கடந்த ஓராண்டாக்கும் மேலாக, நமது பண்டிகைக் கொண்டாட்டங்களில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன், நெருக்கமான நிகழ்ச்சிகள் முதல் பல கொண்டாங்களிலிருந்து விலகியிருக்கும்படி நாம் கட்டாயப்படுத்தப்பட்டோம். ஆனால் கவர்ச்சியை விட்டுவிட்டு நுட்பமான மேக்கப்பை தேர்வு செய்வதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உள்ளதா என்றால் முற்றிலும் இல்லை! உண்மையில், 2021 அனைத்து நிகழ்வுகள் மற்றும் சரும வகைகளுக்கும் பொருத்தமான மேக்கப் டிரெண்ட்கள் என்று வரும்போது, இந்த 2021ம் வருடம் நம்பமுடியாத அளவிற்கு தாராளமாக இருந்தது என்று சொல்லும் அளவுக்கு நாம் செல்லப் போகிறோம்..

உங்கள் லுக்கை எந்தளவிலும் குறையாத அளவிற்கு தோற்றமளிக்க உங்களுக்கு உதவ, நோரா ஃபதேஹி, ஈஷா குப்தா, மிருணால் தாக்கூர் போன்ற பாலிவுட் பிரபலங்களின் மேக்கப் கலைஞரான பிரபல ரேஷ்மா மெர்ச்சண்டை நாங்கள் அணுகினோம். பண்டிகை காலத்திற்கேற்ற மேக்கப் லுக்கிற்கான சில சிறந்த குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அனைத்து புதிய தகவல்களுக்கும் உள்ளேயும் படிக்கவும், பெண்களே! குறிப்புகளை எடுக்க மறக்காதீர்கள்,

 

01. எந்தக் குறையுமற்ற பேஸ்

01. எந்தக் குறையுமற்ற பேஸ்

குறைபாடற்ற அடித்தளத்தைப் பெற, உங்கள் சருமம் நன்கு நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சுத்தம்,வலிமை,ஈரப்பதமூட்டல்(CTM) என்ற ஒரு அடிப்படை பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுங்கள், உங்கள் சருமம் எந்தக் குறைபாடுமில்லாமல் இருக்க சன்ஸ்கிரீனைத் தடவ மறக்காதீர்கள். உங்கள் அடிப்படையான மேக்கப் செய்து கொள்ளும் போது, ​​​​அதிக தயாரிப்புகளை முகத்தில் தடவிக் கொள்வதைத் தவிர்க்கவும். முதலில் ஃபவுண்டேஷனையும், கன்சீலரையும் மெல்லிய லேயராக தடவிக் கொள்ளுங்கள் தேவைப்பட்டால் மேலும் கொஞ்சம் தடவிக்கலாம்.

 

02. உங்கள் கண்கள் பேசட்டும்

02. உங்கள் கண்கள் பேசட்டும்

முகக் கவச கூடுதல் என்று கட்டாயத்து நாம் தள்ளப்ப்பட்டுள்ளதால், கண்களால் பேச வேண்டிய நிர்பந்தமாகி விட்டது. ப்ளாக் ஸ்மோக்கி ஐ-க்கு பதிலாக பர்ன்ட் பிங்க் அல்லது ரிச் ரெட் ஸ்மோக்கி ஐ-க்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். இவற்றுடன அடர்ந்த பழுப்பு நிற ஐலைனரைக் சேர்த்துக் கொண்டு, இமைகளுக்குக் கீழ் நன்கு பரப்பி விடுங்கள். உங்கள் கண் மேக்கப் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 

03. உதடுகளை கவர்ச்சியாக்குங்கள்

03. உதடுகளை கவர்ச்சியாக்குங்கள்

லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதற்கு முன் உங்கள் உதடுகளுக்கு லிப் பாம்மை தடவி தயார் செய்ய மறக்காதீர்கள். இது உங்கள் உதடுகளை ஹைட்ரேட் செய்து, லிப்ஸ்டிக்கை இழைந்தோடச் செய்கிறது. உதடு நிறத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கவர்ச்சியான மற்றும் அதிரடியான நிறம் அல்லது அல்லது பழுப்பும், வெள்ளையும் கலந்து ஒரு வெளிர் நிறமுள்ள (நியூட் லிப்ஸ்டிக்) மென்மையான லிப்ஸ்டிக், இவற்றில் நீங்கள் விரும்பியதை போட்டுக் கொள்ளலாம்.

