பண்டிகைகளின் காலம் இதோ வந்துவிட்டது. முகத்தை அழகாக காட்டுவதற்கான தருணம் இதுதானே. கச்சிதமான மேக்கப் வேண்டும், ஆனால் எப்படி அதைச் செய்வது என தெரியவில்லை என்கிறீர்களா… அதற்குத்தான் இந்தக் கட்டுரை உதவப் போகிறது. இந்தப் பண்டிகை காலத்தில் மின்னும் பேரழகை உருவாக்கும் மேக்கப் டிப்ஸ் இதோ… மின்னும் பேரழகு யாருக்குத்தான் வேண்டாம். லூமினஸ் பேஸ் பயன்படுத்துவது குறைவான மேக்கப்பில் நிறைவான அழகைக் கொடுக்கும். இது இயற்கையான பொலிவு போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதோ அதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி…

 

ஸ்பெட் 1: முதலில் ஃபேசியல் சீரம்

ஸ்பெட் 1: முதலில் ஃபேசியல் சீரம்

மின்னும் பேரழகைக் காட்டும் மேக்கப் தேவை என்றால் சருமத்திற்கு ஊட்டச் சத்தும் நீர்ச் சத்தும் கொடுக்க வேண்டும். முன்கூட்டியே இதை உறுதி செய்ய வேண்டும். வழக்கமாக செய்யும் க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்சுரைஸிங் ஆகியவற்றை முதலில் செய்து முடித்துவிட வேண்டும். அதன் பிறகு Lakmé 9 To 5 Vitamin C+ Facial Serum. போன்ற விட்டமின் சி சீரம் பயன்படுத்துவது சிறந்தது. இது லைட் வெயிட் என்பதோடு சீக்கிரமாக சருமத்தால் உறிஞ்சப்படும். நீர்ச் சத்தை தக்க வைக்கும். சருமத்தின் மேல் பரப்பை மென்மையாக வைத்திருக்கும். ஸ்கின் பிரைட்டாகவும் தெரியும். இதனால் நீண்ட நேரம் சருமம் அழகாக இருக்கும்…. நீர்ச் சத்தும் இருக்கும். சில சொட்டு சீரம் எடுத்துக்கொண்டு சருமத்தில் மென்மையாக அப்ளை செய்ய வேண்டும். மெல்ல மெல்ல சீரம் சருமத்தில் ஊடுருவட்டும். அதன் பிறகு அடுத்த ஸ்டெப்.

 

ஸ்டெப் 2: வெளிச்சமூட்டும் ப்ரைமர்

ஸ்டெப் 2: வெளிச்சமூட்டும் ப்ரைமர்

பெயரில் உள்ளது போலவே முகத்தை பளிச்சென தோன்ற வைக்கும். முகத்தில் உள்ள சரும துளைகள் ஏற்படுத்தும் தோற்ற மயக்கங்களை மறைக்கக்கூடிய பிரைமர் இது. சருமத்தின் தன்மையும் ஸ்மூத்தாக இருக்கும். இதனால் ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் போது வசதியாக இருக்கும். அதனால் Lakmé Undercover Gel Primer. பயன்படுத்த தாமதிக்க வேண்டாம்.இதன் ஸ்மூத்தான ஜெல் சருமத்தில் வழுக்கிச் செல்லும். இதிலுள்ள விட்டமின் இ சருமத்திற்கு ஊட்டச் சத்து தரும். இது கூடுதல் பொலிவைத் தரும். விரல் நுனியில் நிற்கும் அளவுக்கு குறைவாக எடுத்து முகம் முழுக்க பரப்பி அப்ளை செய்ய வேண்டும்.

 

ஸ்டெப் 3: பிரைட்டாக மாற்றம் கன்சீலர் வித் டீவ்யி ஃபவுண்டேஷன்

ஸ்டெப் 3: பிரைட்டாக மாற்றம் கன்சீலர் வித் டீவ்யி ஃபவுண்டேஷன்

அடுத்த ஸ்டெப் நீர்ச் சத்து கொடுப்பதுதான். Lakmé Absolute White Intense Liquid Concealer ஒரு நல்ல சாய்ஸ். இதில் எஸ்.பி.எஃப் 25 இருப்பதால் பிரைட்டான தோற்றம் கிடைக்கும். கரும் புள்ளிகள் மறையும். கருப்பு வளையங்கள் தெரியாது. கண்களுக்குக் கீழே மெல்லிய அளவில் அப்ளை செய்ய வேண்டும். மோதிர விரலால் அல்லது பிரஷ்ஷால் நன்றாக கலக்கி தயார் செய்ய வேண்டும். இதோ, பளபளக்கும் தோற்றத்திற்கு மிக அருகில் வந்துவிட்டீர்கள். ஃபவுண்டேஷன் அப்ளை செய்ய உங்கள் சருமம் இப்போது தயாராகிவிட்டது. Lakmé Absolute Argan Oil Serum Foundation. போன்ற டீவ்யி ஃபார்முலாவை பயன்படுத்துவது அவசியம். எளிதாக கலந்து மின்னும் பேரழகைத் தரக்கூடியது இது. அர்கன் ஆயிலின் நற்பண்புகள் கூடுதல் ப்ளஸ். மோதிர விரலில் எடுத்து முகம் முழுக்க அப்ளை செய்ய வேண்டும். சரிசமமாக ப்ளெண்ட் செய்ய வேண்டும். அதற்கு பியூட்டி பிளெண்டர் பயன்படுத்தலாம்.

 

ஸ்டெப் 4: ரோஸ் நிறத்தில் மினுக்கும் கன்னம்

ஸ்டெப் 4: ரோஸ் நிறத்தில் மினுக்கும் கன்னம்

முகம் ரோஸ் நிறத்தில் மின்னுவதற்கு உதவக்கூடியது இந்த ஸ்டெப். Lakmé Absolute Illuminating Shimmer Brick அதற்கு நல்ல சாய்ஸ். நான்கு அற்புதமான ஷேட்களில் இது கிடைக்கிறது. பட்டுப் போல மின்னும் அழகைத் தரக்கூடியது இது. வட்ட வடிவ பிரஷ் எடுத்துக்கொண்டு கன்னம் எங்கும் அப்ளை செய்ய வேண்டும். மேலும் கீழுமாக இதை அப்ளை செய்ய வேண்டும். இதோ கண்ணாடி முன்னால் நிற்க நீங்கள் தயாரா… ஸ்மூத்தான, பொலிவான அழகிற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம். பண்டிகை காலத்திற்கான அழகு இதோ தயார். இதோடு ப்ரான்ஸர் அல்லது ஹைலைட்டர் பயன்படுத்தினால் இன்னும் சூப்பராக இருக்கும்.