நீங்கள் ஒரு மேக்கப் அடிமை (என்னைப் போல்) என்றால், புதிய மேக்கப் யுக்திகளை எப்போதும் வரவேற்க்கப்படும். குறிப்பாக, அந்த சின்னச்சின்ன தந்திரங்கள் ஒரு சிறந்த வேலையை செய்ய உங்களுக்கு உதவியாக இருக்கும். எனவே, ஏன் இல்லை நம்முடைய முகத்தை  மெலிதாக்குவதில் வல்லுநராகி விட்டதற்காக, கான்ட்யூரிங்க்கு நன்றியும், அழகை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டதற்காக, ஹைலைட்டிங்கிற்கு நன்றியும் சொல்ல வேண்டும், இது வேறொரு புதிய உத்தியில் நிபுணத்துவம் பெற வேண்டிய தருணம் இது.  இதைத் தான் பேக்கிங் என்று அழைப்பார்கள், யூ ட்யூபர்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இந்த வார்த்தையை அவர்களுடைய மேக்கப் காணொளியில் அடிக்கடி பயன்படுத்துவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.  இறுதியாக அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டிய தருணம் இது,
உங்கள் முகத்தில் சுருக்கமில்லாமல் இருப்பதற்காக செய்து கொள்ளும் ஒரு புத்திசாலித்தனமான மேக்கப் தான் பேக்கிங் ஆகும்.  எனவே, பேக்கிங் என்றால் என்ன என்று இப்போது நீங்கள் கேட்கலாம். பேக்கிங் என்பது ஃபௌண்டேஷன் மற்றும் கன்சீலர் செய்து கொண்டபின், நீங்கள் வழக்கமாக செய்து கொள்ளும் மேக்கப்புடன் அடிப்படையாக செய்யக் கூடிய ஒரு கூடுதலாக விஷயமாகும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கொஞ்சம்  ஒளிகசியும் (டிரான்ஸ்லூசென்ட்) பவுடரை முகத்தில் பூசிக் கொண்டு, ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். உங்கள் முகத்திலிருந்து வெளிப்படும் சூடானது உங்கள் மேக்கப்புடன் ஒன்று சேர்வதற்கு உதவி செய்யும். சில நிமிடங்கள் கழித்து பவுடரை முகத்திலிருந்து நீக்கிவிடுங்கள், பிறகு பாருங்கள்!  உங்கள் கன்சீலர் நீண்ட நேரம் இருப்பதற்கு பேக்கிங் உதவி செய்ததை நீங்கள் உணரும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். வெற்றி மீது வெற்றி
நிபுணரைப் போல் பேக் செய்ய இந்த வழிமுறைகளின்  உங்களுக்கு உதவியாக இருக்கும்.

 

சரியான வழியில் உங்களுடைய மேக்கப்பை எவ்வாறு பேக்கிங் செய்து கொள்வது

வழிமுறை 01 : உங்கள் கண்களைச் சுற்றிலும் ஒரு ஹைட்ரேட்டிங் ஐ க்ரீமால் தடவ  ஆரம்பியுங்கள். அப்படிச் செய்யும் போது, உங்கள் கண்கள் பகுதிகளில் தோன்றக் கூடிய மெல்லிய வரிகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து, கண்களை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.  உங்களுக்காக Dermalogica Stress Positive Eye Lift ஐ நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அது உங்கள் கண்களுக்கு மலர்ச்சியையும், கண் அழுத்தத்தையும் குறைக்கும்.
வழிமுறை 02 : உங்கள் முகம் மற்றும் கழுத்திற்கு ஃபௌண்டேஷனை நன்றாக தடவிக் கொண்டப் பிற உங்கள் கண்களின் கீழ்ப்பகுதியை பிரகாசமாக்கவும், மூக்கு மற்றும் வாயின் பக்கவாட்டுப் பகுதியில் ஏற்படும் நிறமிகளை மறைக்கவும், Lakmé Absolute White Intense Liquid Concealerஐ போன்ற ஒரு கன்சீலரை பயன்படுத்தவும். ஒரு ஈரமான மேக்கப் பஞ்சினால், கன்சீலரை நன்றாக சேர்க்கவும்.
 வழிமுறை 03 : உங்களுடைய மேக்கப் காலையிலிருந்து மாலை வரை ஒரு அங்குலம்கூட கலையாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், கன்சீலரை இரண்டாவது முறை பயன்படுத்த   நாங்கள் பரிந்துரைக்கிறோம். முதலில் பூசிக் கொள்ளும்போது, சற்று அதிகமாக இருப்பதாகத் தோன்றும், ஆனால், இரண்டாவது முறை பூசிக் கொள்ளும்போது முதல் முறை செய்ததை மறைத்து விடும்.  
வழிமுறை 04 : உங்களுடைய பஞ்சு போன்ற ஒரு ஐஷேடோ ப்ரஷ்ஷில் ஒளிகசியும் (டிரான்ஸ்லூசென்ட்) பவுடரை எடுத்துக் கொண்டு, கன்சீலர் பூசியிருக்கும் முகம் முழுதும் தூவி விடுங்கள். அப்படி செய்யும் போது உங்களுடைய மேக்கப் மதியம் வரை நீங்கள் மீண்டும் டச் அப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இப்போது எவ்வளவு சிறப்பாக உள்ளது பாருங்கள். இதற்கு மாற்றாக ஒரு ஈரமான பஞ்சினால் பவுடரின் மீது லேசாக தட்டி விடுங்கள்.

வழிமுறை 05 : இறுதியாக பேக் செய்ய வேண்டும். பவுடர் உங்கள் முகத்தில் படிந்திட குறைந்தது 10 நிமிடங்களாகும். உங்கள் முகத்தை சுருக்கங்களில்லாமலும், மென்மையாகவும் வைத்துக் கொள்வதற்கு பவுடரை தூவி விடுங்கள்