பண்டிகை காலங்களில் மற்றவர்களை கவர்வதற்காக, அழகாக ஆடையணிந்து கொள்வது முதல் தலைமுடி மற்றும் மேக்கப் வரையுள்ள அனைத்திலும், எல்லா நேரங்களிலும் அழகாக இருப்பதை உறுதி செய்வது என்பது ஒன்று சிறுபிள்ளை விளையாட்டு அல்ல. ஆனால் நாங்கள் இங்கே இருக்கும்போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்! நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதை உறுதி செய்வதற்கு, வீட்டு பண்டிகை காலங்களில் நீங்கள் மேக்கப் செய்து கொள்வதற்கேற்ப, நாங்கள் ஐந்து மென்மையான மற்றும் எளிதாக மேக்கப் தோற்றத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். எனவே, உங்கள் சிறந்த முகத்திற்கேற்ற சிறந்த மேக்கப்பை தேர்ந்தெடுத்து, இந்த பண்டிகை நாட்களில் உங்களுடைய விருப்பமான தோற்றத்துடன் நீங்கள் வலம் வரத் தொடங்குங்கள்.

 

01. கண்டுணர முடியாத பொலிவு

01.  கண்டுணர முடியாத பொலிவு

புகைப்பட உதவி : @aditiraohydari

இத்தகைய பண்டிகை காலங்களில் உங்கள் தோற்றத்தை மிகவும் எளிமையாகவும், அழகாகவும் வைத்திருக்க நீங்கள் விரும்பினால், அதற்கு உங்களுக்கு இது தான் கட்டாயம் தேவை! ஒரு அடிப்படையான கண் கூசாத மேக்கப் செய்து கொள்ளலாம், மற்றும் நன்றாக செதுக்கப்பட்ட சிலையைப் போல கன்னங்கள் மற்றும் தாடையை நன்றாக அழகுபடுத்திக் கொள்ளலாம். மேலும் நீங்கள் அழகாக தோன்றமளிக்க உங்கள் புருவங்களைத் தீட்டிக் கொள்ளவும், ஐலேஷ்களை சுருட்டி விட்டு கொள்ளவும் மற்றும் 2-3 முறை மஸ்காராவைப் பூசிக் கொள்ளவும். உங்கள் உதடுகளில் மேலும் கொஞ்சம் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு பளபளப்பாக்குங்கள், இப்போது மற்றவர்களை கவரும்படியான தோற்றத்தைப் பெறுவீர்கள்

பீபி பிக்ஸ்:  Lakmé Absolute Spotlight Lip Gloss - Rouge Taffy

 

02. மின்னும் உணர்வு

02.  மின்னும் உணர்வு

புகைப்பட உதவி : @anushkasharma

பண்டிகை காலம் என்பது ஜொலிப்பு மற்றும் மின்னக் கூடிய அம்சங்களுடன் நாம் கொண்டாடுவதாகும். பளபளப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிரீம் ஃபௌண்டேஷனால் உங்கள் முகத்தை தயார் செய்யுங்கள். பின்னர், ஒரு ஹைலைட்டரைப் பயன்படுத்தி உங்கள் முகத்திற்கு ஜொலிப்பையும், மின்னும் பிரகாசத்தையும் சேர்க்கவும். உங்கள் கண்கள் பிரகாசமாக தோற்றமளிக்க, ஒரு நல்ல ஓல் காஜல் மற்றும் மஸ்காராவை பூசிக் கொள்ளவும். உங்கள் உதடுகளுக்கு இளஞ்சிவப்பு நீயூட் நிற லிப்ஸ்டிக்கை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு தயார்.

பீபி பிக்ஸ் : Lakmé Absolute Highlighter - Moon-Lit

 

03. சூரியனைப் போல பிரகாசம்

03.  சூரியனைப் போல பிரகாசம்

புகைப்பட உதவி :@shraddhakapoor

சூரியனைப் போன்ற பளபளப்பைப் பெற, அதிகமாக ஃபௌண்டேஷனை பூசிக் கொள்வதை தவிர்த்து விட்டு, ஒரு சிசி கிரீம் பயன்படுத்துங்கள். மேலும் கன்னத்தின் எலும்புகளுக்கு வலிமையைத் தர ஒரு ஹைலைட்டரைப் பயன்படுத்தவும். தங்கநிறம் போன்று பளபளப்பான ஐஷேடோக்களுடன், , சிறகுகளைப் போன்று ஐலைனரை வரைந்து கொள்ளவும். கடைசியாக, முழு தோற்றத்தையும் ஒன்று சேர்க்க சில காஜலையும், வெளிர் இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக்கையும் தடவ மறக்காதீர்கள்.

பீபி பிக்ஸ் : Lakmé 9To5 CC Complexion Care Cream

 

04. மேட் சரியானது

04.  மேட் சரியானது

புகைப்பட உதவி : @sangeetahairartist

உங்களுடைய மேக்கப் ஸ்டைல் மிருதுவாகவும், லேசானதாகவும் இருக்குமெனில், இந்த லுக்கை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். எந்தக் குறையுமில்லாத அடித்தளத்தைப் பெற மேட் ஃபவுண்டேஷனைப் பயன்படுத்தவும். அதைத் தொடர்ந்து உங்கள் முகத்திற்கு ஆரோக்கியமான பொலிவை சேர்க்க கொஞ்சம் ப்ளஷரை சேர்த்துக் கொள்ளவும். பின்னர், உங்கள் இமைகளின் மேல் வெள்ளிநிற ஐஷேடோக்களை கொஞ்சம் பூசிக் கொள்ளவும். இறுதியாக, கொஞ்சம் மஸ்காராவையும், லிப் க்ளாஸையும் உங்கள் உதடுகளின் மீது போட்டுக் கொண்டு உங்கள் மேக்கப்பை முடித்துக் கொள்ளவும்.

பீபி பிக்ஸ்: Lakmé Face Sheer Blusher - Sun Kissed

 

05. குறைந்தபட்சமே அழகானது

05.  குறைந்தபட்சமே அழகானது

புகைப்பட உதவி : @natashamathiasmakeup_hair

இம்மாதிரியான பண்டிகை காலங்களில் உங்கள் தோற்றம் மிக எளிமையாகவும், அழகாகவும் இருப்பதற்கு நீங்கள் வேண்டியது இது மட்டும் தான். உங்கள் இமைகளின் மேல் வெள்ளிநிற ஐஷேடோக்களை கொஞ்சம் பூசிக் கொள்ளவும். அதனைத் தொடர்ந்து, கண் இமைகள் மேலும் விரிந்து தோன்ற கொஞ்சம் மஸ்காராவை தடவிக் கொள்ளவும். பின்னர், மிக மென்மையான, அதிக பளபளப்பற்ற இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக்கை பூசிக் கொள்வதுடன் உங்களுடைய மேக்கப் நிறைவு செய்யுங்கள்.

பீபி பிக்ஸ் : Lakmé Absolute Spotlight Eye Shadow Palette - Smokin Glam

பிரதான புகைப்பட உதவி : @aditiraohydari