 

04. ஹைலைட்டர்கள், FTW!

04. ஹைலைட்டர்கள், FTW!

மிகவும் பளபளப்பான ஹைலைட்டர்களினால் நீங்கள் வெட்கப்பட வேண்டாம். திரவ ஹைலைட்டர்கள் அல்லது பவுடர் ஹைலைட்டர்கள் ஆகிய க்ரீம்-ஸ்டிக் ஃபார்முலாக்களில் உங்களுக்கு, விருப்பமானவற்றிலிருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். புருவ எலும்புகள், கன்னத்து எலும்புகள், மூக்கின் பாலம் மற்றும் மேல் உதட்டின் மேல் விளிம்பு போன்ற உங்கள் முகத்தின் பகுதிகளில் உங்களுக்கு பிடித்தமான ஹைலைட்டரைப் பயன்படுத்துங்கள். தங்க நிற ஹைலைட்டர்கள் மாலை நேர பொன்னிறத்திற்கும் சிறந்ததாகவும், வெள்ளி நிற ஹைலைட்டர்கள் பளபளப்பான சரும நிறத்திற்கு அழகாகவும், ரோஸ்-கோல்டு ஹைலைட்டர்கள் கோதுமை நிறத்திற்கு அற்புதமாகவும் இருக்கும்

 

05. ப்ளஷ் இட் அவுட்

05. ப்ளஷ் இட் அவுட்

மேட் ப்ளஷ்கள் எப்பொழுதும் ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், இந்த பண்டிகைக் காலத்தில் அனைவரையும் பிரமிக்க வைக்கக் கூடிய, இயற்கையான ஆச்சரியமான ப்ளஷ் நிறங்களை பயன்படுத்திப் பார்க்கவும். திட்டுத்திட்டாக இல்லாமல் இருப்பதற்கு ப்ளஷ் நிறத்தை நன்றாக கலக்கவும், அதனால் அது ஒட்டுண்ணியாக இருக்காது. சரியான அளவில் ப்ளஷை எடுத்து, சரியான இடத்தில் பூசும் போது உங்கள் கன்னத்து எலும்புகளை உண்மையில் செம்மையாக இருக்கும்.

 

06. கவனிக்க வேண்டிய சாதகமான உதவிக்குறிப்புகள்

06. கவனிக்க வேண்டிய சாதகமான உதவிக்குறிப்புகள்

 

ம்ம்... எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு இன்னும் அதிகம் தேவை என்று.  எனவே ரேஷ்மா மெர்ச்சன்ட் பகிர்ந்து கொண்ட சில விரைவான போனஸ் மேக்கப் டிப்ஸ்கள்:

விளிம்பு : விளிம்புகளில் பூசும் போது, மெலிதாகத் தொடங்கி பின் மெதுவாக அதிகப்படுத்தவும். இது உங்களுக்கு மிகவும் இயற்கையான தோற்றத்தைக் கொடுக்கும்.

புருவங்கள் : புருவங்களைப் பொறுத்தவரை, அதை வரைவதற்கு முன், ப்ரோ பவுடர் அல்லது ஐப்ரோ பென்சிலால் அனைத்து இடைவெளிகளையும் நிரப்புவதிலிருந்து  எப்போதும் தொடங்கவும்..

லிப்-லைனர் : லைட் லிப் கலர் அணிந்திருக்கிறீர்களா? லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உங்கள் உதட்டில் நீடித்திருக்க , உங்கள் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதற்கு முன், உங்கள் உதடுகளை லிப் லைனரால் நிரப்பவும்.

Images courtesy: @Reshma Merchant