காண்டுரிங் செய்வது, எடுப்பான கண்ண எலும்பையும், தீர்கமான தாடையையும் அளிக்கும் என்றாலும், அதை திறம்பட செய்வது சிக்கலானது. காண்டுரிங் போக்கு முதலில் மாடல்களில் பிரபலமாகி பின்னர் சிவப்பு கம்பள் நிகழ்ச்சிகளிலும், இன்ஸ்டாகிராமிலும் பரவியது. நட்சத்திரங்களும், அழகுகலை வலைப்பதிவாளர்களும் இந்த மேக்கப் போக்கை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். இது இப்போது அவர்கள் தினசரி அழகுகலையின் அங்கமாக இருக்கிறது. ஆக, காண்டுரிங் செய்யும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்ன? அடுத்த முறை நீங்கள் முகத்தில் காண்டுரிங் செய்யும் போது, மேற்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் எவை என பார்க்கலாம்.

 

தூய்மையான பேஸ் தேவை

தூய்மையான பேஸ் தேவை

முதல் வேலை பிரைமரை பயன்படுத்து தூய்மையான அடித்தளத்தை ( பேஸ்) அமைக்க உங்கள் பவுண்டேஷனை பொருத்தமாக பயன்படுத்துங்கள். அப்போது தான் காண்டூர் மென்மையாக நிகழும்.

 

மேட்டேவை தேர்வு செய்யுங்கள்

மேட்டேவை தேர்வு செய்யுங்கள்

நீங்கள் காண்டுரிங்கிற்கு புதியவர் எனில், சரியான பொருளை தேர்வு செய்வது முக்கியம். இது காண்டுரிங் செயல்முறையை எளிதாக்கும். பவுடர் சார்ந்த காண்டுரிங் மேட்டே பினிஷை அளிக்கும். கிரீம் சார்ந்த ஒன்று பனி போன்ற பினிஷை அளிக்கும்.

 

சரியான பிரெஷ் பயன்பாடு

சரியான பிரெஷ் பயன்பாடு

உங்கள் முகத்தை காண்டுரிங் செய்ய சரியான பிரெஷை தேர்வு செய்வது முக்கியம். மேலும் துல்லியமான பலன் பெற நீங்கள் சிறிய, அடர்த்தியான, ஐஷேடோ பிரஷை பயன்படுத்துவது நல்லது. ஏர்பிரஷ் பினிஷிற்கு ஃபேன் பிரஷை தேர்வு செய்யலாம். இது கன்னத்தை சுற்று, தாடை கீழ் மற்றும் தலைமுடி பகுதியில் இறகுதன்மையை ஏற்படுத்தவும் உதவும்.

 

முகத்தை மேப் செய்வது

முகத்தை மேப் செய்வது

காண்டுரிங் செய்யும் போது, உங்கள் முகத்தை மேப் செய்ய, எலும்பு அமைப்பை வழிகாட்டியாக கொள்ளுங்கள். தாடைப்பகுதி கீழ், கண்ணத்தை சுற்றி, கண்ணம் நடுவே பிரதானமாக காண்டூரிங் செய்ய வேண்டும். மூக்கின் பக்கவாட்டு பகுதி, தலைமுடி பகுதியிலும் காண்டுரிங் செய்யலாம்.

 

பிலெண்ட் செய்வது முக்கியம்

பிலெண்ட் செய்வது முக்கியம்

முகத்தை காண்டுரிங் செய்வதில் பிலெண்ட் செய்வது முக்கியம். பியூட்டி பிலெண்டர் மூலம், உங்கள் காண்டுரை பவுண்டேஷனுடன் கலந்து, பியூட்டி பிலெண்டரின் வட்டமான முனைப்பகுதி மூலம் வட்ட வடிவில் தடவுவும்.

 

லூஸ் பவுடர்

லூஸ் பவுடர்

எல்லா பகுதிகளையும் காண்டுர் செய்த பிறகு, முகத்தில் மெத்தென்ற பிரஷ் கொண்டு லூஸ் பவுடரை பூசவும். இது மொத்த தோற்றத்தையும் அழகாக்கும்.