லிப்ஸ்டிக் பூசுவது, உங்கள் மேக்கப்பிற்கு முத்தாய்ப்பாக அமைகிறது. உங்கள் லிப்ஸ்டிக் உதட்டிற்கு அளிக்கும் ஷேட் மேக்கப்பை மேம்படுத்தலாம் அல்லது பாழாக்கலாம். ஷாப்பிங் செய்யும் போது எளிதாக லிப்ஸ்டிக் வாங்கலாம் என்றாலும், இது குழப்பமாகவும் அமையலாம். எனவே, உங்கள் தோற்றத்திற்கு ஏற்ற லிப்ஸ்டி ஷேடை தேர்வு செய்ய வழி காட்டுகிறோம்.
 

நல்ல நிறம் இருந்தால்..

நல்ல நிறம் இருந்தால்..

உங்கள் சருமம் நல்ல நிறமானது எனில், நீங்கள் பிரகாசமான வண்ணங்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், நியூட்ஸ் வகை ஏற்றதாக இருக்காது. அவை பளிச்சென தெரியாது. ஆபிரிகாட் மற்றும் கோரல்ஸ் ஆகிய வண்ணங்கள் நன்றாக இருக்கும். மவுஸ் மற்றும் மோச்சா ஷேட்களையும் நீங்கள் நாடலாம். 

 

மாநிறம் எனில்...

மாநிறம் எனில்...

கோதுமை நிறத்தின் அருமை என்னவெனில், எந்தவிதமான வண்ணத்துடனும் ஒத்துப்போகும். உங்களுக்கு இந்த நிறம் இருந்தால், நீங்கள் நீயூட்ஸ் முதல் டார்க்ம் ஷேட் வரை முயற்சித்து அசத்தலாக காட்சி அளிக்கலாம். பிரான்ஸ், சின்னாமோன் மற்றும் தாமிர ஷேட்களையும் நாடலாம். சிவப்பு மற்றும் வைன் போன்ற அடர் வண்ணங்களையும் நாடலாம்.

 

மங்கலான நிறம் எனில்...

மங்கலான நிறம் எனில்...

உங்கள் சருமத்தின் நிறம் மங்கலானது எனில், மிதமானது முதல் அடர் வண்ண ஷேட்கள் உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். மென்மையான, பெண்மை தோற்றம் விரும்பினால் பிங்க் ஷேடை தேர்வு செய்யலாம். பிரவுன் மற்றும் பெரி ஷேட்கள் உங்கள் தோற்றத்திற்கு மிகவும் எடுப்பாக இருக்கும். அசத்தலான தோற்றத்திற்கு பிரிக் ரெட், பிரவுனிஷ் ரெட் மற்றும் காரமல் வண்ணங்களையும் நீங்கள் நாடலாம். உங்கள் சருமத்தின் நிறம் என்னவாக இருந்தாலும், நீங்கள் நியூட் ஷேடை பயன்படுத்த விரும்பினால், உங்கள் உதட்டு நிறத்திற்கு பொருத்தமான வண்ணத்தை தேர்வு செய்வது சிறப்பாக இருக்கும். உங்கள் உதட்டு வண்ணத்தை தேர்வு செய்ததும், அதே ஷேடில் நல்ல தரத்திலான லிப் லைனரை நாடவும். உங்கள் உதடு வண்ணம் மிகையாக இல்லாததை லிப் லைனர் உறுதி செய்யும்.