சிவப்புதான் புதிய டிரென்ட்! மணப்பெண்ணின் தங்க நிற ஆடைகளுடன் பொருந்தும் 5 வகையான தங்க நிற மேக்கப் லுக்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
 சிவப்புதான் புதிய டிரென்ட்!  மணப்பெண்ணின் தங்க நிற ஆடைகளுடன் பொருந்தும் 5 வகையான தங்க நிற மேக்கப் லுக்

மணப்பெண்களுக்கு ஏற்றது சிவப்பு நிறம் தான் என்ற கூறப்பட்ட நாட்கள் மலையேறி விட்டன. இந்த காலத்தில், பேஸ்டல் மற்றும் பழுப்பு போன்ற இந்த காலத்திற்கேற்ற ஷேட்களை மணப்பெண்களுக்கு தேர்வு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால், 2021ல் மணப்பெண்ணுக்கு மிகவும் பிடித்தமான ஒரு லெஹெங்காவின் நிறம்... எது என்று யூகிக்க முடியுமா? தங்கம். ஒரு கோல்டன் கலர் லெஹங்கா உங்களுக்கு மிகவும் அழகு சேர்க்கும் என்றாலும், அதற்கு இணையான மேக்கப்பை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் குழப்பமாக இருக்கும். இதற்கான மேக்கப் தோற்றத்தின் தேடுதலில் திருப்திகரமான மேக்கப் லுக் ஏதாவது உங்களுக்கு கிடைத்திருந்தால், எதற்கும் கவலைப்படாதப் பெண்ணே, 'நீ அதிர்ஷ்டசாலியானவள்! உங்கள் திருமணத்திற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த அட்டகாசமான தங்க நிற லெஹெங்காவுக்கேற்ற மிக அழகாக இருக்கக் கூடிய ஐந்து மேக்கப் தோற்றங்களின் பட்டியலை நாங்கள் தயார் செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் பாரம்பரிய மேக்கப் தோற்றத்தைப் பற்றியும் அல்லது இன்னும் வேறு ஏதாவது புதிதாக சோதித்துப் பார்க்க விரும்பிய தோற்றத்தைப் பற்றியும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது

 

01. பிரவுன் மோனோடோன் மேக்கப்

05. ப்ளாக் ஸ்மோக்கி ஐ அண்ட் நியூட் லிப்

பட உதவி: @imounioy

தங்க நிற ஆடையுடன் மட்டும் பிரவுன் நிறம் இணைவது மட்டுமல்லாமல், பெரும்பாலான இந்திய சரும நிறங்களுக்கும் ஒத்துப் போகிற ஒரு அழகான நிறமாகும். பளபளப்பான பழுப்பு நிற இமைகள் முதல் கச்சிதமான கன்னத்து எலும்புகள் மற்றும் மேட் பிரவுன் பௌட் வரை இந்த மேக்கப்பின் அனைத்து தோற்றத்தைப் பற்றியும் மிக நேர்த்தியாக கூறப்படுவதால், இதை நாங்கள் விரும்புகிறோம்!

 

02. ஸ்டேட்மெண்ட் பௌட்

05. ப்ளாக் ஸ்மோக்கி ஐ அண்ட் நியூட் லிப்

பட உதவி: @gauaharkhan

உங்கள் பாரம்பரிய உடையுடன் இந்த உதட்டுக் கவர்ச்சியையும் இணைத்துக் கொள்ள விரும்பும் நபராக நீங்களிருந்தால், கௌஹர் கான் தனது திருமணத்திற்கு அணிந்திருந்த இந்த மேக்கப் லுக்கை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். இந்தக் கவர்ச்சியான சிவப்பு நிறப் உதடுகள் அவருடைய முகத்தை உடனடியாகப் பிரகாசமாக்குகிறது எப்படி என்று நாங்கள் வியந்து கொண்டிருக்கும், அதே வேளையில் குறைந்தபட்சம், ஆடை, நகைகள் மற்றும் அதிரடியான உதட்டுச்சாயம் ஆகியவற்றை சமநிலைப்படுத்த உதவுவதற்கு அரிதாக கிடைக்கும் மேக்கப்கள் உதவுகிறது

 

03. பர்கண்டி இமை

05. ப்ளாக் ஸ்மோக்கி ஐ அண்ட் நியூட் லிப்

பட உதவி: @dollyouup_bys

நீங்கள் ரோஸ் கோல்டு அல்லது டஸ்டி கோல்ட் லெஹெங்காவை அணிய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், உங்கள் கண் இமைகளுக்கு கொஞ்சம் மிதமான நிறத்தை போட்டுக் கொள்வது சிறந்த யோசனையாகும். இந்த மேட் பர்கண்டி ஸ்மோக்கி ஐ கவர்ச்சியின் மீது நாங்கள் முற்றிலும் மயங்கி விட்டோம். ஒரு பளபளப்பான நிறம், சில இயற்கையான மலர்ச்சி மற்றும் ஒரு கிரீமி மேட் மேவ் லிப் ஆகியவற்றுடன் இணைந்தால், யதார்த்தமான, எளிமையான மணமகளுக்கு இது போன்ற அழகான திருமண மேக்கப் மிகுந்த அழகை அளிக்கும்.

 

04. ப்ரான்ஸ் கிளிட்டர்

05. ப்ளாக் ஸ்மோக்கி ஐ அண்ட் நியூட் லிப்

பட உதவி: @shaadisaga

கல்யாண வரவேற்பு, காக்டெய்ல் விருந்து அல்லது சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது தங்க நிற ஆடை அணிபவர்களுக்கு, இந்த ப்ரான்ஸ் க்ளிட்டர் மேக்கப் ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கும். இந்த மேக்கப்பை நீங்கள் போட்டுக் கொண்டால், சரியான சமநிலையை பெறுவதற்கு உங்களுடைய மற்றப் பகுதிகளின் லுக்கையும் நீங்கள் நுட்பமாக வைத்திருக்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

05. ப்ளாக் ஸ்மோக்கி ஐ அண்ட் நியூட் லிப்

05. ப்ளாக் ஸ்மோக்கி ஐ அண்ட் நியூட் லிப்

பட உதவி: @sonamkapoor

பாரம்பரியமான பிளாக் ஸ்மோக்கி ஐ மற்றும் நிர்வாண உதடு காம்போவை பயன்படுத்துவதில் உங்களலால் ஒருபோதும் தவறிழைக்க முடியாது. மணப்பெண்ணான நீங்கள் பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட பாதுகாப்பான மேக்கப் டிரெண்டுகளை போட்டுக் கொள்ள விரும்பினால், இது உங்கள் தங்க நிற லெஹங்காவுடன் அழகாக இணைப்பதற்கு இந்த உன்னதமான மேக்கப் லுக் மிகவும் பொருத்தமாக இருக்கும்

Main image courtesy: @sonamkapoor and @kiaraaliaadvani

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
891 views

Shop This Story

Looking for something else