இரவு நேரத்தில் உங்கள் நண்பிகளுடன் மகிழ்ச்சியாக வெளியே செல்வதென்பது மேக்கப் இல்லாமல் முழுமை அடையாது, இல்லையா? உங்களுக்குத் தேவையானதெல்லாம் சிறந்த பியூட்டி தயாரிப்புகளுள்ள ஒரு மேக்கப் கிட்டும், உதவிகரமான சில மேக்கப் டிப்ஸ்களும்தான். உங்கள் உதடுகள், கன்னம் மற்றும் கண்களில் சிறிதளவு வண்ணம் சேர்ப்பதன் மூலம், நீங்கள் செல்ல விரும்பும் இடங்களில் முத்திரை பதிக்கலாம். எளிமையான ஆனால் கவர்ச்சிகரமான பார்ட்டிக்கேற்ற தோற்றத்தை 30 நிமிடங்களுக்குள்ளாக எப்படிப் பெறுவது என்பதை அறிய, கீழ் உள்ள வீடியோவைப் பின்பற்றுங்கள்.

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் பார்ட்டி மேக்கப்புக்கு, நீங்கள் அணியும் உடை எவ்வளவு முக்கியமானதோ, அதற்கேற்ற உங்கள் மேக்கப்பும் அதே அளவு முக்கியமானது. இருந்தாலும், நீங்கள் எந்த வகையான ஆடையை அணியத் தேர்ந்தெடுத்தாலும், கன்சீலர், ஃபவுண்டேஷன், கோல் பிரஷ் அதோடு ஒரு செக்ஸியான லிப் கலர் போன்ற அடிப்படைகள் உங்கள் மேக்கப் கிட்டில் இருக்க வேண்டும். இந்தத் தோற்றத்தைப் பெறுவது எப்படி:
diy party makeup site

படிநிலை 1

தொழில்முறை மேக்கப்பிற்கான முதல் டிப்ஸ்? தயார் செய்தல்!

உங்கள் சருமம் மிருதுவாக இருப்பதற்கு ஒரு மாய்ஸ்சரைசரை அல்லது ஒரு மிருதுவாக்கும் சீரத்தைப் பூசி உங்கள் சருமத்தைத் தயார்செய்யுங்கள்; சூப்பர் ஹைட்ரேட்டிங் லாக்மே அப்சல்யூட் ஸ்கின் க்ளாஸ் ஜெல் க்ரீமை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.


படிநிலை 2

உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருப்பு வளையங்களை மறைக்க லாக்மே அப்சல்யூட் வொயிட் இன்டென்ஸ் கன்சீலர் ஸ்டிக்கைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். அதோடு உங்கள் மூக்கு முன்னந்தலையில் சேரும் இடத்தின் நடுப்பகுதி, கன்னம் மற்றும் உங்கள் வாயைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்ற நீங்கள் அழகாகக் காண்பிக்க விரும்பும் பகுதிகளிலும் அதைப் பூசுங்கள். மென்மையான, முழுமையான தோற்றத்திற்கு அதன் மேல் உங்கள் விரல்களால் தட்டுங்கள்.


படிநிலை 3

பின்னர் உங்கள் முகம் மற்றும் கழுத்துப்பகுதி முழுவதும் உங்கள் நிறத்திற்குப் பொருத்தமான லாக்மே அப்சல்யூட் வொயிட் இன்டென்ஸ் ஃபவுண்டேஷனைப் பூசுங்கள். கச்சிதமான அடிப்படைக்கு அதை சரியாகப் பூசுங்கள்.


படிநிலை 4

உங்கள் கன்சீலரும், ஃபவுண்டேஷனும் சரியாக இருப்பதை உறுதிசெய்ய, அதன் மேல் சிறிதளவு லாக்மே அப்சல்யூட் வொயிட் இன்டென்ஸ் காம்பேக்ட்டை ஒரு பவுடர் பிரஷ் மூலம் தட்டுங்கள். இப்போது உங்கள் ஃபேஸ் மேக்கப் தயார்.


படிநிலை 5

லாக்மே 9டு5 ஐ க்வார்டெட் இன் டெசர்ட் ரோஸ் மூலம் உங்கள் கண்களை அழகுபடுத்துங்கள். ஒரு ஃப்ராஸ்டி லுக்குக்கு அதை உங்கள் கண்களின் உள் முனைகளில் பூசி, அது பளபளப்பாகத் தெரிவதற்கு அதை உங்கள் இமைகளின் மீது பரப்புங்கள்.
படிநிலை 6

லாக்மே அப்சல்யூட் கோல் அல்டிமேட் காஜல் மூலம் உங்கள் கண்களுக்கு மேலும் வண்ணம் சேருங்கள். அதை உங்கள் வாட்டர்லைனில் பூசி அடர்த்தியாக்குங்கள். இதைத் தொடர்ந்து லாக்மே அப்சல்யூட் க்ளாஸ் ஆர்டிஸ்ட் லிக்விட் லைனரைப் பூசுங்கள், இன்னும் கொஞ்சம் வண்ணம் சேர்ப்பதற்கு ஒரு நீட்டித்த ஃப்ளிக் மூலம் மேல் இமைக் கோட்டில் மெல்லிய கோடு ஒன்றைப் வரையுங்கள். லாக்மே அப்சல்யூட் ஃப்ளட்ட்ர் சீக்ரெட்ஸ் மஸ்காராவை உங்கள் மேல் மற்றும் கீழ் இமைகளில் வெளிநோக்கிப் பூசி இறுதிகட்ட பூச்சுக்களைச் சேருங்கள்.


படிநிலை 7

லாக்மே அப்சல்யூட் ஸ்டைலிஸ்ட் ப்ளஷ் ட்யூவோஸ் மூலம் நிறம் சேருங்கள். உங்கள் கன்னங்களில் நிறங்களைப் பூசி, பிரஷ்ஷை கன்ன எலும்புகளின் நீளத்திற்கு மேல்நோக்கி பூசுங்கள்.படிநிலை 8

உங்கள் உதடுக்கு லாக்மே 9டு5 லிப் லைனர் இன் ரெட் அலர்ட்டைப் பயன்படுத்துங்கள். இது இரவுநேர மேக்கப்பிற்கு மிகவும் பொருத்தமானது. அவற்றை ஒரு லிப் பிரஷ் கொண்டு லாக்மே அப்சல்யூட் மேட் லிப்ஸ்டிக் இன் பர்கண்டி அஃபேரைப் பூசுங்கள். உதடுகள் மேலும் பெரிதாகத் தெரிவதற்கு, பேலட்டிலிருந்து மெல்லிதான ஒரு ஐஷேடோவை உங்கள் கீழ் உதட்டின் நடுவே பூசலாம்.

இந்த பார்ட்டி மேக்கப் டிப்ஸ் மூலம் நகரத்தைக் கலக்கத் தயாராகிவிட்டீர்கள்! நீங்கள் அணியத் தேர்ந்தெடுத்த உடைக்குப் பொருத்தமான அலங்காரங்களைச் சேர்க்க மறக்க வேண்டாம். டான்ஸ் ஃப்ளோரில் ஸ்டைலாக இறங்குவதற்கு உங்கள் கூந்தல் அலையலையாகப் புரளும் ஹேர் மேக்கப்பைத் தேர்ந்தெடுங்கள்.