ஆர்வமிக்க ஒப்பனையாளர்களுக்கு தங்கள் தூரிகையை தீட்டுவதற்கும் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும் இந்திய பண்டிகைகள் ஒரு சிறந்த வாய்ப்பு. புதுவிதமான அழகு தோற்றங்களுக்கு இவ்விதப் பூஜைகளும், திருவிழாக்களும் அடங்கிய இந்த வண்ணமயமான மற்றும் துடிப்பான பண்டிகைகளே பிண்ணனி. என்னதான் நம்மை புதுமையாக அழகுப்படுத்தி கொண்டாலும், அதற்கு வளமான மற்றும் பளிச்சிடும் சருமம் அவசியமாகிறது. எங்களுடைய சரும பராமரிப்பு மற்றும் ஒப்பனைக்கான அழகுசாதனப் பொருள் அதற்கு உதவும். அற்புதமான தயாரிப்பான லாக்மே லுமி மாய்ஸ்டரைசர் உங்கள் சருமத்திற்கு ஈரபதத்தையும் மற்றும் பளிச்சிடும் வெண்மையை தரும். இந்த பண்டிகையில், உங்கள் அழகை மெருகேற்ற ஐந்து வழிகளோடு எங்கள் தயாரிப்பு உங்கள் கையில்... எவ்வாறு? தொடர்ந்து படியுங்கள்… Lakmé Lumi Cream

 

எங்கள் தயாரிப்பு உங்கள் அழகை மெருகேற்ற

எங்கள் தயாரிப்பு உங்கள் அழகை மெருகேற்ற

 

  • சருமத்திலுள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கும்
  • ஒப்பனை செய்ய ஏதுவாக்கும்
  • கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்கும்
  • முகத்தை பொலிவாக்கும்
  • உதடுகளை பளிச்சிட செய்யும்

ஈரப்பதத்தை அதிகரிக்க: Lakmé Lumi Cream
சிறிது மாய்ஸ்டரைசரை முகத்தில் தடவியவுடன் சட்டென்ற பிரகாசத்தை எதிர்பார்க்கிறீர்களா? உங்களை எங்களால் அறிய முடிகிறது. இதற்கு நாங்கள் பரிந்துரை செய்வது லாக்மே லுமி மாய்ஸ்டரைசர். இது சருமத்திலுள்ள ஈரப்பதத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அட்டகாசமான 3d பொலிவையும் தருகிறது. இதில் உள்ள  சத்துக்களான விட்டமின் C, B3 மற்றும் B6, கொரியன் பிங்க் பேர்ல் எக்ஸ்ட்ராக்ட், கிலிஸாரின் மற்றும் அய்யலூரோனிக் அமிலம் ஈரப்பதமிக்க, மிருதுவான மற்றும் பொலிவான சருமத்தை தருகிறது.
சிறிதளவு க்ரீமை எடுத்து உங்கள் முகத்தில் ஜென்டிலாக மசாஜ் செய்யுங்கள்... மாற்றத்தை நீங்களே காணலாம்.

 

 

ப்ரைமராக பயன்படுத்தலாம்:

ப்ரைமராக பயன்படுத்தலாம்:

ஒப்பனையாளரை கேட்டுப்பாருங்கள்... உள்ளார்ந்த பளபளப்பு மிக்க அழகையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஒரு பிரகாசமான ஒப்பனைக்கான அடிப்படை ப்ரைமரிலிருந்தே தொடங்குகிறது. பெண்களே! லாக்மே லுமி கிரீம் உங்களுக்கு அதனை சாத்தியமாக்கும். பாவுண்டஷன் போடுவதற்கு முன்னால் சிறிதளவு இந்த ப்ரைமரை பயன்படுத்துங்கள். கண் இமைக்காமல் பார்க்கத்தூண்டும் இந்த இயற்கை பொலிவின் ரகசியத்தை பார்ப்பவர்கள் உங்களிடம் கேட்காமல் இருக்கமாட்டார்கள்.

 

ஹைலைட்டராக பயன்படுத்தலாம்:

ஹைலைட்டராக பயன்படுத்தலாம்:

ஹயிலைட்டர் நம் முகத்தில் உள்ள சிறப்பான இடங்களை மேலும் அழகாக்கும். இது ஒவ்வொரு ஒப்பனையாளர்களின் பைகளிலும் இருப்பது அவசியமாகிறது. தடையற்ற பொலிவுக்கான ஹயிலைட்டராக எங்கள் லாக்மே லுமி கிரீம் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முகத்தின் அழகை பிரதிபலிக்கும் இடங்களான நெற்றி, மூக்கின் தண்டு, உதட்டிற்கு மேலே ஆகிய இடங்களில் எங்கள் க்ரீமை பயன்படுத்துங்கள். நன்றாக இருக்குமல்லவா?

 

ஐஷாடோவாக பயன்படுத்தலாம்:

ஐஷாடோவாக பயன்படுத்தலாம்:

எங்களது க்ரீமையே ஐஷாடோவாக பயன்படுத்துவது குறித்து உங்களுக்கு சற்று அதிகமாக தோன்றினாலும் இது நிச்சயம் வேலை செய்யும் என்று நீங்கள் எங்களை நம்பலாம். எங்கள் லாக்மே லுமி க்ரீமை கண்ணிமை,மடிப்பு மற்றும் ஓரங்களில் சமமாக தடவுங்கள். எங்கள் க்ரீமில் உள்ள பிங்க் பேர்ல் எக்ஸ்டராக்ட் உங்கள் கண்ணிமைகளில் பளிச்சிடும் வெண்மையை தரும் மற்றும் கிளிசரின் உங்கள் கண்களுக்கு தேவையான ஈரபதத்தையும் தரும்.

 

லிப்க்ளாஸாக பயன்படுத்தலாம்:

லிப்க்ளாஸாக பயன்படுத்தலாம்:

ஒளிரும் மாய்ஸ்ட்ரைசரான எங்கள் லாக்மே லுமி க்ரீமை உங்கள் உதடுகளுக்கு லிப்க்ளாஸாகவும் பயன்படுத்தலாம். எங்கள் தயாரிப்பிலுள்ள விட்டமின், கிளிசரின் மற்றும் ஏமோலீலியன்ட்ஸ் உங்கள் உதடுகளுக்கு ஈரப்பதம் மற்றும் பிங்க் பேர்ல் எக்ஸ்டராக்ட் வெண்மையான பளபளப்பினை தரும். இதனை லீகுவிட் லிப் கலருடனோ அல்லது அப்படியே பயன்படுத்தலாம். சிறிதளவு க்ரீமை எடுத்து உங்கள் உதடுகளில் தடவி, உதடுகளின் மடிப்பு கலையாமல் மீதமுள்ளவற்றை நன்கு துடைத்தெடுங்கள். கூடுதல் பளபளப்புக்கு சற்று அதிகமாக பயன்படுத்தலாம். பிரதான புகைப்படம், நன்றி: @stylebyami