ஸ்மோக்கி கண்கள் மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்து, தற்போதைய புதிய டிரெண்டான மெட்டாலிக் கண்களுக்கு வழியை விட்டு விலகி நிற்கின்றன! உங்கள் ஐ மேக்கப்பைப் பற்றி நீங்கள் கருத்து சொல்ல விரும்புகிறீர்களா? அப்படியானால், பெண்ணே மெட்டாலிக்கை தேர்ந்தெடு ! நீங்கள் ஒரு விருந்து, திருவிழா அல்லது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் கவர்ச்சியாக இருக்க விரும்பினால், இந்த மெட்டாலிக் கண்கள் தோற்றம் அனைத்தும் புத்திசாலித்தனமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இருப்பினும், மெட்டாலிக் என்று வரும்போது, அசிங்கமான மற்றும் கவர்ச்சிக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது.
உங்கள் கண் ஒப்பனையை மேம்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும் இருப்பினும், உங்கள் ஐ மேக்கப்பை மேம்படுத்துவதற்கும் மிகச் சிறந்த வழி, அந்த மேக்கப்பை போட்டுக் கொள்வதற்கு கொஞ்சம் பயிற்சிகள் தேவை. இந்த இடத்தில்தான் நாங்கள் அடியெடுத்து உள்ளே நுழைகிறோம். உங்களுக்காக 5 எளிய வழிமுறையை நாங்கள் வழங்கியுள்ளோம், இந்த வழிகாட்டி உங்கள் செயல்முறையை தடையில்லாமல் செய்து, வியத்தகு பயன்களை உங்களுக்கு வழங்கும்.

ஸ்டெப் 1: ஐ லிட்களை முன்னேற்பாடு செய்து கொண்டு, புருவங்களைத் ப்ரஷ் செய்யவும்
உங்கள் மெட்டாலிக் ஐ மேக்கப் மாலை முழுவதும் அப்படியே இருக்க விரும்பினால், அதைப் அப்படியே பராமரிப்பது ப்ரைமர் தான். உங்கள் விரல்களில் ஒரு துளிப் ப்ரைமரை எடுத்து உங்கள் இமைகளின் மீது தடவவும். ப்ரைமரைத் தடவாமல் தவிர்த்து விட்டீர்களென்றால், குறிப்பாக எண்ணெய்ப் பசை சருமம் இருப்பவர்களுக்கு பலவித பிரச்சனையை கொண்டு வந்து சேர்த்து விடும். ஐ ஷேடோவை உங்கள் ஐலிட்களுக்கு மேல் நேரடியாக தடவிக் கொள்வதனால் மட்டும் உங்கள் ஐ மேக்கப்பை அதிக நேரம் செய்யாது.
உங்கள் இமைகளைத் ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டவுடன், உங்கள் புருவங்களை சுத்தப்படுத்துங்கள். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஸ்பூலி ப்ரஷ் எடுத்து அவற்றால் உங்கள் புருவங்களை நன்றாக ப்ரஷ் செய்யவும். சுத்தமான ஜெல்லினால் நிரப்பி அவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் இதோ நீங்கள் தயாராகி விட்டீர்கள்!

ஸ்டெப் 2: அதை பயன்படுத்த வேண்டிய நேரம்
மெட்டாலிக் மேக்கப் என்பது ஒரு ஆபத்தான செய்முறை என்றாலும், அதை எந்தவித சிரமுமின்றி செய்து முற்றிலும் பந்து விளையாட்டு போன்றதாகும். உங்கள் கண் இமைகளில் மட்டும் மெட்டாலிக் மேக்கப் வேண்டும், கன்னங்களில் அதிகம் தேவை இல்லை என்று நினைத்தால், அவை கன்னங்களில் மீது விழாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு உங்கள் விரல்களை பயன்படுத்துவதுத்தான் சிறந்த வழி. அப்போது தான் கன்னத்தின் மீது கொஞ்சம் குறைவாக விழும். மேலும், உங்கள் ஐலிட்டின் மீது மோதிர விரலால் மெதுவாக இந்த ஷேடோவை அழுத்தவும். வழக்கமான மற்ற நாட்களில் செய்வது போல் ஷோடோவைத் துடைப்பதைத் தவிர்க்கவும். மென்மையாக பூசுங்கள்!

