இப்படி யோசித்துப் பாருங்கள். உங்களது பெஸ்ட் ஃபிரெண்டின் திருமணத்தில் நீங்கள்தான் மணப்பெண் தோழி. சிறந்த செருப்பு, நகைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தாகிவிட்டது. ஆனால் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான் உறைக்கிறது. ஆடைக்குத் தகுந்த மேக்கப்பிற்கு ஏற்பாடு செய்ய மறந்துவிட்டீர்கள். கவலை வேண்டாம். ஆன்லைனிலிருந்து சிறந்த மணமகள் தோழி மேக்கப் ரகசியங்களை உங்களுக்குத் தருகிறோம்.

 

01. கிளாமர் கோல்ட்

01. கிளாமர் கோல்ட்

புகைப்படம், நன்றி: @ Roma

நடிகை —---- இந்த தோற்றத்தில் அசத்தலாக தோற்றமளித்தார். ஷிம்மர் ஷாம்பெய்ன் ஐ ஷேடோ, ஸ்மோக்கி ஐலைனர் இருந்தால் கிளாமரான தோற்றம் கிடைக்காமலா போகும். கண் மை வைத்தால் இன்னும் தோற்றம் எடுப்பாகத் தெரியும். உங்கள் லுக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். முகத்தில் பிரான்ஸ் பயன்படுத்தலாம். நியூட் லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் இந்தத் தோற்றம் முழுமை பெறும். 

பி.பி பிக்ஸ்: Lakmé Eyeconic Insta Cool Kajal

 

02. பிரைட் ப்ளூ

02. பிரைட் ப்ளூ

புகைப்படம், நன்றி: @malvikasitlaniofficial

எல்லாவித காக்டெயில் பார்ட்டிக்கும் பொருத்தமானது இந்த ரோஸ் கோல்ட் மற்றும் பிரவுன் ஸ்மோக்கி கண்கள் தோற்றம். இதன் ஐஷேடோ நுணுக்கமான மாற்றத்தை ஏற்படுத்தும். ப்ளூ விங் ஐலைனர் துடிப்பான தோற்றம் கொடுக்கும். குறைகள் இல்லாத பேஸ், கச்சிதமாக ப்ளென்ட் செய்த ஹைலைட்டரும் சேரும் போது பார்த்தால் யாரும் மயங்கத்தான் செய்வார்கள். நியூட் அல்லது பிங்க் லிப்ஸ்டிக்குடன் நிறைவு செய்யுங்கள். 

பி.பி பிக்ஸ்: Lakmé Insta-Liner- Blue

 

03. அசத்தல் சிவப்பு

03. அசத்தல் சிவப்பு

புகைப்படம், நன்றி: @patrickta

இப்போதெல்லாம் ஐஷேடோ அல்லது ஐலைனருக்கு கலர் சேர்ப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் வாட்டர்லைனை கலரில் ட்ரை செய்திருக்கிறீர்களா… முதலில் குறைகள் இல்லாத பேஸ் அப்ளை செய்ய வேண்டும். சீக்போன் பகுதியில் வளைவாக தெரியும்படி செய்ய வேண்டும். அந்தக் கலரின் மீது ப்ரான்ஸர் பயன்படுத்திய பிறகு கண் இமைகளில் பிரஷ் செய்ய வேண்டும். கண்களுக்கு லேசான பிரவுன் ஷேடோ போக விங் ஐலைனர் பயன்படுத்தலாம். விங் அதிரடியாக செய்யலாம். பிறகு மேடான பகுதிகளில் லிக்விட் ஹைலைட்டர் பயன்படுத்துங்கள். நியூட் க்ளாஸ் பயன்படுத்தி நிறைவு செய்யுங்கள். 

பி.பி பிக்ஸ்: Lakmé Absolute Liquid Highlighter

 

04. ரைன்ஸ்டோன் தேவதை

04. ரைன்ஸ்டோன் தேவதை

புகைப்படம், நன்றி: @ByAbbie |Skincare | Beauty | Fashion | Home Decor

யூஃபோரியாதான் உங்கள் விருப்பம் என்றால் அதை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன. அதை ஈஸியாகவும் க்விக்காகவும் செய்ய முடியும் என்பதோடு அது உங்களை தேவதை போல ஜொலிக்க வைக்கும். முதலில் கலர் ஐஷேடோ அப்ளை செய்யுங்கள். அதன் பிறகு அடர்த்தியான விங் கொணட ஐலைனர் அப்ளை செய்யுங்கள். மேலே, கீழே உள்ள லேஷ்களில் மஸ்காரா அப்ளை செய்யுங்கள். அழகிய தேவதை தோற்றம் தயார். அதன் பிறகு ரைன்ஸ்டோன் எடுத்து அதை அரை வட்ட வடிவில் க்ரீஸ் லைனுக்கு மேலே அப்ளை செய்யுங்கள். பிங் லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு நியூட் க்ளாஸ் ப்ளென்டிங் பயன்படுத்துங்கள். இதோ, 90களில் தேவதை தோற்றம் தயார்.

பி.பி பிக்ஸ்: Lakmé Eyeconic Volume Mascara

 

05. க்ளாசிக் அழகு

05. க்ளாசிக் அழகு

புகைப்படம், நன்றி: @StayGlam

மேக்கப்பின் பெரிய ரசிகரோகவோ புதிதாக எக்ஸ்பிரிமன்ட் செய்வதில் பிரியமோ இல்லாவிட்டால் இதுதான் உங்கள் சாய்ஸ். முதலில் குறைகள் அல்ல பேஸ் தயார் செய்யுங்கள். நியூட் ஐ ஷேடோவிற்குப் பிறகு அடர்த்தியான கிளாஸிக் விங் லைனர் வரையுங்கள். சிவப்பு லிப்ஸ்டிக் அப்ளை செய்யுங்கள். மஸ்காரா பயன்படுத்துவது உங்கள் விருப்பம். ஆனால் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். சீக்போன் பகுதியில், மூக்கு, முன்நெற்றி பகுதிகளில் லிக்விட் ஹைலைட்டர் பயன்படுத்துங்கள். இதோ, எல்லாவித ஆடைக்கும் பொருந்தும் மேக்கப் தயார். 

பி.பி பிக்ஸ்: Lakmé Absolute Precision Lip Paint- Statement Red