குறைவான மேக்கப்புடன், இயற்கையான ரோஸ் நிற கன்னங்களுடன் இருப்பது தான் கோடை காலத்திற்கு உகந்தது. சீக் டிண்ட் உங்களிடம் இல்லையெனில், அதை வாங்கி வைத்துக் கொள்வதற்கான சரியானத் தருணம் நேரமிது. பவுடர் ப்ளஷ் போல் அல்லாமல் காண்பதற்கு மிக அழகாகவும் இருக்கக் கூடிய இவைகள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றானதாகும், சீக் டிண்ட்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானதாகும்.
அந்த அழகான ஜொலிப்பைப் பெறுவதற்கு ஒரு சீக் டிண்டிகளை எப்படிப் பூசிக் கொள்வது என்பதை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். இக் கட்டுரையின் வாயிலாக, எங்களுக்கு பிடித்தமான தயாரிப்புகளை வெளிப்படுத்துவதற்கு முன், சீக் டிண்ட்டை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி உங்களுக்குப் படிப்படியாக காண்பிக்கப் போகிறோம். ஒரு பலநோக்கு செயல்திறன் கொன்ட க்ரீமையை அடிப்படையாகக் கொன்டுத் தயாரிக்கப்பட்ட, இந்த Lakmé 9to5 Weightless Mousse Lip and Cheek Colorஐ உங்கள் உதடுகளிலும், கன்னங்களிலும் பூசிக் கொள்ளவும். வித்தியாசமான லுக்கைப் பெற எண்ணற்ற ஷேட்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வழிமுறை 01: உங்கள் புறங்கையில் கொஞ்சம் டிண்ட்டை எடுத்துக் கொள்ளவும்
உங்கள் கைகளின் பின்பக்கத்தில் கொஞ்சம் சீக் டிண்ட்களை எடுத்துக் கொண்டு துவங்குங்கள். உங்கள் கன்னத்தின் மீது உண்டாகும் மறைக்க முடியாத திட்டுகளிலிருந்து தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இது ஷேட்களிலுள்ள நிறங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. சுத்தமான கைவிரல்களைப் பயன்படுத்தி, கன்னங்கள் மீது நன்றாக பரப்பி விட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
வழிமுறை 02: உங்கள் கன்னங்களில் தடவிக் கொள்ளவும்
உங்களின் ஆள்காட்டி விரல், நடுவிரல், மற்றும் மோதிர விரலைப் பயன்படுத்தி, டிண்ட்டை கைகளின் பின்புறத்திலிருந்து எடுத்து உங்கள் கன்னங்களின் மீது மென்மையாகத் தடவி விடுங்கள். உங்கள் முகத்தில் டிண்ட்டை எந்த திட்டுக்களையும் விட்டுவிடாமல், ஒரே சீராக தடவி விடுவதற்கு உங்கள் கைகள் ஒரு சிறந்த கருவியாகும்.
வழிமுறை 03: கலவைகளை நன்றாக சேர்க்கவும்
நீங்களாகவே, சீக் டிண்ட்டை பூசிக் கொள்ளத்
துவங்கிவிட்டீர்களென்பதால், ஒரு இயற்கையான தோற்றத்தை பெறுவதற்காக சரியான கலவையை தயார் செய்வது தான் உங்களின் அடுத்த நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஒரு இயற்கையான சரும நிறத்தைப் பெற, கன்னங்களின் ஆப்பிள் மேடுகளிலிருந்து துவங்கி கன்னங்களின் எலும்புகள் வரை நிறங்களை ஒன்றாக சேர்த்துக் கீழ் நோக்கிக் கொண்டு வர வேண்டும். இப்போது அதை நீங்கள் சரியாக செய்து வீட்டீர்கள். வெறும் மூன்றே வழிமுறையில் இயற்கையானத் தோற்றம், ரோஸ் நிற கன்னங்களை நீங்கள் பெறுவீர்கள்.
Written by Kayal Thanigasalam on Jun 15, 2021
Author at BeBeautiful.