 

ரோஸ் வாட்டர், ஜோஜோபா ஆயில் மேக்கப் ரிமூவர்

ரோஸ் வாட்டர், ஜோஜோபா ஆயில் மேக்கப் ரிமூவர்

உண்மைதான். ரோஸ் வாட்டர் பயன்படுத்தியும் மேக்கப்பை ரிமூவ் செய்யலாம். இரண்டு டீ ஸ்பூன் ஜோஜோபா ஆயிலையும் ரோஸ் வாட்டரையும் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். காட்டன் பந்து பயன்படுத்தி அப்ளை செய்யுங்கள். மேக்கப் ரிமூவ் செய்வது போக நல்ல க்ளென்ஸராகவும் இது பயன்படும். ரோஸ் வாட்டர் சருமத்தை சாஃப்ட்டாக மாற்றும். 

 

ஹனி மேக்கப் ரிமூவர்

ஹனி மேக்கப் ரிமூவர்

மேக்கப் ரிமூவர் செய்யும் அளவுக்குகூட எனர்ஜி இல்லையா. இது சிறந்த சாய்லாக இருக்கும். தேன் இருந்தால் போதும். ஒரு டீ ஸ்பூன் தேன் எடுத்துக்கொண்டு முகத்திலும் கழுத்திலும் அப்ளை செய்து 10-15 நிமிடம் ஊற விடுங்கள். பிறகு மிதமான சூட்டில் தண்ணீரில் கழுவுங்கள். இது நல்ல மேஸ்க், மேக்கப் ரிமூவர் இரண்டாகவும் இருக்கும். சருமத்திற்கு பொலிவைத் தருவதோடு இறந்த செல்களையும் நீக்கும். 

இயற்கையான பொருட்களை சருமத்தில் பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் கடைகளில் வாங்கி பயன்படுத்துவதே சிறந்தது. முன்கூட்டியே ஆர்டர் செய்து ஸ்டாக் வைத்துக்கொள்ளுங்கள்.