மேக்க உலகைப்பொருத்தவரை, முழு அளவிலான மேக்கப் சாதனங்கள் அனைத்தையும் பெற்றிருந்து, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்திருக்கும் போது தான் நீங்கள் சரியான நிலையை அடைந்திருப்பதாக பொருள். எனினும் இன்னமும் மேக்கப் உலகின் புதியவர்களாக இருப்பவர்களுக்கு இது கொஞ்சம் சிக்கலாக தோன்றலாம். நீங்கள் பிரெஷ்கள் தேவை தானா என்று குழம்பித்தவிக்கலாம். இந்த குழப்பம் பலருக்கும் இருப்பது தான். பல வகையான மேக்கப் பிரெஷ்கள் இருக்கும் நிலையில், எந்த பிரெஷ் எதற்கு என்பதை நினைவில் கொண்டு, அவற்றை சரியாக பயன்படுத்துவது கொஞ்சம் கடினமானது தான். உங்கள் பிரச்சனையை புரிந்து கொண்டு வழிகாட்டுகிறோம் வாருங்கள்.   

உங்கள் குழப்பத்திற்கு தீர்வு அளிக்கும் வகையில், எந்த மேக்கப் சாதனத்திற்கு எந்த வகை பிரெஷ் பொருத்தமாக இருக்கும் என வழிகாட்டுகிறது. இந்த பிரெஷ்கள் தான் உங்கள் மேக்கப் பெட்டியில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டியவையும் கூட.. 

 

பிளேட் பவுண்டேஷன் பிரெஷ்

பிளேட் பவுண்டேஷன் பிரெஷ்

பிளேட் பவுண்டேஷன் பிரெஷ் உங்கள் அழகு சாதன கலெக்‌ஷனில் அதிகம் பயன்படக்கூடியது. சருமத்தின் மீது உங்கள் பவுண்டேஷன் எந்தவித பிசிறும் இல்லாமல் மென்மையாக படர்வதை உறுதி செய்வது தான் இதன் முதன்மையான நோக்கம். பிலெண்டிங் கிரீம் அல்லது திரவ பவுண்டேஷனை சிக்கல் இல்லாமல் பயன்படுத்த இந்த பிரெஷ் மிகவும் ஏற்றது.  

 

கபுகி பிரெஷ்

கபுகி பிரெஷ்

கபுகி பிரெஷ் பலவித பயன்களை கொண்டவை. உங்கள் முகத்தின் முக்கிய பரப்பில் பவுடர் பூச இந்த பிரெஷ் பிரதானமாக பயன்படுகிறது. இதன் மேல் பகுதி தட்டையாகவும், மிகவும் மென்மையான அடர்த்தியான உட்பகுதியும் பவுடர் பவுண்டேஷனை பூசிக்கொள்ள மிகவும் ஏற்றதாக ஆக்குகிறது. பிலெஷை சரி செய்ய மற்றும் பிரான்சரை சரி செய்யவும் பயன்படுத்தலாம்.

 

காண்டூர் பிரெஷ்

காண்டூர் பிரெஷ்

காண்டூர் பிரெஷ் பொதுவாக வளைந்த மேல் பகுதி மற்றும் அடர்த்தியான தன்மையை பெற்றுள்ளது. நல்ல காண்டூர் பிரெஷ் பொதுவாக மிகவும் அடர்த்தியானது என்பதொடு, மிகவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டது. முகத்தில் திட்டுகள் ஏற்படாமல் தடுக்கிறது. உங்கள் கன்னப்பகுதி கீழ் இவை கச்சிதமாக பொருந்தும். நீங்கள் விரும்பிய தன்மையை பெற வழி செய்யும். கிரீம் மற்றும் பவுண்டர் காண்டூரிங் மேக்கப் இரண்டுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.

 

பிலெஷ் பிரெஷ்

பிலெஷ் பிரெஷ்

பவுடர் பிரெஷை விட சிறியர்தாக இருக்கும் என்பது இந்த வகை பிரெஷின் தனித்தன்மையாகும். கூம்பு வடிவில் பலவித அம்சங்களோடு அமைந்துள்ளது. நீளமான மென்மையான பிரெஷ் கீற்றுகளை கொண்டது. வழக்கமான பிரெஷை விட அதிக தீவிரமான பயன்பாட்டிற்கு இது உதவுகிறது. சிறப்பாக பிலெண்ட் செய்ய மற்றும் வண்ணம் கூட்டவும் உதவுகிறது.

 

ஐஷேடோ பிலெண்டிங் பிரெஷ்

ஐஷேடோ பிலெண்டிங் பிரெஷ்

உங்கள் ஐஷேடோ கச்சிதமாக சிறப்பாக இல்லை எனும் எண்ணம் இருந்ந்தால், அதற்கு காரணம் நீங்கள் பிலெண்டிங் பிரெஷை பயன்படுத்தாமல் இருப்பதாக அமையலாம். இந்த பிரெஷின் நீண்ட கீற்றுகள் பயன்படுத்தப்படும் போது ஐஷேடோவில் மாயம் நிகழ்வதை நீங்கள் உணரலாம். பிலெண்ட் செய்வது, பூசுவது மூலம் இது கடினமான கோடுகளை சரி செய்கிறது. வண்ணங்களையும் சீராக்குகிறது.