திருமண நாள் தான் உங்கள் வாழ்க்கையிலே மிகவும் விஷேச தினம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மண நாள் அன்று, நாள் முழுவதும், மணமகள் மேக்கப்பை அப்படியே வைத்திருப்பது, அதிலும் குறிப்பாக காலத்தில் மிகவும் கடினமானதாகும். நீங்கள் திருமண நாளுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே சரும நலத்தை காக்கும் பராமரிப்பு முறைகளை கடைப்பிடித்து வந்தாலும் கூட, உங்கள் திருமண நாள் அன்று மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.  

எனினும், நீங்கள் மணமகள் ஆகப்போகிறவர் என்றால் உங்களுக்கான இனிப்பான செய்தியை வழங்குகிறோம். மணமகளின் மேக்கப் சிறந்து விளங்கும் வகையில் ஒவ்வொரு மணமகளும் மண நாளில் தவிர்க்க வேண்டிய மேக்கப் தவறுகளை உங்களுக்காக இங்கே பட்டியலிடுகிறோம்.

 

தவறான ஷேடில் பவுண்டேஷன் தேர்வு

தவறான ஷேடில் பவுண்டேஷன் தேர்வு

உங்கள் அடிப்படை மேக்கப் தான் மொத்த மேக்ஜ்கப்பையும் கட்டி நிறுத்துகிறது. அதன் காரணமாகவே, உங்கள் திருமண நாள அன்று பல மணி நேரம் மேக்கப் நீடித்திருக்க அப்பழுக்கில்லாத மேக்கப் அடிப்படையை அமைத்துக்கொள்வது முக்கியமாகிறது. மேக்கப் கலைவது மற்றும் மோசமான பினிஷ் ஆகிய பாதிப்பை தவிர்க்க, நீங்கள் தேர்வு செய்யும் பவுண்டேஷன் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உங்கள் தாடைப்பகுதியில் பலவித ஷேட்களை முயன்று பார்த்து உங்கள் சரும நிறத்திற்கு மிகவும் பொருத்தமாக தோன்றும் பவுண்டேஷன் ஷேடை தேர்வு செய்யவும்.   

 

பிரைமரை அலட்சியம் செய்வது

பிரைமரை அலட்சியம் செய்வது

உங்கள் மேக்கப் சாதான பெட்டியின் முக்கிய அங்கமாக பிரைமர் விளங்குகிறது. நீங்கள் மணமகளாக போகிறவர் என்றால், உங்கள் சருமத்தை கணமான மேக்கப்பிற்கு, பிரைமர் துணை கொண்டு தயார் செய்வது அவசியமாகும். பிரைமர், உங்கள் மணமகள் மேக்கப்பிற்கான கச்சிதமான அடித்தளமாக அமைவதோடு, மேக்கப் நீடித்திருக்கவும் உதவி செய்கிறது. நீங்கள் லாக்மே அப்சட்லுயூட் பிளர் பர்பெக்ட் மேக்கப் பிரைமர் பயன்படுத்தி பார்க்கலாம் என நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது குறைகளை மறைந்து, அப்பழுக்கில்லாத மேட்டே தோற்றத்தை அளிக்கிறது.  

 

உங்கள் உதடுகளை தயார் செய்யாமல் இருப்பது

உங்கள் உதடுகளை தயார் செய்யாமல் இருப்பது

நாம் முகம் மற்றும் உடலை தினந்தோறும் எக்ஸ்போலியேட் செய்கிறோம். ஆனால், நம்முடைய உதடுகளை தயார் செய்ய மறந்துவிடுகிறோம். மணமகளாக உள்ள நிலையில் உங்கள் உதடு ஏற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். உதடுகள் ஊட்டச்சத்துடன் இருந்தால் தான், மேட்டே லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளை பாதிக்காமல் நாள் முழுவதும் நீடித்திருக்க உதவும்.  

 

உலர் மேக்கப் ஸ்பாஞ்சை பயன்படுத்துவது

உலர் மேக்கப் ஸ்பாஞ்சை பயன்படுத்துவது

அப்பழுக்கில்லாத தோற்றத்திற்கு பிலெண்டிங் முக்கியம். நீங்கள் வைத்திருக்கும் பிலெண்டர், பவுண்டேஷனுக்கு மிகவும் ஏற்றது என்றாலும் அதை சரியாக பயன்படுத்துவது முக்கியம். உலர் ஸ்பாஞ்சை பயன்படுத்தினால் அது பெரும்பாலான பொருட்களை ஈர்த்துக்கொண்டு விடும். இதனால் பவுண்டேஷன் வீணாகும். எனவே உங்கள் ஸ்பாஞ்சை கொஞ்சம் ஈரமாக்கி கொண்டு அதன் பின் பயன்படுத்துவது நல்லது

 

அதிகப்படியான காண்டூரிங் செய்வது

அதிகப்படியான காண்டூரிங் செய்வது

காண்டூரிங் செய்வது உங்கள் முக அம்சங்களை எடுத்துக்காட்டும். ஆனால். அதிகப்படியான காண்டூரிங் செய்தால், உங்கள் உடல் மற்றும் முகத்திற்கு இடையே மிகையான வேறுபாட்டை உண்டாக்கிவிடும். உங்கள் மண நாள் அன்று, கன்ன பகுதி கீழே, கவனம் செலுத்துவதன் மூலம் செதுக்கிய மற்றும் ஆழமான அழகிய தோற்றம் பெறலாம்./