நமக்கு எது பொருந்தும் என உங்களுக்குத் தெரியாவிட்டால் அழகு நிலையத்தில் நெயில் கலர் தேர்ந்தெடுப்பது தலைவலிதான். உங்களின் ஃபேவரைட் அழகுக் கலை நிலையத்தில் இருக்கும் நிறங்களில் வரிசையில் எதைத் தேர்ந்தெடுப்பது என நினைக்கும் போது மயக்கமே வந்துவிடும். அவசரமாக தேர்ந்தெடுக்கும் நெயில் கலர் போல உங்கள் நாளை சொதப்பும் வேறொன்று இருக்காது. ஃபவுண்டேஷன் போல, லிப்ஸ்டிக் போல உங்கள் சருமத்திற்கு பொருத்தமான நெயில் கலர் தேர்ந்தெடுக்க வேண்டும். மாநிறம் கொண்டவர்களுக்கு ஏற்ற 5 சிறந்த நெயில் கலர்களை இங்கே தருகிறோம்.
 

01. டீப் பிரவுன்

டீப் பிரவுன்

எல்லாவிதமான பிரவுன் கலரும் மாநிறம் கொண்டவர்களுக்கு அட்டகாசமாக பொருந்தும். Lakme Absolute Gel Stylist Nail Polish in Deep Taupe தரும் க்ளாஸ் தோற்றத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்களது வெள்ளி நிற நகைகளுக்கு இது சிறப்பாகப் பொருந்தும்.

 

02. வார்ம் நியூட்ஸ்

வார்ம் நியூட்ஸ்

வார்ம் அன்டர்டோன் கொண்ட சருமத்திற்கு நியூட் ஷேட்கள் சூப்பராக இருக்கும். டீப் ஸ்கின் டோன் என்றால் நேச்சரல் ஷேட் முதல் பேபி பிங்க் வரை தேர்ந்தெடுக்கலாம். Lakme 9 To 5 Primer + Gloss Nail Color in Nude Flush பயன்படுத்தி பளபளப்பான தோற்றத்தைக் கொடுப்பது உங்கள் மேக்கப்பிற்கு பொருத்தமாக இருக்கும்.

 

03. டிலைட்ஃபுல் நியான்

டிலைட்ஃபுல் நியான்

மாநிற சருமத்தில் நியான் நிறம் அசத்தலாக இருக்கும். பார்க்க பளிச்சென்று, கண்ணைக் கவரும் நிறம் இது. அதிக கலர் தேவைப்படும் டீப் ஸ்கின் டோன் என்றால் இது கச்சிதமான சாய்ஸ். லெமன் யெல்லோ அல்லது துடிப்பான நியான் ஷேட்களின் கலவையை தேர்ந்தெடுக்கலாம்.

 

04. பேஸ்டல் ஷேட்

பேஸ்டல் ஷேட்

ஃபேஷன், அழகுக் கலை ஆர்வலர்களிடையே பேஸ்டல் ஷேட் மிகவும் பாப்புலர். மிலனியல் பிங்க், க்ரீமியான மின்ட் கலர், துடிப்பான மஞ்சள் சூப்பராக இருக்கும். குறிப்பாக கோடை கால ஆடைகளுக்கு இவை கன கச்சிதமாக இருக்கும். இது புரஃபஷனல்கள் தரும் டிப்ஸ்

 

05. சாக்லேட் சருமம்

சாக்லேட் சருமம்

வார்ம் ஸ்கின் டோன் இல்லை எனக்கு கூல் ஸ்கின் டோன் என்கிறீர்களா… நீங்கள் வைப்ரன்ட் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் சரும நிறத்திற்கு ஆழமான லுக் கொடுக்கும். நாங்கள் பரிந்துரைப்பது Lakme True Wear Color Crush - Shade 61. இது உங்களது டீப் ஸ்கின் நிறத்திற்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக கோடை காலத்திற்கான சிறந்த டிரென்ட் இது.