ஸ்டெப் 3: இறுதியாக, ஒரு சுத்தமான ப்ரஷ்ஷை பயன்படுத்தவும்.
ஒரு சுத்தமான ப்ரஷ்ஷின் உதவியுடன், விளிம்புகளை மென்மையாக்கி, புருவங்களின் எல்லையைத் தாண்டி ஷோடோக்களை கலக்கவும். ஐ ஷேடோவின் விளிம்புகளை சுத்தமாக கலக்க, அடர்த்தியான மற்றும் மேல் பகுதி வட்டமாக இருக்கும் ப்ரஷ்ஷே மிகவும் சிறந்தது. பின்னர் ஒரு பிளாட் டாப் பிரஷ்ஷினால் கொஞ்சம் கன்சீலரில் ஒற்றி பயன்படுத்தி விளிம்புகளை சுத்தம் செய்யலாம்.

ஸ்டெப் 4: டெஃபனிஷனை சேர்க்கவும்
மெட்டாலிக் கண்களால் மட்டுமே தனித்து ஜொலிக்க முடியாது. அதனால், நல்ல லுக்கை பெறுவதற்கு டெஃபனிஷனைச் சேர்ப்பது முக்கியமானதாகும். கண்ணிமைகளுக்கும், கண்களுக்கு இடையில் கருப்பு ஒரு காஜல் பென்சிலால் ஒரு மெல்லியக் கோட்டை முதலில் வரைந்து கொள்ள வேண்டும். அடுத்து, அடர்த்தியாக கோடுகளை வரைய வேண்டும். இப்போது, அதே காஜல்அல்லது ஐலைனரைப் பயன்படுத்தி உங்கள் மேல் இமைக் கோட்டிற்கு அருகில் மெல்லிய கோட்டைப் வரையவும். அவ்வாறு செய்யும் உங்கள் மெட்டாலிக் மேக்கப் அழகிற்கு ஒரு விளக்கத்தை கூறுவதுடன், ஒரு உச்சநிலைக்கே அது உங்களை எடுத்துச் செல்லும்.

ஸ்டெப் 5: மேலும் மேலும், கலக்கவும் கலக்கவும்!
ஒரு தட்டையான ப்ரஷ்ஷை எடுத்துக் கொண்டு, அதை கொஞ்சம் ஈரமாக்கி, உங்கள் கீழ் புருவமயிர் கோட்டில் ஷோடோவை அழுத்தவும். உங்கள் கண்களின் உள்பக்க மூலையின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக சேர்க்கவும். இந்த சிறிய பகுதிக்கு உங்களுக்கு அதிகம் தேவையில்லை என்பதால் மிகக் குறைவான நிறத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், பின்னர் எப்போது வேண்டுமானாலும் மேலும் சேர்த்துக் கொள்ளலாம். மஸ்காராவுடன் மேக்கப்பை நிறுத்தவும்! சீரற்ற விளிம்புகள் மற்றும் ஏதேனும் கலவை கன்னங்களின் மீது பட்டிருந்தால் அவற்றைச் சுத்தம் செய்ய, ஒரு காட்டன் துணியால் அவற்றை துடைத்து எடுக்கவும்.
கடைசியாக, இமைகளின் மேல் மற்றும் கீழ் பகுதி இரண்டிலும் மஸ்காராவைக் கொஞ்சம் தாராளமாக சேர்க்கவும். அவ்வாறு செய்யும் போது உங்களுடைய தோற்றத்திற்கு கூடுதல் அழகை சேர்ரப்பதுடன், நேர்த்தி மற்றும் தனிப்பாணியையும் முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும்
பட உதவி : Pinterest
Written by Kayal Thanigasalam on Nov 16, 2021
Author at BeBeautiful.