எவ்வளவு நெருக்கடியில் இருந்தாலும் நாம் லிப்ஸ்டிக் வாங்குவதை நிறுத்த மாட்டோம். சரிதானே. எவ்வளவு லிப்ஸ்டிக் வாங்கிக் குவித்தாலும் புதிதாக வாங்க இடமிருக்கும்தானே?
பேங்க் பேலன்ஸ் பாதிக்காமல் இந்த லிப்ஸ்டிக் பேராசையை பூர்த்தி செய்வது எப்படி? அதிகம் செலவிட்டு வாங்கும் லிப்ஸ்டிக்குகளுக்கு பதில் பட்ஜெட் லிப்ஸ்டிக்குகளுக்கு மாறுவதுதான் எளிமையான தீர்வு. சிறந்த பட்ஜெட் லிப்ஸ்டிக் பட்டியல் இதோ. இவை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
- 01. Elle 18 Color Pops Matte Lip Color
- 02. Lakme Forever Matte Liquid Lip Color
- 03. Lakme 9 to 5 Primer + Matte Lip Color
- 04. Elle 18 Go Matte Lip Crayons
- 05. Lakme Absolute Matte Ultimate Lip Color with Argan Oil
01. Elle 18 Color Pops Matte Lip Color

விலை ரூ. 75/-
கல்லூரி செல்லும் யுவதிகளுக்கு Elle 18 Color Pops range மிகவும் ஏற்றது. பல்வேறு நிறங்களில் வரும் இந்த பொருட்களை நீங்கள் நிச்சயம் பயன்படுத்தி பார்க்கலாம். போல்ட், மேட் ஃபினிஷ்கூட கிடைக்கிறது. 100 ரூபாய்க்குக் கீழேகூட கிடைக்கிறது தெரியுமா. வேறு காரணம் என்ன வேண்டும்?
02. Lakme Forever Matte Liquid Lip Color

விலை ரூ. 295/-
அதிக கலர் சேர்ப்பதாலும் அதிக நேரம் நீடிப்பதற்கான பொருட்கள் சேர்ப்பதாலும்தான் பெரும்பாலான லிப்ஸ்டிக்குகள் காஸ்ட்லியாக இருக்கின்றன. Lakme Forever Matte Liquid Lip Color வாங்கினால் அதே போன்ற ஃபினிஷ், கலர் குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும். 30 விசேஷமான கலர்கள் இவர்களிடம் உண்டு. பயன்படுத்திய சிறிது நேரத்திலேயே இந்த லிப் கலர் உலர்ந்து, மேட் ஃபினிஷ் கொடுக்கும். நாள் முழுவது அழியாது.
03. Lakme 9 to 5 Primer + Matte Lip Color

விலை ரூ. Rs. 299/-
அசத்தலான லிப் கலர்களும் வேண்டும் அது உதடுகளை பாதிக்காதவையாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா… Lakme 9 to 5 Primer + Matte Lip Color ஒரு நல்ல தேர்வு. பிங் முதல் மெல்லிய ஊதா வரை, நியூட்ஸ் முதல் சிவப்பு நிறம் வரை நீங்கள் விரும்பும் எல்லா நிறங்களும் இதில் கிடைக்கும். இதிலேயே ஒரு ப்ரைமர் உள்ளது. நிறம் நன்றாக இருப்பதோடு, நீண்ட நேரம் தாங்கும் என்பதால் இது ஒரு சிறந்த சாய்ஸ்.
04. Elle 18 Go Matte Lip Crayons

விலை - ரூ. Rs. 110/-
லிப் க்ரேயான் பயன்படுத்தும் போது எளிதாக அப்ளை செய்ய முடியும் கலர் அடர்த்தியாகவும் இருக்கும். Elle 18 Go Matte Lip Crayons அதே பலனைக் கொடுக்கும். ஒரே ஒரு முறை பூசினாலே ஸ்மூத் லுக் கிடைக்கும்.
05. Lakme Absolute Matte Ultimate Lip Color with Argan Oil

விலை - ரூ. Rs. 450/-
சில மணி நேரங்களில் உதடுகளை உலர்ந்து போக வைக்கிறதா உங்கள் லிப்ஸ்டிக். Lakme Absolute Matte Ultimate Lip Color with Argan Oil அதற்கு நல்ல தீர்வு. அர்கன் ஆயில் கொண்ட இதில் அசத்தலான கலர்கள் கிடைக்கின்றன. அதோடு உதடுகளுக்கு சத்தும் கிடைக்கும். இந்த லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது சூப்பரான தோற்றமும் கிடைக்கும் உதடுகளுக்கு நல்ல ஊட்டச் சத்தும் கிடைக்கும்.
Main image courtesy: @nargisfakhri and @realhinakhan
Written by Kayal Thanigasalam on Nov 18, 2020