ரொசேசியா என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். சருமத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுத் திட்டாக ஏற்படும். இந்தப் பிரச்சனை இருந்தால் ப்ளஷ் பயன்படுத்தவே முடியாது. ஏற்கனவே சிவப்பாக இருக்கும் சருமத்தில் ப்ளஷ் அப்ளை செய்தால் ரொசேசியா இன்னும் மோசமாகும். உங்கள் தோற்றம் பாதிக்கப்படும். ஆனால் சரியாக பயன்படுத்தும் போது நீங்கள் பயன்படுத்தும் ப்ளஷ் ரொசேசியா பிரச்சனையை சமன்படுத்துவதோடு அழகிய தோற்றத்தையும் கொடுக்கும். இதோ டிப்ஸ்.

 

01. சமநிலைப்படுத்தப்பட்ட பேஸ்

சமநிலைப்படுத்தப்பட்ட பேஸ்

ப்ளஷ் பயன்படுத்தும் முன்பு ரொசேசியா பாதித்த பகுதிகளை சமநிலைப்படுத்த வேண்டும். சிவப்பு நிறத்தை சமன்படுத்துவதற்கு பச்சை நிற கரெக்டர் பயன்படுத்தலாம்.

 

02. மென்மையாக பளன்ட் செய்தல்

மென்மையாக பளன்ட் செய்தல்

ரொசேசியா பாதித்த சருமத்தில் மென்மையாக மேக்கப் அப்ளை செய்ய வேண்டும். உணவு, தண்ணீர் போன்றவை ரொசேசியா பாதிப்பை மோசமாக்கலாம். மென்மையான மேக்கப் பிரஷ் பயன்படுத்தவும். அடிக்கடி சருமத்தை க்ளீன் செய்வது மூலம் தூசி அல்லது பாக்டீரியாவை நீக்க வேண்டும்.

 

03. அதிக பிக்மென்ட் கொண்ட நிறங்களைத் தவிர்க்கவும்

அதிக பிக்மென்ட் கொண்ட நிறங்களைத் தவிர்க்கவும்

அதிக பிக்மென்ட் கொண்ட சிவப்பு, பிங்க் நிறங்களைத் தவிர்க்க வேண்டும். இது சருமத்தில் இயற்கையாக உள்ள சிவப்பு நிறத்தை அதிகமாக்கிவிடும். சாஃட் கோரல், பீச் நிறங்களை பயன்படுத்தலாம்.

பி.பி பிக்ஸ்: Lakme Face Sheer Blusher - Sun Kissed

 

04. ப்ரான்ஸர் பயன்படுத்தவும்

ப்ரான்ஸர் பயன்படுத்தவும்

பீச் நிறங்கள் உங்களுக்குப் பிடிக்காது என்றால் ப்ரான்ஸர் ப்ளஷ் பயன்படுத்தலாம். ப்ரான்ஸரில் உள்ள ஆழமான நிறமிகள் சருமத்தின் இயற்கையான சிவப்பு நிறத்தை மறைக்கும். லேசான நிறமிகள் கொண்ட பிரான்ஸர் (உதாரணத்திற்கு, தங்க நிற அன்டர் டோன்) பயன்படுத்த வேண்டும்.

 

05. பவுடர் ப்ளஷ்

பவுடர் ப்ளஷ்

எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும் எல்லா பொருட்களையும் ரொசிசேயா பாதித்த சருமத்தில் பயன்படுத்தலாம். பவுடர் ப்ளஷ் பயன்படுத்தும் போது மேக்கப் மேட் லுக் கொடுக்கும்.

பி.பி பிக்ஸ்: Lakme Absolute Face Stylist Blush Duos - Coral Blush