ஒவ்வொரு அழகு சாதன பிரியைகளின் தேடலுக்கான விடையாக திரவ லிப்ஸ்ட்க் அமைகிறது. அவற்றில் வண்ணம் தீவிரமாக இருப்பதோடு, பளளப்பான தோற்றம் தந்து, மதிய உணவு நேரத்தில் பர்ஜரை சுவைத்த பிறகும் நீண்ட நேரம் நிலைத்து நிற்கிறது. உங்கள் லிஸ்ஸ்டிக் சரியாக இருக்கிறதா? என்று அடிக்கடி அருகாமையில் உள்ள கண்ணாடியை தேடி ஓட வேண்டியதில்லை. இவை வழக்கமான லிப்ஸ்டிக் போல பூசுவதற்கு எளிதானதல்ல மற்றும் இதில் நீங்கள் தேர்ச்சியும் பெற வேண்டும். ஆனால் இது பழகிவிட்டால் அதன் பிறகு எந்த சிக்கலும் இல்லை.

பண்டிகை காலம் நெருங்க உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் பயன்படுத்திப்பார்க்க கூடிய திரவ லிப்ஸ்டிக்களை பட்டியலிடுகிறோம்.

 

ஒவ்வொரு மனநிலைக்கு

ஒவ்வொரு மனநிலைக்கு

பீச்சி நீயூட்ஸ், ஃபயர் இஞ்சின் ரெட், மூடி பர்கண்டீஸ் என பல ரகங்கள் இருக்கின்றன. உங்கள் மனநிலை மற்றும் நிகழ்வுகளின் தன்மைக்கேற்ப திரவ லிப்ஸ்டிக் பலவித ஷேட்களில் கிடைக்கின்றன. நீங்கள் பாஸ் போல தோன்ற வேண்டும் எனில் சிவப்பு வண்ணத்தை தேர்வு செய்யலாம். டேட்டிங்கிற்கு செல்லும் போது பிங்க் வண்ணத்தை நாடலாம். இரவு விருந்து எனில், டீப் பர்கண்டீஸ் வண்ணம் ஏற்றதாக இருக்கும். 

 

பாதுகாப்பானவை

பாதுகாப்பானவை

திரவ லிப்ஸ்டிக் முத்தம், பர்கர் மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படுவதில்லை. வேறு என்ன வேண்டும்? ஆக நாளின் எந்த நேரத்திலும், அவை பாதிக்கப்படாமல் இருக்கும் என்பதால் மீண்டும் மீண்டும் சரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. 

 

நீடிக்கும் தன்மை

நீடிக்கும் தன்மை

லேசில் அழியாது என்பதோடு இவை நீடித்து இருக்க கூடியவை. நாள் முழுவதும் இருக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உதடுகளின் மீது லேசாகவும் இருக்கும். இரவு நேரத்தில் இவற்றை அகற்ற மேக்கப் ரிமூவர் அல்லது ஆலியி க்ளின்சரை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

 

லிப்லனைர் வேண்டாம்

லிப்லனைர் வேண்டாம்

உதடுகளின் பரப்பிற்குள் லிப்ஸ்டிக்கை வைத்திருக்க மற்றும் அவற்றுக்கு அடர்த்தி அளிக்க லிப்லைனர் தேவை. ஆனால் திரவ லிப்ஸ்டிக் தன்மை காரணமாக உங்களுக்கு லிப்லைனர் அவசியம் இல்லை. திரவ லிப்ஸ்டிக்குடன் அளிக்கப்படும் பிரெஷ் அல்லது வாண்ட் உங்கள் உதடு வண்ணத்தை சீராக்க உதவுகிறது. எனவே லிப்லைனர் தேவையில்லை. 

 

பளபளப்பு அழகு

பளபளப்பு அழகு

நீளமான கூந்தல் உள்ள பெண்கள் இதை அறிந்திருப்பார்கள். பளபளப்பான லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது, காற்று அடித்து முகத்தில் கூந்தல் படரும் நிலை ஏற்பட்டால், அவற்றின் கீற்று முகத்தில் படரலாம். ஆனால் திரவ லிப்ஸ்டிக்கில் இந்த பிரச்சனை இல்லை. திரவ லிப்ஸ்டிக் உலர்ந்து போய்விடுவதால் ஒட்டிக்கொள்வதில்லை. எனவே, உங்கள் கூந்தல் அழகாக அலைபாயட்டும், நீங்கள் உற்சகமாக நடனமாடுங்கள், எந்தப் பிரச்சனையும் இல்லை.