அசத்தலான மணமகள் மேக்கப் லுக்: பிரபலங்கள் ஃபாலோ செய்த 5 ஸ்டைல்கள்

Written by Kayal ThanigasalamJul 15, 2022
அசத்தலான மணமகள் மேக்கப் லுக்: பிரபலங்கள் ஃபாலோ செய்த 5 ஸ்டைல்கள்

சினிமா என்று வரும் போது ஆக்ஷன் திரைப்படங்கள் மட்டுமல்ல அதில் நடிக்கும் உங்களது ஃபேவரைட் ஹீரோக்கள், ஹீரோயின்களும் ஸ்பெஷல்தானே. அதிலும் நடிகைகளின் அழகான தோற்றத்தில் மயங்காதவர்கள் யாராவது உண்டா. திருமணம் என்னும் முக்கியமான தருணத்தில் ஒரு ஸ்டார் போல அழகாக ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஐந்து பிரைடல் லுக்… இதோ…

 

01. யாமி கெளதம் தர் வழங்கிய அசத்தலான லிப்

கத்ரினா கைஃபின் கோல்-ரிம் கண்களும் அசத்தலான லேஷ்களும்

புகைப்படம், நன்றி: Yami Gautam

யாமி கெளதமின் மேனிழகு பொறாமை தரக்கூடியது. சிறு குறையும் தெரியாமல் பளிங்கு போன்ற மேனி கொண்டவர் அவர். ஸ்கின் எவ்வளவு முக்கியம் என உணர்ந்தவர் என புரிகிறது. தனது திருமணத்தின் போது பேஸ் மேக்கப் மிகவும் லைட்டாக இருக்கும்படி அவர் பார்த்துக்கொண்டார். அசத்தலான லிப்ஸ்டிக் மட்டுமே மேக்கப் அணிந்ததை தனியாகக் காட்டியது. அதிக மேக்கப் இல்லாத முகத்தில் லிப்ஸ் எவ்வளவு தனித்து அழகாகத் தெரியும் என்பதை புரிய வைத்தவர் அவர். ஹெவி மேக்கப் உங்களுடைய சாய்ஸ் அல்ல என்றால் கண்டிப்பாக இதை நீங்கள் ட்ரை செய்யலாம்.

 

02. பிபாசா பாசு சிங் க்ரோவரின் க்ளாஸிங் விங், ரெட் லிப்

கத்ரினா கைஃபின் கோல்-ரிம் கண்களும் அசத்தலான லேஷ்களும்

புகைப்படம், நன்றி: Ameena Hyd

கரன் சிங் கோரவை பிபாசா பாசு திருமணம் செய்து நாளாகிவிட்டது. ஆனாலும் அவரின் கல்யாண மேக்கப் லுக் இன்னமும் ஃபிரெஷ்ஷாக இருக்கிறது. கல்யாணத்திற்கு கிளாசிக் விங் ஐலைனர் பயன்படுத்தினார் பிபாசா. கூடவே ரெட் லிப்ஸ்டிக். ஏர் பிரஷ் செய்தது போன்ற ஸ்கின். கண்களின், உதடுகளின் மேக்கப் அழகு சேர்த்தது.

 

03. பிரியங்கா சோப்ரா ஜோனஸின் ரோஸி ப்ளாட் லிப்

கத்ரினா கைஃபின் கோல்-ரிம் கண்களும் அசத்தலான லேஷ்களும்

புகைப்படம், நன்றி: WedMeGood

அற்புதமான அழகு என்றால் அது பிரியங்கா சோப்ரா ஜோனஸ்தான். அவரின் மேக்கப் எப்போதும் ஃபிரெஷ் தோற்றம் கொடுக்கும். கோரல், ப்ளஷ் டோன் பயன்படுத்துவது அவரின் ஸ்டைல். கல்யாணத்திலும் ப்ளாட் செய்த கோரல் பிங்க் லிப், க்ளியர் ஸ்கின் மேக்கப்பில்தான் அவர் ஜொலித்தார்.

 

04. தீபிகா படுகோனின் பிரவுன் ஸ்மோக்கி கண்கள்

கத்ரினா கைஃபின் கோல்-ரிம் கண்களும் அசத்தலான லேஷ்களும்

புகைப்படம், நன்றி: Being

ஸ்மோக்கி கண்கள் என்றால் தீபிகா படுகோனுக்கு பிடிக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. அதில் குறையும் இல்லை. ஸ்மோக்கி பிரவுன் ஐஷேடோ அவருக்கு அம்சமாக பொருந்துகிறது. கவர்ந்திழுக்கும் கண்களுக்கு, நியூட் லிப்ஸ்களுக்கு அது பொருத்தமாக இருக்கிறது. தனது கல்யாணத்திற்கு அவர் தனது ஸ்டைலில் அழுத்தமான ஐஷேடோவில் அசத்தினார். பிரவுன் நியூட் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார். சருமத்தின் பிரான்ஸ் லுக் அழகைக் கூட்டியது.

 

05. கத்ரினா கைஃபின் கோல்-ரிம் கண்களும் அசத்தலான லேஷ்களும்

கத்ரினா கைஃபின் கோல்-ரிம் கண்களும் அசத்தலான லேஷ்களும்

புகைப்படம், நன்றி: Katrina Kaif

கத்ரினா கைஃபும் காதலர் விக்கி கெளஷலும் கனவில் காண்பது போன்ற அசத்தலாக திருமணம் செய்துகொண்டனர். கோல்-ரிம் கண்கள், நியூட் லிப்ஸ்டிக்கில் அசத்தினார் அவர். திருமணத்தின் போது பேஸ் மேக்கப் அளவாக வைத்துக்கொண்டது அவருக்கு நேச்சுரல் அழகைக் கொடுத்தது.

பிரதான புகைப்படம், நன்றி: Katrina Kaif

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
775 views

Shop This Story

Looking for something else