ஹெச் டி Vs ஏர் பிரஷ் இந்த இரண்டு மேக்கப்பில் மணப்பெண்ணுக்கு எது சிறந்தது

Written by Kayal ThanigasalamNov 30, 2023
ஹெச் டி Vs ஏர் பிரஷ் இந்த இரண்டு மேக்கப்பில் மணப்பெண்ணுக்கு எது சிறந்தது

வெகு விரைவில் நீங்கள் மணப்பெண்ணாகப் போகிறீர்கள் என்றால், உங்கள் மனதிற்குள் தற்போது ஆயிரமாயிரம் விஷயங்கள் ஓடும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஒரு புகைப்படக் கலைஞரைத் தேடுவது, திருமண அழைப்பிதழ்களை அனுப்புவது, மேக்கப் கலைஞரை யார் தீர்மானிப்பது மற்றும் வேறு பல்லாயிரம் விஷயங்கள் செய்யுங்கள் போன்ற பல வேலைகள் உங்களுக்கு இருக்கும். உங்கள் திருமண நாளில் உங்களை அழகு தேவதையாகக் காட்டக்கூடிய மேக்கப் கலைஞரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது விஷயமாகும். ஆனால் அந்த கலைஞரை எத்தகைய மேக்கப் நுட்பத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்பது அதைவிட முக்கியமான ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள மணப்பெண்கள் ஏர்பிரஷ் அல்லது எச்டி மேக்கப்பைத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் அது திருமண புகைப்படங்களில் அவர்களை மோசமாக தோற்றமளிக்கச் செய்யாது. இந்த புதிய மேக்கப் நுட்பங்கள் எந்த இடத்தையும் விட்டுவிடாது. கேமராவில் உங்கள் லுக்கை பிரமிப்பூட்டச் செய்து விடும்.

ஆனால் உங்களுக்குத் இந்த நுட்பங்கள் எதைப் பற்றியது என்று தெரியுமா அல்லது இரண்டிற்கும் உள்ள வித்தியாசமாவது தெரியுமா? தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் தொடர்ந்து இக்கட்டுரையை படியுங்கள்.

 

ஹெச் டி மேக்கப் என்றால் என்ன?

யாருக்கு இது பொருத்தமானது?

ஒரு உயர்தரம் வாய்ந்த பொருட்களை இந்த ஹெச் டி மேக்கப்பில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒளியை மங்கச் செய்யும் பூச்சை கொண்டவை, அதாவது ஒளி மீண்டும் பிரதிபலிக்கும் போது அதை மங்கலாக்க உதவுகிறது. சமமான மற்றும் குறைபாடற்ற பயன் கிடைப்பதற்கு கலவைகள் மற்றும் ப்ரஷ்ஷகளைப் ஒரு பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது. பெரும்பாலான பிரபலங்கள் மற்றும் தொழில்முறை மேக்கப் கலைஞர்கள் இந்த நுட்பத்தைத்தான் பின்பற்றுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும், மென்மையாகவும் மற்றும் சீரற்ற அமைப்பு, வடுக்கள், தழும்புகள் மற்றும் துளைகள் உட்பட அனைத்து குறைபாடுகளையும் இந்த ஹெச் டி மேக்கப் மறைக்கச் செய்யும். எச்டி மேக்கப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முழுமையாக சருமத்துடன் சேரும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

 

யாருக்கு இது பொருத்தமானது?

யாருக்கு இது பொருத்தமானது?


 

இந்த மேக்கப் மற்ற செயற்கை அழகு சாதனங்களைவிட இயற்கையானதாக இருப்பதால், இந்த மேக்கப் நுட்பம் அனைத்து சரும வகைகளுக்கும் பொருத்தமானதாகும். நீங்கள்  நாடகத்தன்மையற்ற ஒரு மென்மையான வியத்தகு தோற்றம் பெற விரும்பினீர்களென்றால், அதற்கு இந்த  ஹெச் டி மேக்கப் உங்களுக்கு பொருத்தமானதாகும்.

ஏர்பிரஷ் மேக்கப் என்றால் என்ன?

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ஏர்பிரஷ் என்பது ஏர்கன் பயன்படுத்தி செய்யப்படும் இலகுரக மேக்கப் ஆகும்.  இவை அதிக ஒலிகளை எதுவும் எழுப்புவதில்லை.  இதில் ஒரு சிறந்த வகை திரவ பௌண்டேஷனை இந்த ஏர்கன் அறையில் நிரப்பப்படுகிறது.   அவற்றை முகம் முழுவதும்  தெளிக்கப்படுகிறது.  ஏர்கன்னின் டிரிக்கரை அழுத்தியவுடன், ​​ பௌண்டேஷனின்  மிஸ்ட் சருமம் முழுவதையும்  படர்கிறது.  அதன் பிறகு சருமத்திற்கு ஒரு குறையற்ற நிறைவைத் தருகிறது.  இந்த நுட்பத்தை  ப்ளஷ் செய்வது,  ஐ ஷேடோ, உதட்டின் நிறம் மற்றும் புருவங்களை நிரப்புவதற்கும் கூட பயன்படுத்தப்படுகிறது. ஏர்பிரஷ்  கன்னை ஒரு முழுமையான கட்டுப்பாட்டுடன் சரியாகச் செய்தால்,  இந்த நுட்பம் ஒரு குறைபாடற்ற பூரணத்துவத்தைக் கொடுக்க முடியும். இல்லையெனில் அது பார்ப்பதற்கு கொஞ்சம் கொடுமையாகவும், செயற்கையாகவும் தோற்றமளிக்கும். இது நீண்ட நேரம், கிட்டத்தட்ட 12 முதல் 24 மணி நேரம் வரை அப்படியே நீடித்திருப்பதுதான். இந்த நுட்பத்தின் மிக முக்கிய நன்மைகளில் ஒன்று,

யாருக்கு இது பொருத்தமானது?

எண்ணெய் சருமம் கொண்ட மணப்பெண்களுக்கு இந்த மேக்கப் நுட்பம் பல வியக்கத்தக்க பணிகளைச் செய்கிறது.  ஏனெனில் இவற்றில் சிலிகான் அடிப்படையிலானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.  அவை நீண்ட நேரம் நீடித்திருக்கும்.  வறண்ட சருமத்தைக் கொண்ட மணப்பெண்களுக்கு, இந்த ஏர்பிரஷ் மேக்கப் சீரற்றதாகத் தோன்றலாம்.  இது மிகவும் விலையுயர்ந்த நுட்பமானதால்,  அதற்காக நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

 

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
847 views

Shop This Story

Looking for something else