பொருத்தமான திருமண ஆடைகள், அவற்றை கச்சிதமாக தைப்பது, எந்த மாதிரியான மேக்கப் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது மற்றும் பொருத்தமான நகைகள் போன்றவற்றை தேர்ந்தடுக்க மணமகளுக்கு உதவுவதுதான் மணப்பெண் தோழியின் முக்கியமான கடமையாகும். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மற்றும் திருமணத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் என எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு நீங்கள் சுற்றிச் சுற்றி வேலை செய்ய வேண்டியிருக்கும். ஜாக்கிரதை. மணப்பெண்ணை கவனிக்கும் உங்களுக்கான மணப்பெண் தோழி தோற்றத்தை திட்டமிடுவதற்கு நேரம் கிடைக்காமலே போய்விடும்.

இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய வேலையை எளிதாக முடிக்க நாங்கள் இருக்கிறோம். ரொம்ப ஈஸியாக அழகான கூந்தல் மற்றும் மேக்கப்பை செய்து கொள்ளுங்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் தற்போது இவைதான் பெஸ்ட் சாய்ஸ். பிரபலங்களால் ஏற்கப்பட்ட ஒரு சில தோற்றங்களில் உங்கள் மனதை கொள்ளைக் கொண்ட மணப்பெண் தோழித் தோற்றங்களை இங்கே காணலாம்.

 

அலை அலையாய் இருக்கும் சுருட்டை முடிகள் மற்றும் மெல்லிய ஐஷேடோ.

அலை அலையாய் இருக்கும் சுருட்டை முடிகள் மற்றும் மெல்லிய ஐஷேடோ.

Image courtesy: @krystledsouza

நீங்கள் லெஹெங்கா அணிந்து கொள்ள முடிவு செய்தால், அதற்கு சிம்பிளான சுருட்டை கூந்தல்தான் சூப்பராக இருக்கும். கர்லிங் அயர்னை பயன்படுத்துவது உங்களுக்கு இதுதான் முதன்முறை என்றால், நீங்கள் அதற்கான ஸ்பெஷலிஸ்ட்டின் உதவியை நாடுவது நல்லது. உங்களின் சிறந்த தோழியின் திருமணம் உங்கள் அனுபவத்தை பரிசோதிப்பதற்கான இடமல்ல. உங்களுடைய மேக்கப் எப்போதும் ஃப்ரஷ்ஷாகவும், ட்யூவீ லுக்குடன் இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய லெஹெங்காவுக்கு பொருத்தமான ஐ ஷேடும் ஐ லிட்டும் போட்டுக் கொண்டு பிரகாசமாக இருக்க வேண்டும்..

 

காஜ்ரா கொண்டை மற்றும் சாதாரண மேக்கப்

காஜ்ரா கொண்டை மற்றும் சாதாரண மேக்கப்

Image courtesy: @tarasutaria

மணப்பெண் தோழியின் பணி எப்போதும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உங்கள் கூந்தல் எந்தவிதத்திலும் தொந்தரவு கொடுக்காமல் இருக்க ஒரு மெல்லிய கொண்டை போட்டுக் கொள்ளவும். உங்கள் கூந்தலின் அழகை மேலும் அதிகரிப்பதற்கு சில ரோஜா பூக்கள் அல்லது காஜ்ராவை சுற்றிக் கொள்ளலாம். உங்களின் ஆடையின் கலர் என்னவாக இருந்தாலும், அதற்கு நிச்சயம் ஒரு சாதாரண மேக்கபே மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

 

மிருதுவான கூந்தல் மற்றும் கோல்டன் ஸ்மோக்கி கண்கள்

மிருதுவான கூந்தல் மற்றும் கோல்டன் ஸ்மோக்கி கண்கள்

Image courtesy: @mrunalofficial2016

ரிசப்ஷனுக்கு செல்லும் போது என்ன ஆடையை அணிவது... ஒரு புடவையில் மிகவும் அம்சமாக காட்சியளிக்கும் மிருனால் தாக்கூரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆடைக்கேற்றவாறு, மிருதுவான நீண்ட கூந்தலுடன் ஒரு அழகான சோக்கர் நெக்லஸை அணிந்து கொள்ளுங்கள். எப்போதும் போட்டுக் கொள்ளும் ஸ்மோக்கி ஐ-க்கு பதிலாக, கொஞ்சம் கோல்டன் ஷிம்மர் லுக் மற்றும் ஹோ-ஸோ லுக்கும் சேர்த்துக் கொண்டால் அது உங்களுக்கு இயற்கையான அழகை தரும்.

 

ட்யூவீ மேக்கப் மற்றும் ஈஸியான போனிடெயில் கொண்டை

ட்யூவீ மேக்கப் மற்றும் ஈஸியான போனிடெயில் கொண்டை

Image courtesy: @fatimasanashaikh


இருங்க… உங்களுடைய சிறந்த தோழியின் திருமணத்தின் போது போனிடெயில் கொண்டையா ? ஏன் கூடாது? இது மிகவும் பிரபலமான ஹேர்ஸ்டைல் இல்லையா? நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஒரு வியப்பூட்டும் பின்னல் ஜடை... இந்த முக்கியமான தருணத்தில் உங்களுடைய லுக் மிகவும் பொருத்தமாக எடுத்துக் காட்டும் சிகை அலங்காரம் இது. இது பகல் நேர திருமணமாக இருந்தால், ஒரு மெல்லிய பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் ஒரு ஃப்ரஷ், ட்யூவீ மேக்கப் மட்டுமே போதுமானது.

 

சிவப்பு லிப்ஸ்டிக் மற்றும் ஹாஃப்-அப்-ஹேர்

சிவப்பு லிப்ஸ்டிக் மற்றும் ஹாஃப்-அப்-ஹேர்

Image courtesy: @realhinakhan

குட்டை தலைமுடியுடையவர்கள் தங்களுடைய கூந்தல் அழகை பாரம்பரிய முறையில் எப்படி அழகாக காண்பிப்பது என்று யோசிக்கிறார்கள். அதற்கு ஹினா கான் போல ஹாஃப்-அப் ஹாஃப்-டவுன் ஹேர்ஸ்டைலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சமாக சிவப்பு லிப்ஸ்டிக் மற்றும் சாதாரண மேக்கப்பை போட்டுக் கொள்வது எப்போதும் நல்லது.