மேக்கப் வல்லுனர்கள் பிரைமர் புகழ் பாடுவதையும், அழகு கலை வலைப்பதிவாளர்கள் பல காலமாக இதை பயன்படுத்தி வருவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இருப்பினும், பிரைமர் மேக்கப் சாதனங்களில் மிகவும் புதிரானதாக தொடர்கிறது.  நிலையான மற்றும் முழுமையான மேக்கப்பிற்கு பிரைமர் முக்கியமானது என்பதை எல்லோரும் அறிந்திருந்தாலும், இதன் பயன்பாடு தொடர்பாக இன்னமும் பலவித குழப்பங்களும், சந்தேகங்களும் இருக்கின்றன.

பிரைமரை பயன்படுத்த சரியான வழி எது? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்?  இது போன்ற கேள்விகள் உங்கள் மனதிலும் இருந்து, பிரைமரை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது எப்படி? என அறியும் ஆர்வமும் உங்களுக்கு இருந்தால், கவலை வேண்டாம், அதற்கான பதிலை நாங்கள் அளிக்கிறோம். பிரைமிங் செய்து கொள்வது தொடர்பான அடிப்படை தகவல்கள் இதோ உங்களுக்காக:

 

முதலில், பிரைமர் என்ன செய்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

முதலில், பிரைமர் என்ன செய்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

எளிமையாக சொல்வது என்றால், பிரைமிங் என்பது, மேக்கப்பிற்கு உங்கள் சருமத்தை தயார் செய்வதாகும். பிரைமர் , உங்கள் சருமம் மற்றும் மேக்கப்பிற்கு இடையிலான லேயராக செயல்பட்டு, மேக்கப் நீடிக்க வழி செய்கிறது.  பிரைம் செய்வது மற்றும் சருமத்தை தயார் செய்வது தவிர வேறு பலவிதங்களிலும் இது செயல்படுகிறது. சரியான பிரைமர், உங்கள் சருமத்தை நீர்த்தன்மை பெற வைத்து, உங்கள் சரும துளைகளை அடைத்து, நுண்கோடுகளை மறைத்து, உங்கள் மேக்கப்பை காத்து, ஒளிரச்செய்கிறது.

 

ஆனால், எந்தப் பிரைமரை பயன்படுத்துவது?

ஆனால், எந்தப் பிரைமரை பயன்படுத்துவது?

சரும துளைகள் தெரியாமல் இருப்பது மற்றும் மேட்டே பினிஷ் ஆகியவை உங்கள் எதிர்பார்ப்பு எனில்,

நீங்கள் நாடலாம்.  டிண்டெட் பிரைமர், கலர் கரெக்டராகவும் செயல்பட்டு இரட்டை பலன் அளிக்கும். மென்மையான சருமத்திற்கு மற்றும் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க அல்லது உள்ளிருந்து ஒளிர்ந்து பனித்தோற்றம் அளிக்க, டெர்ம்டாலாஜிகா ஸ்கின்பர்பெக்ட் பிரைமர் எஸ்.பி.எப் 30 ஐ  நாடவும். நீங்கள் கண் மேக்கப்பில் கவனம் செலுத்துபவர் எனில், ஐ பிரைமரை நாடுவது பொருத்தமாக இருக்கும். ஐ பிரைமரை பயன்படுத்துவது, உங்கள் ஐஷேடோ பூசிக்கொள்ளாமல் நிலைத்து நிற்பதை உறுதி செய்கிறது.

 

எங்கே, எப்போது பிரைமரை பயன்படுத்துவது?

எங்கே, எப்போது பிரைமரை பயன்படுத்துவது?

பிரைமரை பயன்படுத்துவது என்பது தயாரிப்புக்கு முந்தைய நிலை என்பதால், உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்த பிறகு மற்றும் மேக்கப் சாதனங்களை நாடுவதற்கு முன் இதை பயன்படுத்தவும். சீரான தன்மையை பெற, முகத்திற்கான பிரைமரை பயன்படுத்தவும். கண்களில் மேக்கப் செய்வதற்கு முன், கண் பகுதியை நீர்த்தன்மை பெற வைக்க கொஞ்சம் தீட்டிக்கொள்ளுங்கள். கூடுதல் ஈர்ப்பை உண்டாக்க, இமைகள் மீது மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன் பிரைமரை பயன்படுத்தவும்

 

பிரைமரை எப்படி பயன்படுத்தி, அதிக பலன் பெறுவது?

பிரைமரை எப்படி பயன்படுத்தி, அதிக பலன் பெறுவது?

சிட்டிகை அளவு பிரைமர் எடுத்துக்கொண்டு, அதை கைவிரல் அல்லது பிரெஷ் அல்லது ஸ்பாஞ்சால் மெல்ல தடவிக்கொள்ளவும். அது உலர் சற்று அவகாசம் அளிக்கவும். ஒரு நிமிடம் வரை தேவைப்படலாம். அதன் பிறகு வழக்கம் போல மேக்கப் போட்டுக்கொள்ளவும்.