இந்த பண்டிகை கால செல்ஃபீக்களில் அழகாகத் தெரிய வேண்டுமா… வெறுமனே கேமரா கோணம் பற்றியும் ஃபில்டர்கள் பற்றியும் கவலைப்பட்டு பிரயோஜனமில்லை. உங்கள் அழகிய செல்ஃபீயில் மேக்கப்பிற்கு முக்கிய இடம் உண்டு. பண்டிகை கொண்டாட்டங்களின் போது அதிக க்ளோஸ் அப் புகைப்படங்களும் எடுப்பீர்கள்தானே. அதனாலும் மேக்கப் முக்கியம். அதற்கு உதவும் டிப்ஸ் இதோ…

 

01. குறை இல்லாத பேஸ் அவசியம்

01. குறை இல்லாத பேஸ் அவசியம்

க்ளோஸ் அப் புகைப்படங்களில் நீங்கள் அசத்தலாகத் தெரிய வேண்டுமா. உங்கள் பேஸ் குறை இல்லாததாக இருக்க வேண்டும். இதைச் செய்வதற்கு முதலில் சருமத்திற்கு சரியாக மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும். இதனால் சருமம் வெளியேயும் உள்ளேயும் ஜொலிக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கும். கண்ணுக்குத் தெரியும் நுண்ணிய கோடுகளோ, சருமத் துளைகளோ தெரியும் இடத்தில் ப்ரைமர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தின் தோற்றத்தை சமநிலைப்படுத்தும். அதன் பிறகு நல்ல ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும். அதன் மீது டிரான்ஸ்லூசன் பவுடர் பயன்படுத்த வேண்டும். இது அழகிய ஏர் பிரஷ் ஃபினிஷ் கொடுக்கும். ஃபவுண்டேஷன் மூலமாக சரி செய்ய முடியாத கரும் புள்ளிகள் இருக்கிறதா. கன்சீலர் அல்லது கலர் கரெக்ட் செய்யவும். சரியான ஃபவுண்டேஷன் தேர்ந்தெடுக்காவிட்டாலும் புகைப்படம் சொதப்பிவிடும்.

BB picks: Lakme Absolute Undercover Gel Primer, Lakme Absolute 3D Cover Foundation, Lakme 9 to 5 Naturale Finishing Powder

 

02. அழகை அதிகமாக்கும் ஐ மேக்கப் ரகசியம்

02. அழகை அதிகமாக்கும் ஐ மேக்கப் ரகசியம்

செல்ஃபீ மேக்கப் என வரும் போது அற்புதமான ஐ மேக்கப்பிற்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும். கலர் ஐ லைனர் பயன்படுத்துவது மூலம் புதிய பரிமாணம் சேர்க்கலாம். பர்பிள் நிற ஐ லைனர் பயன்படுத்தினால் பிரவுன் நிற கண்கள் பெரிதாகத் தெரியும். தங்க நிற ஐ லைனர் கண்ணில் மினுமினுப்பைக் கொடுக்கும். மஸ்காரா, ஐ-லேஷ் தூக்கலாக இருப்பது கவனத்தை ஈர்க்கும்.

BB picks: Lakme Insta Eye Liner, Lakme Eyeconic Curling Mascara

 

03 லிப்ஸ் அசத்தலாக இருந்தால், ஸ்மைலும் அசத்தலாக இருக்கும்

03 லிப்ஸ் அசத்தலாக இருந்தால், ஸ்மைலும் அசத்தலாக இருக்கும்

முகத்தில் புன்னகை இல்லாமல் என்னதான் அழகு. ஆயிரம் வாட்ஸ் புன்னகையை மலர விட நினைக்கிறீர்களா. போல்ட், க்ரீமியான கலரில் லிப் மேக்கப் செய்யுங்கள். காஃபி கறை பற்றி கவலையா… கூல் டோன் கொண்ட நிறங்களை பயன்படுத்தினால் உங்கள் புன்னகை வெண்மையாக, பிரைட்டாக இருக்கும்.

BB picks: Lakme 9 to 5 Primer + Crème Lip Color - Wine Order CP4

 

04. ஹைலைட் ஹைலைட் ஹைலைட்

04. ஹைலைட் ஹைலைட் ஹைலைட்

ஃபிளாஷ் பயன்படுத்தினால்தான் செல்ஃபீயில் முகம் ஃபோகஸ் ஆகும். ஃபிளாஷ் வெளிச்சத்திலும் ஜொலிஜொலிக்கும் மேக்கப் வேண்டுமென்றால் கண்ணின் உள் ஓரங்களில், மூக்கின் இரு புறங்களில், மூக்கிற்கு கீழே கொஞ்சம் ஹைலைட்டர் பயன்படுத்துங்கள். மேட் ஃபினிஷ் வேண்டாம். பளிச்சிடும் ஐ ஷேடோ தேர்ந்தெடுக்க வேண்டும். கண்களால் பேச இதுவே சிறந்த வழி.

BB picks: Lakme Absolute Spotlight Eyeshadow Palette - Sundowner

 

05. கழுத்தை கவனிக்க மறக்காதீர்கள்

05. கழுத்தை கவனிக்க மறக்காதீர்கள்

முகத்தில் மட்டுமல்ல, கழுத்திலும் மேக்கப் போட வேண்டும். சமமான டோன் வேண்டும் என்றால் கழுத்து வரை ஃபவுண்டேஷன் போட வேண்டும். பிசிறில்லாமல் ஜொலிக்கும் செல்ஃபீ ரகசியம் இதுதான்.

BB picks: Lakme Perfect Radiance Compact

Main image courtesy: @imouniroy