திஷா பதானி என்றவுடன் நினைவுக்கு வருவது அவரின் பொலிவான சருமம்தான். அதனால் அவரின் ஸ்கின்கேர் வழக்கங்கள் என்ன என்று ஆராய்ந்தோம். இதோ, அதில் கிடைத்த ரகசியங்கள்.
- 1) சிம்பிளாக, தொடர்ச்சியாக செய்ய வேண்டும்
- 2) பீல் ஆஃப்
- 3) தண்ணீர்தான் தீர்வு
- 4) மேக்கப்பை கழுவுங்கள், கவலைகளை கழுவுங்கள்
- 5) சருமம் உங்கள் உடலின் கண்ணாடி
1) சிம்பிளாக, தொடர்ச்சியாக செய்ய வேண்டும்

புகைப்படம், நன்றி: @dishapatani
ஈஸியான க்ளென்ஸிங், டோனிங், மாய்ஸ்சுரைஸிங் ஆகியவைதான் திஷா பதானியின் அழகு ரகசியம். இதை அவர் தினந்தோறும் தவறாமல் பின்பற்றுகிறார். அழகுக் கலை என வரும் போது தொடர்ச்சி முக்கியம். லேசான மாய்சுரைஸர் அல்லது ஆயில் மூலம் சருமத்தின் பொலிவை அதிகமாக்குவது திஷா பதானியின் வழக்கம்.
2) பீல் ஆஃப்

புகைப்படம், நன்றி: @dishapatani
புகைப்படம், நன்றி: @dishapatani சிக்கலான ஸ்கின் கேர் வழக்கங்களிலிருந்து திஷா பதானி விலகியிருக்கிறார் என்றாலும் வார இறுதிகளில் பீல் ஆஃப் செய்ய அவர் மறப்பதில்லை. இது சரும துளை அடைப்புகளை நீக்கி, நொடியில் அழகிய சருமம் கொடுக்கும்.
3) தண்ணீர்தான் தீர்வு

புகைப்படம், நன்றி: @dishapatani
இது ஒன்றும் நமக்குத் தெரியாதது அல்ல. எனினும் திஷா பதானியின் அழகிய தோற்றத்தைப் பார்க்கும் போது நமக்கும் ஒரு குடம் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கும். சருமத்திற்கு நீர்ச் சத்து கொடுப்பதற்காக நிறைய தண்ணீர் குடிக்கிறார் திஷா. அது மட்டுமல்ல, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கெட்ட டாக்சின்களை எல்லாம் வியர்வையாக வெளியேற்றிவிடுகிறார். இப்போது தெரிகிறதா திஷா பதானியின் பொலிவின் ரகசியம்.
4) மேக்கப்பை கழுவுங்கள், கவலைகளை கழுவுங்கள்

புகைப்படம், நன்றி: @dishapatani
பெரும்பாலான நாட்களில் திஷா பதானி மேக்கப் அப்ளை செய்வதே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா. அது மட்டுமல்ல, நிகழ்வுகளுக்கு மேக்கப் போட்டு சென்றால்கூட, நிகழ்வு முடிந்தவுடன் அதைக் கழுவிடுகிறார். மேக்கப் நீக்குவதால் சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கும். க்ளியரான சருமம் கிடைக்கும். அது போக க்ளீன் செய்த பிறகு மாய்ஸ்சுரைஸ் செய்வதில் அவர் தவறுவதில்லை.
5) சருமம் உங்கள் உடலின் கண்ணாடி

உடம்பிற்கு என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடியாகவும் இருப்பதுதான் சருமம். அதனால் நல்ல ஆரோக்கியமான உணவும் பழக்கங்களும் தேவை என்கிறார் திஷா. எல்லா நாட்களிலும் ப்ரோட்டீன், விட்டமின் அதிகம் கொண்ட உணவுகள் எடுத்துக்கொள்கிறார்கள். பழங்கள், நட்ஸ்கள், பச்சைக் காய்கறிகளை அவர் மிஸ் செய்வதில்லை. நிறைவாக ஒன்று. சில நாட்களில் பிம்பிள், டல் சருமம் தெரிவது இயல்பு. அதனால் கவலை கொள்வதுதான் பிரச்சனை. இது எல்லா பெண்களுக்குமே பொதுவான ஒரு பிரச்சனை. அதனால் லேடீஸ் கேங் மீட்டிங்கை ஸ்கின் கேர் காரணமாக கைவிட வேண்டாம். சொல்வது சரிதானே.
Written by Kayal Thanigasalam on Feb 10, 2022
Author at BeBeautiful.